Sonntag, 26. Januar 2014


பேசாமடந்தை (சிறு கதை)

(என் சிறிய வயதிலே நான் என் பேரன் வாயால் சொல்ல கேட்ட பேசாமடந்தை என்னும் ஒரு சிறுகதை இன்னும் என் ஞாபகத்தில் ஊஞ்சல் ஆடுகிறது இந்த சிறுகதை விக்கிரமாதித்தன் கதையில் ஒரு சிறு பகுதியாகும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டு இங்கே தருகிறேன்)

ஒரு நாள் ஒரு சிறந்த ஒவியன் ஓரு மரத்தின் கீழே ஒய்வு எடுத்துகொண்டு இருந்த போது ஒரு பெரிய பஞ்சவர்ணக்கிளி பறந்து வந்து அவன் இருந்த மரத்தின் கிழையில் உட்கார்ந்தது அதன் சொண்டில் காவிக் கொண்டு வந்த ஒரு சிறிய பொன்னிற பொருளை அது அவன் முன்னே தரையில் போட்டது அதை எடுத்து பார்த்த அந்த ஓவியன்   ஆச்சரியம் அடைந்தான் அது ஒரு பெண்ணின் அழகிய நகத்தின் ஒரு பாதியாகும் அதை பார்த மாத்திரத்தே ஆவலும் ஆச்சரியம் கொண்ட அவன் இந்த உடைந்த பாதி நிகம் இப்படி ஒரு அழகு என்றால் அந்த பெண் எவ்வளவு ஒரு அழகியாக இருப்பாள் என நினைத்து கற்பனையில் முழ்கினான்.

பின்பு அந்த கிளியிடம் கேட்டான் அழகிய கிளியே இது யாருடைய நகம் என்று சொல்வாயா? இவ்வளவு அழகான பொன்னிற நகத்தை உடையவள் யாரோ? அவள் தேவதையா? இல்லை தெய்வபிறவியா?  என்று சொல்

அவன் எதிர்பார்க்கவில்லை அந்த கிளி பேசும் என்று ஆனால் அந்த கிளி அவனுக்கு பதில் அளித்தது இளைஞனே அது ஒரு ஊரிலை இருக்கிற ராஐகுமாரியின் நகம் அவள் ஒப்பரிகையில் நின்று தலை மயிரை கோதும் போது உடைந்து விழுந்த அந்த நகம் அதை நான் முதலில் ஏதோ உண்ணும் பழம் என்றுதான் எடுத்து வந்தேன் அது நகம் என்று தெரிந்ததும் கீழே போட்டன் என சொல்லியது.

ஓவியன் கிளி சொன்ன கதையை கேட்டு திகைத்துபோனான் அந்த காலத்திலை நகபூச்சு உதட்டு சாயம் என்று எதுவுமே செயற்கையாக இல்லை இயற்கையாக பொன்னிற நகத்தை உடைய அந்த அழகியை கற்பனையில் கண்டு ரசித்து அந்த கற்பனையில் தெரிந்த பெண்ணின் உருவத்தை பக்கதில் இருந்த ஒரு கோவில் சுவரிலே வரைந்து விட்டு அந்த நகத்தை தானே பத்திர படுத்திக் வைத்தான்.

ஒரு நாள் அந்த ஊரு இளவரசன் நகர் வலம் வந்த போது அந்த கோவில் சுவரில் இருந்த அந்த அழகிய பெண்ணின் ஒவியத்தை கண்டு மையல் கொண்டு அந்த ஓவியத்தை ரசித்து மெய் மறந்து பித்தம் பிடித்தவனான்.

அந்த ஓவியம் கையில் ஒரு பூச்செண்டு வைத்திருந்தது  இளவரசன் அந்த ஓவியத்தை உயிருள்ள பெண்ணாகவே நினைத்து பெண்ணே பூ செண்டை எனக்கு தா என திருப்பி திருப்பி சொல்லிய படி அந்த ஓவியத்தின் முன்னே மண்டியிட்டு கிடந்தான்.

