Samstag, 22. Oktober 2022

 வாங்கி வந்த வரம்

குப்பைகளை கூட்டி எறியதான் வேணும்

வேண்டாத உறவுகளை தூக்கி வீசதான் வேணும்

இலைகளும் கருகி விழுவது போலே

உறவுகளும் குறுகி பிரியதானே செய்யுது

காலங்கள் மாறுவது போலேதான்

மனித மனங்களும் காலத்துக்கு ஏற்றாற் போல் மாறுது

தன்னைதானே உணராதவன் மனிதனே இல்லை

தலைக்கனம் பிடித்தவனையும் போதைக்கு அடிமையானவனையும்

கடைசிவரை திருத்தவே முடியாது

திருத்த போனால் கழுதைக்கு கிட்ட போய்

உதை வாங்கின கதைதான்



அவனவன் தலைவிதியை அவனே தேடுகிறான்

போதைக்கு அடிமையானவன் கடைசி வரைக்கும்

மீளமுடியாது  உளருகிறான்

போத்தில் மாறினாலும் போதை மாறுவதில்லை

போதை வஸ்த்து புத்தியை கெடுக்குது

வார்தைகளை உளற வைக்குது

உலகமே இருட்டில்  பகலும் இரவும் ஒன்றாகி

படுக்கையிலே கிடக்க வைக்குது

சுற்றமும் உறவும்  கூட இருப்பவரையும்

அவனுக்கு புரிவதே இல்லை

மதிப்பும் மரியாதையும் நடக்கிற முறையில்தான்

அவனவனுக்கு கிடைக்கும்

வார்தைகள் சரியில்லாட்டி நட்புகளும் உறவுகளும் நிலைபதில்லை

வாழ்க்கையும் நின்மதியாய் அமைவதில்லை

இதைதான் சொல்வார்கள் வாங்கி வந்த வரம் என்று

கவி மீனா

Samstag, 15. Oktober 2022

 

எந்தன் வீட்டு தோட்டதிலே

பட்டு இதழ் ரோசா

மொட்டு அவிழ்ந்து சிரிக்குது

பார்த்து மகிழ கண்களுக்கு

மோகனாய் இருக்குது

கட்டவிழ்ந்து மனசு

களிநடனம் புரியுது

சுத்தி சுத்தி வண்டு வந்து

எட்டி எட்டி பார்குது

 


வட்ட நிலா வானில் வந்து

ரசித்து விட்டு போகுது

விட்டு விட்டு தென்றலும்

வந்து வீசி வாசம் அள்ளி போகுது

தூரலோடு சாரல் வந்து

மெல்ல சிலிர்த்து நிக்குது

இயற்கையோடு மனசும்

 கலந்தே பேசுது

இத்தனையும் எந்தன் வீட்டு

தோட்டதிலே நித்தமும் நடக்குது

கவி மீனா


 நாட்டு நடப்பு -

நானும் புலம்பெயர்ந்த நாள் முதல் சுற்றும் முற்றும் நடப்பது பற்றி புலம்பிக்கொண்டே இருக்கிறன்


நீங்கள் என்ன சொல்லபோறீங்கள் எண்டு எனக்கு தெரியும் பாருங்க! இவ  என்னமோ வெட்டி முறிக்கிறாபோலே

வெட்டியா எழுதி தள்ளுறா என்று முணுமுணப்போர் சிலர் உண்டு,  எழுதுறது என்றால் சும்மாவா? கையாலே பேனை பிடித்து எழுதாட்டியும், கீபோட்டிலை தட்டி தட்டி  எழுதினாலும் விரலும் நோவும், சிந்திச்சு சிந்திச்சு மூளையும் களைத்து போகும்  என்னமோ எழுதினால் மனசு கொஞ்சம் பிரியாகுதுங்க! அவ்வளவேதான்.

