Dienstag, 22. September 2020

 


அமைதி

எங்கு தேடியும் அமைதி கிடைக்காத போது

அமைதியை நாமே மனதில் உருவாக்க வேணும்

அதற்கு ஆசைகளை துறவுங்கள்

ஒவ்வொரு ஆசைகளாய் கை விடுங்கள்

நெல்லுக்கு களை எடுபது போலே எம்மை

சுற்றி வரும் உறவுகளுக்குள்ளும்

களை பிடுங்கி எறியுங்கள்

நாம் போகும் பாதையிலுள்ள நெருஞ்சி

முட்ககளை தூக்கி தூர வீசுங்கள்

 

உடலுக்கு ஒய்வு கொடுப்பது போலே

 நம் சிந்தனைக்கும் ஓய்வு கொடுங்கள்

உடலில் உள்ள அழுக்கை கழுவி விடுவது போலே

அகத்தே அழுக்கு சேராமல்

தூய்மையான மனதை பேணுங்கள்

காசுக்கும் காமத்துக்கும் அலையாதீர்கள்

பொறாமை கொண்ட உறவுகளை சேராதீர்கள்

கடவுளை நம்புங்கள் உங்கள் கடமைகளை மட்டும் செய்யுங்கள்

 

ஆரோக்கியத்தை பேணுங்கள்

அடுத்தவனது வீட்டை பார்த்து ஏங்காதீர்கள்

கடைசியில் எதுவும் கூட வராது

என்பதை நினையுங்கள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தாக

இருபதை கொண்டு நிறைவாக வாழுங்கள்

இதுவே அமைதியை தரவல்லது!

கவி மீனா

 

 https://issuu.com/home/published/_________________

Sonntag, 6. September 2020

 நாட்டு நடப்பு 4

கொரோனா வந்ததும் வந்திச்சு கல்யாண வீடு சாமத்திய வீடு பேத்டே பாட்டிகள், பல்லு கொழுக்கட்டை கொட்டுதல், வளைகாப்பு, கல்யாணநாள் கொண்டாட்டம் என்று யாவுமே ஸ்தம்பித்து நிக்குது பாருங்க!

இது எத்தனை பேருக்கு மன கஸ்டத்தை கொடுகிறது தெரியுமா?  இந்தியா சிங்கப்பூர் எல்லாம் போய் வாங்கிய சேலைகள் நகைகள் சுடிதாருகள் எல்லாம் எப்பதான் போட்டு அடுத்தவர்களுக்கு காட்டுவது? என பல பேருக்கு இங்கு மன வருத்தம்,  காசு கொடுத்து பார்த்து பார்த்து வாங்கியது எல்லாம் அலமாரியில் அடுக்கி வைத்து என்ன பிரயோசம் பாருங்க!

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிபது போலே புலம் பெயர்ந்து வந்தவர்களில் பலர் காணாததை கண்டு விட்ட கழிப்பில் நெடுக கொண்டாட்டம் வைப்பதும் அதற்கு மேடை பேச்சாளர்கள் வேறே மைக் பிடிக்க  மேடை ஏறுவதும்   எல்லாம் இங்குதான் நடந்ததுங்க !

இதிலை கொண்டாட்டம் வைத்து கோடி உடுத்தி அன்று ஒருநாள் கூத்து வைத்தால் அவர்களது தரம் உயருமா? இல்லை தன் வாழ்வை சீராக வாழ தெரியாதவன் எல்லாம் மேடை ஏறி பேசி விட்டால் பெரிய இலக்கியவாதி ஆகி விட முடியுமா?

இது எல்லாம் அற்ப ஆசையுங்க அதை கூட இன்று இந்த கொரோனா வந்து தடுத்து வைத்திருக்கு என்றால் இவர்களது மன நிலை என்ன பாடு படும் சொல்லுங்கோ?

இளசுகள் கல்யாணம் ஆகி ஒன்று சேர முடியலை என்ற ஏக்கத்திலும்  பெரிசுகள் தங்கள் ஆடம்பர விழாவை வைத்து பவுசு காட்ட முடியலை என்ற வருத்ததிலுமே வாடுதுகள் பாருங்க!