இளவரசன் அரண்மனை திரும்பாததால் சேவகர் மூலம் தகவல் அறிந்ததும் அவனது தந்தையான அந்த நாட்டு அரசன் அவனை தேடி அங்கே வந்த போது இளவரசன் காதலில் மோகம் தலைக்கேறி பித்தம் பிடித்து சுயநிலை இழந்து நிற்க்கும் நிலை கண்டு மனம் மிக வருந்தி  மகனின் பித்தம் தெளிய வேண்டுமாகில் அந்த பெண்ணை கண்டு பிடிக்கவேணும் என நினைத்தான்.

அதனால் அந்த ஓவியத்தை வரைந்த  ஓவியனை தேடி கண்டு பிடித்து விசாரித்தாதன்  எந்த அழகியின் ஓவியம் இது? நீ யாரை பார்த்து இந்த ஓவியத்தை வரைந்தாய் என அரசன் அவனை கேட்ட போது  அந்த ஓவியன் கிளி தனக்கு சொன்ன கதையை வைத்து தான் அந்த ஓவியத்தை கற்பனையில் வரைந்ததாக சொன்னான்.

அரசன் உடனே நீ தயவு செய்து அந்த கிளியை மறுபடியும் கண்டு பேசி அந்த அரசகுமாரி எந்த ஊரு என்பதை கண்டு பிடித்து சொல் இல்லாவிடில் உனக்கு சிரச்சேதம் நிகழும் என்று மிரட்டவே ஓவியன் பயந்து அரசே நாம் போய் அந்த மரத்தின் கீழ் இருப்போம் அந்த கிளி மறுபடியும் வந்தால் நான் பேசுகிறேன் என்று சொன்னான்.

அதன்பிரகாரம் அரசனும் ஓவியனும் இன்னும் சில சேவகருமாக அந்த மரத்தின் கீழ் சிலநாள் கிளியின் வரவுக்காக காத்திருந்தனர் அதிஸ்டவசமாக ஒரு நாள் அந்த கிளி மீண்டும் வந்து அந்த மரத்தின் கிளையில் அமர்ந்தது.

உடனே ஓவியன் கிளியை நோக்கி கேட்டான் அன்பும் அழகும் அறிவும் நிரம்பிய கிளியே நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் இல்லையேல் எனக்கு மரணம் நிச்சயம் என்று கண்ணில் நீர் மல்க கெஞ்சினான்

அதற்க்கு கிளி இளைஞனே அப்படி என்ன குறை உனக்கு நேர்ந்ததது ஏன் நீ சாக வேணும் என அன்பாக கேட்டது.

அப்போது ஓவியன் தான் அந்த நகத்தை வைத்து கற்பனையில் வரைந்த ஓவியத்தை இளவரசன் பார்த்து காதல் கொண்டு பயித்தியமாக கிடப்பதால் அந்த இளவரசி இருக்கும் இடத்தை தெரிந்து சொல்லாவிடில் தன்னை மகாராஜா தூக்கில் ஈடுவார் என பயந்தபடி சொன்னான்.

உடனே கிளி பாவம் நீ ஒரு ஒவியத்தை உன் திறமையில் வரைந்ததுக்கு இதுவா தண்டனை?  இது என்ன அரசாட்ச்சி என்று இரக்கதுடன் சொல்லி சரி என்னோடு வா நான் அந்த இளவரசி இருக்கும் இடத்தை காட்டுகிறேன் என சொல்லியது

உடனே அரசன் மந்திரிக்கு கட்டளை இட்டார் ஓவியனுடன் போய் அந்த இளவரசியை இளவரசனின் நிலமையை எடுத்து சொல்லி அழைத்து வரும் படி  இல்லையேல் மந்திரிக்கும் சிரசேதம் நிகழும் என்று சொல்லவே சரியென்று அரச கட்டளைக்கு இணங்கி அந்த நாட்டு மந்திரியும்  ஓவியனும் சேவகர்களுமாக கிளியை தங்களுடன் குதிரையில் இருத்தி  கிளி சொல்லும் திசையில் விரைந்து சென்றார்கள்

அந்த நாட்டை அடைந்ததும் கிளி இதுதான் அந்த அரசியின் ஊர் நீங்கள் எனி போய் அரசியை காண்பதும் கதைப்பதும் உங்கள் திறமை என்று சொல்லி அது பறந்து சென்றது.