மகா பாரதத்திலை பாண்டவருக்கு ஒரு வருடம்தான் ஐஞ்ஞாத வாஸசம் நமக்கு ஐஞ்ஞாத வாஸ்சம் தொடர்ந்து கொண்டே போகுது வாழும் வரை துன்பங்களுக்கு முடிவு இல்லை என்றாலும் உலக வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்துடுமுங்க, காரணம் என்னதான் நாம் கொரோனாவுக்கும் யுத்ததுக்கும் பயந்து ஒழிந்து வாழ்ந்தாலும் ஒருநாள் இன்றோ இல்லை நாளையோ காலனின் கைக்கும் கண்ணுக்கும் நாம் எட்டி விடுவோமே! ஏனெனில் காலனுக்கு கையும் நீளம் கண் பார்வையும் நல்ல கெட்டியுங்க!

இப்ப நாலாவது ஊசியும் போட வர சொல்லிடாங்க உயிர் தப்பி வாழ ஆசைபடாவிடிலும் நோயின் கொடுமையை அனுபிக்க பயந்துதான் ஊசியெல்லாம் போட வேணடியிருக்கு எனி கொரோனா எந்த பேரிலை குட்டி போட போகுதோ அதுவும் தெரியாது.

இப்ப கொஞ்ச நாளா இணையத்தில் சாஸ்திரிகள் துலாம் ராசிக்கு  சனி குரு அதிசார பெயர்ச்சி அதிஸ்டம் உச்சத்திலை என்று புழுகி தள்ளுறாங்க அதிஸ்டம் பற்றி தெரியலை கொரோனோ உச்த்துக்கு போட்டுது இப்ப யுத்தமும் உச்சத்திலே இதுதாங்க உண்மை!

அங்கை ஒருத்தர்  யாரை பற்றி கதைச்சாலும் அவர் என்ன நம்பர் எண்டு கேட்டு போட்டு உதுகள் உருபடாதுகள் அவைக்கு நம்பர் சரியில்லை என்று சொல்லி போடுவார் ஆனால் 7 நம்பர் மட்டும் லக்கி 7 என்று புழுகி தள்ளுவார் காரணம் அவரது பிள்ளை 7 என்பதால் எத்தனை 7 நம்பர் ஆழுகி புழுத்து சாவுறாங்க?

ஒரு ஆம்பிளை 7 நம்பர் 7 தடவை கட்டியும் கடைசியிலே வீடுழந்து பிள்ளை குட்டிகளை இழந்து அனாதையாகதான் செத்தாரு இன்னும்  ஒருத்தர் அப்படிதான் கடைசியிலை கிடந்து அழுந்துறாரு

7 இலை பிறந்த பெண் ஒருத்தி அடி சூடுவாங்கிக்கொண்டு கைகட்டி வாய் பொத்தி புருஸனுக்கு அடிமையா கிடக்குது, புருஸன்காரன் வீட்டிலை நிண்டா அவவுக்கு யாரோடும் ரெலிபோனில் பேச கூட விடமாட்டான் என்றால் பாருங்களேன்  இன்னுமொரு பிள்ளை 3 வாட்டி கட்டியும் வாளாவெட்டியாகிதான் நிக்குது இதிலை 7தான் நல்ல லக்கி நம்பர் என்று சொல்லுகிறவர்களை என்ன சொல்ல?

நம்பரிலை என்ன இருக்கு? எல்லாம் அவனவன் கர்ம வினைக்கு ஏற்றா போலேதான் வாழ்க்கை அமையுது

முன்னை செய்ததை சாக முன்னரும் அது தப்பினால் அடுத்த பிறப்பிலும் தண்டனைகள் தொடரும் இதுதானே இந்து மதம் சொல்கிறது குறிப்பா கருட புராணம் சொல்லுதுங்க!

