Sonntag, 25. Mai 2014


நாளைய பொழுதை
 
 

ஒளிந்து நின்று பார்க்கும் மாலை கதிரவனும்

செங்கோடிட்டு பரவிய மேக திடல்களும்

களைத்து கண் தூங்க பறக்கும் பறவைகளும்

நாளைய பொழுதை எண்ணி கலங்கும்

மானிடர் வாழ்வின்

தினம் ஒரு மாறலை எடுத்துக்காட்டும்

சித்திரமாய் வானம்  காட்சி அளிக்குது

கவி மீனா

நந்தியாவட்டை பூ
 

„காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப்
பேசுவிழி நோய்கடமைப் பேர்ப்பதன்றி-யோசைதரு
தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்று
நந்தியா வட்டப் பூ நன்று“

நந்தியாவட்டை பூ நாகதோஸ்ம், ரோகம் என்பன போக்க வல்லதாம்,  இப்பூவில் அடுக்கு நந்தியாவட்டை ஒற்றை இதழ் நந்தியாவட்டை என இரண்டு வகை உண்டு.

இப்பூவை எடுத்து கண்ணை மூடிக்கொண்டு கண்ணுக்கு ஒத்தடம் கொடுக்க கண்ணில் உள்ள எரிச்சல்,  சூடு போன்ற நோய்கள் குறையும், கண்ணில் ஏற்படும் கக்கட்டி எனப்படும் கட்டிகள் உண்டாகும் நோய்க்கு முலைபாலில் தோய்த்த நந்தியாவட்டை பூவாலே ஒத்தடம் கொடுப்பது நம்ம  ஊரிலே வழக்கத்திலிருந்து வந்தது, இந்த வைத்திய முறையாலே சூட்டிலே உண்டாகும் இந்த நோய் குணமாகிறது.

இந்த தாவரம் ஒரு மூலிகை இனத்தை சேர்ந்தது, இதன் பூ முதல் வோர்வரை இயற்க்கை மருத்துவத்தில் பிரயோசனபடுகிறது, இதன் வேரை எடுத்து கசாயம் செய்து குடிக்க வயிற்று போக்கு குறையும் என்றும், வேரை பச்சையாகவே சப்பி துப்ப பல் வலி நீங்கும் எனவும் இயற்கை மருத்துவம் கூறுகிறது.

இந்த மலர் வாசம் மிகுந்தது, பூசைக்கு உகந்தது, அம்மனுக்கு மிகவும் பிடித்த மலராகும், இந்த தாவரத்தை கோவில் நந்தவனங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் நட்டுவைப்பார்கள், நந்தியவட்டை தாவரங்களை வீட்டில் வளர்பதால் அந்த தாவரம் பூக்களை பூக்கும் காலத்தில் வாசனை கிடைப்பது மட்டுமின்றி, நாகதோசங்களும் நீங்கபெறும் என்பது இந்துமதத்தில் கூறபடுகிறது.

நந்தியாவட்டை மலர்களினால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வருவோமாகில் எமது பொருள் பற்றாக்குறையை நீக்கி செல்வத்தை கொடுக்கும் என நம்பபடுகிறது, நமது வீடுகளில் வளர்க்கவேண்டிய செடிகளில் நந்தியாவட்டை மிகவும் அவசியமாக கருதப்படுகிறது, இத்தாவரம் ஐரோபாவிலும் வாங்ககூடியதாக உள்ளது இதனால் நாமும் இத்தாவரத்தை எமது வீட்டு தோட்டதிலோ, பல்கணிகளிலோ நடக்குடியதாக இருப்பது எமக்கு ஒரு அரிய வாய்பாக உள்ளது.

நந்தியவட்டை மலர்களை  பாரி ஜாதமலர் என்றும் சொல்வார்கள், இந்த செடி கற்பகவிருட்சங்களில் ஒன்றாகவும், அம்மனுக்கு மிகவும் பிடித்த மலராகவும் உள்ளது, நாமும் இந்த செடிகளை நம் வீடுகளில் நட்டு இதன் பலனை அனுபவிப்பதே சிறப்பாகும்.

கவி மீனா

மனோரஞ்சித பூ
 

மனோரஞ்சித பூ செடி என்று ஒரு பூ செடி ஊரிலை எங்க வீட்டிலை  முற்றத்திலே அழகாக செழித்து வளர்ந்து பூத்துகொண்டே இருந்தது.

அந்த பூ பச்சை நிறமாகதான்பூத்திருக்கும், இலைகளோடு  இலைபோலே பூ தெரியாமல் இருக்கும், ஆனால் அதன் வாசத்தில் பூ  பூத்திருக்கு எண்டு நான் தேடி கண்டு பிடித்துவிடுவேன்.

அந்த பூவை நாம் மணக்கும் போது மனதில் எதை நினைக்கிறோமோ அந்த வாசனையை அந்த பூ தரும் என்பதால்தான் அதை மனோரஞ்சித மலர் என்று சொல்வார்கள், அதனை செண்பகமலர் என்றும் கூறுவார்கள்.

இது ஒரு கொடிபோலேதான் ஆனால்  தண்டுகள் நல்ல வைரமானது செடி போலே நிக்கும், இலைகள் மாவிலையை ஒத்த வடிவம் உடையது,  இந்த மலர் மலர்ந்து ஒரு கிழமை வரை வாடாமலும் வாசம்  குறையாமலும் இருக்கும், நாள்பட நாள்பட அந்த பூ மஞ்சள் நிறமாகிவிடும், பின்னர் பழம் கூட இதிலே காய்கும் அதை வொளவால்கள் பறித்து கொண்டு போவதாக சொல்வார்கள் காரணம் பழம்கூட வாசமாகதான் இருக்கும், என் மனதை தொட்ட லர்களில் இந்த மனோரஞ்சித மலரும் ஒன்றாகும்.

இந்த மலரை போலவே தோற்றத்தில் ஒற்றுமை இருபது போலே ஆனால் கொஞ்சம் சிறிய இதழ்களை உடைய ஒரு வாசம்வீசும் மலர் செடியை நான் ஜேர்மனியிலும் கண்டு வியப்புற்றேன்.

மலரின் தோற்றம் சிறியதாகவும் செந்நிறமாகவும் செடிகளில் இலைகளும் சிறியனவாக இருக்கின்றன, ஆனால் வாசம் அந்த செண்பகமலர் போலவே இருகின்றது.

நாட்டுக்கு நாடு மனிதர்களும் நிறமும் தோற்றமும் மாறுவது போலே, செடிகளும் மலர்களும் கூட மாறி இருப்பதைதான் நான் அறிகிறேன், இறைவன் படைப்பில் இயற்க்கையிலும்எத்தனை விந்தைகள்.

கவி மீனா
துன்பமும் இன்பமும்



எழுத நினைத்த வார்த்தைகள்
எழுத முன்னே மறப்பதேன்
கண்ணில் கண்ட நிலவு கூட

கருமுகிலில் மறைவதேன்
கனவு கண்ட வாழ்க்கையும்

வாழ முன்பே தொலைவதேன்
அழகாய் பூக்கும் சில மலரும்

மாலை முன்பே வாடுவதேன்
கூடி பழகும் உறவுகளும்

ஒருநாள் பிரிந்து போவதுமேன் ...
துன்பமும் இன்பமும் மானிடர்க்கே

இறைவன் அழித்த வரமாய் மாறியதேன்
 

கவி மீனா