எத்தனையோ ஏழைகள் ஊரடங்கு சட்டம் போட்டதாலே தண்ணி இல்லா காட்டிலே தவிக்குதுகள் அன்றாடம் உழைத்து உண்ட சனம் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வாடுதுகள், இதை எல்லாம் அறியாத சனம் கொண்டாட்டங்களும்  ஆடம்பர வாழ்க்கையும் தடை பட்டதை நினைத்தே வருந்துதுகள் என்றால்  இவர்களை என்ன சொல்ல ?

கொரோனா வைரஸ் வந்து பெற்ற பிள்ளைகளை கூட காண முடியாது தவிக்கும் பெற்றவர்கள் நிலை தெரியுமா?

பேர பிள்ளைகளை கட்டியணைத்து ஒரு முத்மிட முடியாமல் ஏங்கும் பேரன் பேத்தி  நிலை புரியுமா?

தனித்து விட பட்ட மனிதர்கள் வெளியிலும் போக முடியாது பயத்தோடு நாலு சுவருக்குள் அடை பட்டு கிடக்கும் நிலைதான் அறிவார்களா?

இதை எல்லாம் விட்டுட்டு என்ன இந்த தொற்று பரவியதாலே நாம குறித்த தேதியில் கொண்டாட்டம் வைக்க முடியலையே என்போரும்  50 ஆவது பிறந்த நாளை இப்ப கொண்டாடாமல் அடுத்த வருஸம் கொண்டாடலாமா? நாள் போக போக வயதும் ஏறி போகுமே என்று சிந்திப்போருமாய் சில பேரு!

இல்லாவிடில் இங்கு ஒரு பெண்மணி கொண்டாடியது போலே, ஆயுளுக்கும் வந்த எல்லா பிறந்த நாளையும் சேர்த்து ஒருநாள் கொண்டாடமாய் வைத்தது போலே  எனி வருங்காலத்தில் கொண்டாட வேண்டியதுதானே?

50 ஆவது பிறந்தநாளை இல்லை ஒரு நாளுமே வாழ்க்கையில் பிறந்த நாளை கொண்டாடாத பெண் ஒருத்தி இங்கை வந்ததும் அடுத்தவர்கள் பேத்டே பாட்டி வைக்கினம் என்று தானும் வைப்பம் என்று ஒருநாள் எல்லாரையும் கூப்பிட்டு பாட்டி வைத்தா எத்தனை வயது என்று கேட்டால்  சொல்லவே இல்லை

இரகசியமாக சொன்னா தான் 50 ஆவது கொண்டாடாத படியால் இப்ப கொண்டாடுவதாக எப்ப சொல்லுங்கோ 56 வயதிலை!

சரி விட்டு தள்ளுங்க ஆசைக்கு வயது ஏது?

கொண்டாட்டம் வைப்பவர்கள் ஒரு பககம் வாடி நிக்க,  இந்த மதம் மாறிய கூட்டம் ஒரு பக்கம் தாங்கள் சபை கூடுறது என்று சொல்லி

கிழமைக்கு இரண்டு தடவையாச்சும்  ஆண்கள் கோட் சூட் என்ன,  பெண்கள் டொக்கா சப்பாத்து என்ன ? ஆடை அலங்காரத்துடன் கூடி கூடி ஓத முடியலை என்று அழுவுறார்கள் பாருங்க!

நெஞ்சிலை உளள ஆசையை அழிக்க முடியாத இந்த சனம் பேரவா  பிடிச்சு அடுத்தவன் சொத்துக்கும்,  அடுதவனை பிடித்து உதவி பெறவும் நாய் பேயாக அலைவதை மறந்து, கையிலை ஒரு பைபிளை தூக்கிட்டு  என்னமோ சபை கூடி கோஸம் போடுவதால் என்ன பயன் சொல்லுங்கோ?

ஆடையே இல்லாமல் ஒரு துண்டு கோமணத்தோடு சிலுவையில் தொங்கும் யேசுவை கும்பிட இவர்கள் கோட் சூட் போடாமல் போக மாட்டார்களாம்  இதை நினைத்தால் சிரிப்புதாங்க வருகுது !