மந்திரி ஓவியனுடனும் சேவகருடனும் அந்த நாட்டு அரண்மனை சென்று அந்த ஊர் அரசனிடம் நடந்த சம்பவத்தை கூறி  தங்கள் மகாராஜா இளவரசியை கூட்டி வரும் படி பணித்ததாக தயவு செய்து மனம் இரங்கி இளவரசியை தங்களுடன் அனுப்பி வைக்கும் படியும் தங்கள் இளவரசனின் பயித்தியம் தெளிய உதவும் படியும் கெஞ்சி கேட்கவே,  மனம் இரங்கிய அந்த ஊரு மகாராஜா அவர்களுடன் தனது ஒரே மகளும் அழகில் சிறந்தவளும் பொன்னிற நகம் உடையவளுமான அந்த இளவரசியை அனுப்பி வைத்தார்.

நாடு திரும்பிய மந்திரி மகாரா ஜாவிடம் சேதியை கூறி யதும் அனைவரும் சேர்ந்து இளவரசன் இருக்கும் இடம் சென்றனர் அங்கு சென்றதும் அந்த அழகிய இளவரசியின் கையில் ஓவியத்தில் உள்ளது போலே ஒரு பூச்செண்டை கொடுத்து அதை  இளஅரசனிடம் கொடுக்கும் படி சொல்லவே இளவரசியும் அந்த இளவரசனின்  நிலை கண்டு இரக்க சிந்தை கொண்டு அந்து பூசெண்டை  கையில் ஏந்தி இளவரசனிடம் அன்ன நடை பயின்றே சென்று,

இளவரசே இன்நாட்டின் செம்மலே தாங்கள்  கேட்கும் பூசெண்டு இதோ என மெல்லிதழ் திறந்து பேசியபடியே பூசெண்டை இளவரசனிடம் நீட்டினாள்.

தீடீரென்று ஓவியதில் உள்ள அழகி தன்னுடன் பேசுவது கண்டு இளவரசன் புத்தி தெளிந்து மகிழ்சியில் பெண்ணே நீ வந்து விட்டாயா? நீ வராது போனால் நான் இங்கே உயிர்  து றப்பதாக இருந்தேன் என சொல்லி களிப்பில் ஆழ்ந்து போனான்.

அவனது தந்தையும் அந்த ஊரு மகாரா ஜாவும் தன் ஒரே மகன் பித்தம் தெளிந்து விட்டமை கண்டு   மிககளிபில்  ஆழ்ந்தான்

மரண தண்டனையில் இருந்து தப்பிய ஓவியனும் கடவுளே என்னை காப்பாற்றி விட்டீர்கள் என சொல்லி அகமகிழ்ந்தான்

மந்திரியும் தனது  தலையும் தப்பியதுடன் நாட்டு இளவரசனையும் காப்பாற்றிய பெருமையில் அகமகிழ்ந்தான்

இந்த கதையை அன்று விக்கிரமாதித்த மகாரா ஜாவுக்கு வேதாளம் சொல்லி  இதில் ஓவியத்தை பார்த்து காதல் பயித்தியமாய் இருந்த இளவரசனுக்கா? தன் கற்பனையில் இளவரசியை கண்டு ரசித்து இளவரசியின் உருவத்தை தத்ரூபமாக ஓவியமாக வரைந்த ஓவியனுக்கா? இல்லை தன் உயிரையும் மதிகாமல் நாடு விட்டு நாடு போய் இளவரசியை கெட்டிதனமாக கூட்டி வந்த மந்திரிக்கா இளவரசி சொந்தம் என கேட்டது.

அதற்க்கு விக்கிரமாதித்த மகாரா ஜா வேணும் என்றே பிழையான பதிலை சொல்ல பேசமாட்டன் என்று அடம் பிடித்து திரையின் மறுபக்கம் இருந்த பேசாமடந்தை என்று பெயர் கொண்ட இளவரசி கோபமுற்று சரியான பதிலை கூறி வாய் திறந்து பேசியதால் அவள் தனது சபதத்தில் தோற்று போய் விக்கிரமாதித்த மகாராஜாவுக்கு சொந்தமாகிறாள்

கவி மீனா