இன்னும் விஸயங்கள் இருந்தால் அடுத்த முறை சொல்லுறேனுங்க

Sonntag, 2. Oktober 2022

 

கூடி வாழ்ந்து

சாதகத்தில் கிரகங்கள் உச்சம்என்றால்

அவன் வாழ்வை உலகம் மெச்சும் என்பர்

ஆனால் இன்று கொரோனாதான் உச்சத்திலே

விலை வாசியும்  உச்சத்திலே

யுத்தமும் பக்கத்திலே

மனித மனங்களோ அச்சத்திலே

பலர் வாழ்வோ வெறும் எச்த்திலே

 


மிச்சம் மீதி தின்பதற்க்கு இங்கு

ஏழைகள் யாருமில்லை

பணத்தின் மேலே குந்தினாலும்

மகிழ்ச்சியின்றி கடவுளிடம் பிச்சை கேட்கும்

ஏழைகள்தான் அதிகம் மடா

 

பட்சம் என்று பக்கம் வருவோர்

 பாதி வழியில் போய் விடுவர்

மிச்சமான வாழ்வும் இழுபறியாய்

போய் முடியும்

பிச்சு பிச்சு புடுங்குதற்கு

கூடவரும் உறவகளுண்டு

கூடி வாழ்ந்து கோடி இன்பம் பெற

உண்மையாக யாரும் இல்லை

கவி மீனா

 

இதுக்கு பேரு காதலா?

லையிட்ரா ஒரு காதல் மனசுக்குள் வரும்

அது பின் வெயிற்றா வந்து வாழ்க்கையில்  விழும்

பார்த்து பார்த்து கண்கள் பரவசமுறும்

பார்காத போது நெஞ்சு வெடித்தே அழும்

காலபோக்கில் பின் கல்யாணமும் வரும்

அதுக்கு பிறகு காதல்  பறந்தே போகும்



கண்கள் பேசும் வரை வளர்ந்த காதல்

வாய் பேச தொடங்கியதும் சண்டையில் முடியும்

கை தொட துடித்த காதல் மெய் தொட்ட பின்னே

பொய்யாகி போகும்

இதுக்கு பேரு காதலா?

கவி மீனா

 

புட்டு 

அரிசியும் தேங்காயும் உள்ள ஆசியா நாடுகளில் புட்டு அவிக்கிறார்கள்

ஆனால் யாழ்பாணத்து தமிழர்கள்தான் அரிசியை மாவாக்கி வறுத்த மாவில்

தேங்காய்


பூ கலந்து புட்டு அவிக்கிறார்கள்

அதை விட பால்புட்டு சக்கரைபுட்டு புட்டுபிரியாணி என ஒரே அசத்தல்!

கேரளா மக்கள் மா புட்டு அவித்த பின் தேங்காய் பால் விட்டு

அல்லது கடலை கறியோடு  சாப்பிடுறார்கள்

பிலிபைன் மக்கள் கூடுதலாக களிபச்சை அரிசியை வறுக்காமல்

உருண்டை பிடித்து அவிக்கிறார்களோ? தெரியலை

எதுவானாலும் நம்ம ஊரு புட்டு சுவையோ சுவைதான்!

அம்மா முங்கில் குழலில் அவித்த அரிசிமா குழல் புட்டு சும்மாவே அள்ளி அள்ளி சாப்பிடலாம் காரணம் உடன் இடித்து வறுத்த அரிசி மாவுக்கு ஒரு தனி சுவை

அதை விட வளவிலை இருக்கிற தென்ன மரத்து தேங்காய்களை உடனே துருவி போட்டால் அதன் வாசமும் சுவையும் தனி ரகம்

எனக்கு பிடித்த உணவு குழல் புட்டுதான் சில சமயம் நானும் இங்கு புட்டு அவிபதுண்டு ஆனால் ஊரிலை அம்மா செய்த புட்டின் சுவை வராது காரணம் இங்கு உடன் தேங்காய் பூவும் இல்லை கைகுத்தரிசி மாவும் கிடைபதில்லை அத்துடன் முங்கில் குழலும் இல்லை அலுமீனயம் குழலில் அவிக்கிற புட்டு அதிக சுவையை தராது

ஏதோ அவலை நினைத்து உரலை இடித்த கதையாக நாம இங்கு சமைக்கிறம் ஆனாலும் பிள்ளைகளோ விருந்தினரோ எனது சமையல் நல்லாக சுவையாக இருக்குது என்று சொல்வார்கள் காரணம்  ஊரிலை வாழ்ந்த காலத்தே எங்க வீட்டு புட்டின் சுவை அவர்களுக்கு தெரியாது பாருங்க!

கவி மீனா