பிறவி வேதகாரன் வெள்ளையனும் சேச்சுக்கு போராங்க  ஆடம்பரமற்ற ஆடைகளை அணிந்து ஞாயிற்று கிழமைகளில் போராங்கள் ஆனால் இங்கை புலம் பெயர்ந்து வந்து மதம் மாறிய சனம் படுற பாடு பெரிய அளப்பறையுங்க! 

கோயிலுக்கு போராக்கள் மட்டும் என்ன பக்தியாக முத்தியை தேடியா போராங்க?

இருக்கிற நகை நட்டை காட்டவும் வாங்கின சேலைகளை உடுத்தவும் என்று கோயிலுக்கு போரவங்க சில பேரு

அங்கு போய் அரட்டை அடிக்க சில பேரு,

வீட்டிலை வேலை செய்ய முடியாத பெண்கள் கூட கோயிலுக்கு போவதென்றால் தோய்ந்து குளித்து  அங்கை போய் மணி அடிச்சு பூசை முடியும் வரை தம்பிடிச்சு இருந்திட்டு, வெளியே போய் அரட்டை அடிக்கவும், கோவில் சாப்பாட்டை சாப்பிடவும் என்று போறவை சில பேரு!

பூசை நடக்கேக்கையே ஆளை ஆளு கண்ணாலை கதைபாங்க, ஐயர் மந்திரத்தை சரியா சொல்லுறாரா அது கூட யாருக்கும் புரியாது என்னமோ பிள்ளையாரும், முருகனும் அவருக்கு இரண்டு பெண்டாட்டியும், சிவனும் பார்வதியும் என்பது மட்டும் தான் சைவமா?

ஒரு தேவாரம் கூட தெரியாத ஆட்கள் தான் அதிகம் பேரு இங்கை! இதிலை சைவ புராணங்களையும் உபநிடதங்களையும் அதிலுள்ள தத்துவங்களையும் அறிந்தவர் யார் உள்ளார்கள்?

தேர்திருவிழாவிலை தேர் இழுக்கிற பெண்களென்ன, கற்பூர சட்டி ஏந்துற பெண்கள் என்ன  இவங்களிலை சில பேரு  அடுத்தவ குடும்பத்தை தெருவிலை இழுத்து விட்டவங்களுமுண்டு! அடுத்தவன் வாழ்க்கையில் பொறாமை தீயால்  கொழுத்தி எரிய விட்டவங்களுமுண்டு!

கோயிலும் இங்கை பணவரவுக்காக நடக்குது, போற சனமும் பொழுது போக்குக்காவும், ஊர்வம்பு பேசவும் அடுத்த பொண்ணு கட்டின சேலை எங்கை வாங்கினது? எவன் எவன் என்ன செய்யுறான்? என பேசவும் ஒரு பொழுது போக்கிடமாக கோயிலும் இங்கை மாறியது உண்மை தானுங்க !

நான் மதங்களை குறை கூறவில்லை கடவுளை பழிபதுமில்லை ஆனால் அந்த நிலையை உருவாக்கும் இந்த சனங்களைதான் நான் எடுத்துகாட்டுறன்.

அதுவும் போச்சா கள்ள வேலைக்கு பதுங்கி பதுங்கி அரசாங்கத்தக்கு தெரியாமல் யாராச்சும் காட்டி கொடுத்திடுவினமோ என்று பயந்தபடி  வீடுகளிலும் ரெஸ்ரோரண்டிலும் வேலை செய்தவர்களுக்கும் இப்ப கொரோனா ஆப்பு வைச்சுட்டுது பாருங்க!

படித்தவன்களுக்கும்   நல்ல வேலை செய்பவன்களுக்கும் நேர்மையாய் பதிந்து வேலை செய்தவனுக்கும்  முறையாக வேலை செய்து பென்ஸன் எடுத்தவனுக்கும் இப்ப வீட்டிலை நின்று வேலை செய் காசு கொடுக்கிராங்க

இந்த கள்ள வேலை காரர்களுக்கு  வாயிலை மண் தானுங்க!

இதுக்கு மேலே என்னத்தை சொல்ல ? நாளை  மேலும் சொல்ல முடியுமா தெரியாது இதுதான் இன்றைய நிலை!

போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாருடா? போனால் போகட்டும் போடா போடா!

கவி மீனா