Dienstag, 27. November 2012


காதலும் இயற்கையும்

பூவில் தூங்கும் வண்டு

தேனை உண்டு போதை கொண்டு

பாடும் காதல் சிந்து

அந்தி மாலை அல்லி மலரை கண்டு

காதல் சொல்ல ஓடி வரும் திங்கள்

தினமும் மோகம் கொண்டு

சல சலத்து ஓடும் அருவி ஓரம்

மோகன ராகம் ஓடு சதிராடும்

தேன்றல் வந்து

அந்தி சாயும் ஆதவன் அழகை கண்டு

களித்தாடும் பொன் வானம்

வண்ண நிறம் கொண்டு

நீல வானில் விண் மீன்கள் மின்னி நகையாட

பூமி உவகையோடு சிரித்து மகிழும்

நெஞ்சில் நிறைவோடு

ஆழ்கடலும் வெண் மதியை கண்டு

பொங்கி  கரையோடு அலை மோதும்

இறைவன் தந்த படைப்பில்

இயற்கை எங்கும் காதல் ரசத்தோடு

நல்ல கவி பாடி செல்லும்

கவி பாடி செல்லும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen