Montag, 12. Juni 2023

 

இன்னும் எத்தனை நாள் 

நாடி தளர்ந்து நடை தளர்ந்து

இடை மெலிந்து பாடையிலே போவதற்கு

பிறப்பெடுத்த மானிடனே

கடை கடையாக ஏறினாலும்

உன் நோயும் பிணியும் தீர

மருந்துமில்லை

 சாக வரம் பெற்று நீடுழி வாழ

வழியுமில்லை

 


நீ மாடி கட்டி வாழ்ந்தாலும்

மடி மீது புரண்டு இன்பமுற்றாலும்

சோடி மாறி சுகம் கண்டாலும்

கடைசியிலே காடுதான்

கட்டுடலும் கலைந்து 

ஆணவமும் அழிந்து

உறவுகளும் தொலைந்து

உருக்குலைந்து நீ போக

காலம் மிக விரைவில்

வரும் என்று தெரிந்தும்

 

பிறரை மதியாமல் குதிக்கிறாய்

அன்பை உணராமல் மிதிக்கிறாய்

எக்கதாளமாய் சிரிக்கிறாய்

நேரமின்றி பறக்கிறாய்

இன்றோ நாளையோ

இன்னும் எத்தனை நாள்

என்பதை மறக்கிறாய்

இந்த நிமிடமாவது சிந்தித்து பார்

உண்மை எது என்பதை சிந்தித்து பார்

கவி மீனா

 

 

கதிரை

கதிரையை பற்றி என்னதான் எழுத போறன் என்று யோசிக்காதீங்கோ கதிரைதான் இன்று முதல் இடத்தை பிடிக்குது, இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த கதிரைக்காகதானே ஒரே போராட்டமும், சண்டையும் நடக்குது அரசியல் வாதிகள் ஆளை ஆழு இழுத்து விழுத்த ஒரே அடிதடி சண்டை போடுறாங்க இந்த கதிரையை பிடிக்கத்தானே?

அன்று தொட்டு இன்று வரை இந்த பதவி என்ற கதிரையை பிடிக்க படாத பாடு படுறாங்கள் ஒரு ஆளு ஏறி இருந்தாலும் அடுத் கட்சிக்காரன் இழுத்து விழுத்துறான் இதுக்கு முடிவும் இல்லை சனங்களுக்கு அமைதியும் இல்லை, பதவி மோகமும் பணம் சம்பாதிக்க பேராசையும் தான் காரணம் அரசியல்வாதிகள்தான் பெரும் பணத்தை பதுக்கிறாங்களே!

பதவிக்காகவும் பாளிமென்றில் ( Parliament ) கதிரைக்காகவும்  போடும் கூச்சலுக்கு என்றுதான் முடிவு வருமோ தெரியலை

ஆனால் புலம்பெயர்ந்து  வெளிநாடு வந்து அரசியல் தஞ்சம் புகுந்த தமிழருக்கு கதிரை கிடைச்சுட்டுதுங்க

கூடுதலான தமிழருக்கு இங்கை நிரந்தமாக கதிர கிடைச்சுட்டுது என்றால் ஆச்சரியம்தான்

அதுதாங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் உள்ள கதிரையைதான் சொல்லுறன்

இங்கு அனேகம் பேரு வீட்டிலை ரீவீ க்கு ( TV ) முன்னாலை ஆளுக்கொரு கதிரையிலை கிடந்து நாள் பூரா சேரியலை பார்பதுதான் வேலையுங்க!

அவை நினைத்தாலும் அந்த கதிரையை விட்டு எழும்பமுடியாது காரணம் அம்மட்டு நோயுங்க,  பக்கவாதம், பைபாசு, இருதய நோய், நீரிழிவு, கால் விறைப்பு,  முள்ளந்தண்டு பிரச்சனை, கான்சர் இப்படி பலதரப்பட்ட நோய்களும் இங்கு வந்த நம்ம ஆரோக்கியத்தை தாக்கி கதிரையிலை இருக்க வைச்சுட்டுது பாருங்க!

இதுக்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்று ஒரு படம் வந்திச்சுது அது போல நம்ம சனம் வெளிநாட்டுக்கு ஆசை பட்டு ஓடி வந்து ஆனேகமானோர் இப்படிதான் கதிரையிலை கிடக்கினம்

ஊரிலை இருந்திருந்தால் கொஞ்சமாச்சும் வளவுக்குள்ளை வேலை செய்திருக்கலாம் இல்லை கடைசி வீட்டு படியிலை குந்தி இருந்து எழும்பவும், சப்பாணி கட்டி இருந்து எழும்பவும் உடலும் ஆரோக்கியமாக இருந்திருக்கும் உண்டதும் செமிச்சு இருக்கும்

 

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா

நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

ஊரிலை குத்தரிசி சோறும் மீன் மரக்கறி என்று சாப்பிட்டவையும், இடித்து அரைத்து சமைத்தவையும் இங்கை வந்து பஞ்சி பட்டு வெள்ளைசோறு அதுவும் ரைஸ்குக்கரிலை போட்டு அவிச்சு எடுத்து சாப்பிடுவதும்

இங்கை வந்த சனத்திலை கனபேரு சுதந்திரம் தமக்கு கிடைத்த மகிழ்சியிலை நித்தம் நித்தம் இறைச்சி, முட்டை,  பட்டர், சீஸ், மது, மாது, புகை என நல்லாக கொண்டாடிதான் இப்படி அழுந்துறாங்க இப்ப !

புகை போட்டா பழம் பழுக்கும் ஊரிலை இங்கை புகை போட்டு கன ஆண்களுக்கு நுரையீரல் பழுத்துட்டுதுங்க! ஒரே கம்மு கம்முதான், ஊரிலை ஒழிச்சு ஒழிச்சு குடிச்சவன் எல்லாம் இங்கை வந்ததும் கூட்டு சேர்ந்து குடிக்க தொடங்கினாங்க,

குடிச்சு முடிய கத்தல் கூச்சல் அடிதடி கூட நடந்திச்சு கூடியிருந்த இடங்களிலை இல்லாட்டி ஒழிச்சு வீட்டிலை குடிச்சவன் மனுசியோடே மல்லு கட்டுவது வழக்கமாக போச்சுது,

அவனவன் வாழ்க்கை அவன் கையில் என்று ஏன் சோன்னார்கள் தெரியுமா? அளவுக்கு மிஞ்சி ஆட்டம் போட்டவர்களில் சிலருக்கு கதிரை நிரந்தமாச்சு, சிலபேரு போய் சேந்துட்டாங்க, இன்னும் ஒரு சிலருக்கு தனிமை சொந்தமாச்சு, ஏனெண்டால் குடிகாரண்டை மனுசி விட்டுபொட்டு போட்டாங்க ரோச்சர் தாங்க முடியாமே!

எது எப்படியோ இங்கை அதிகமானோருக்கு கதிரை கிடைச்சுட்டுது அதிலை கிடந்து ரீவீயை ( TV ) பார்த்துக்கொண்டு கிடைக்கிறதை முழங்கிட்டு எழும்ப பறிக்க ஏலாமே உளன்று கொண்டு கிடக்க வேண்டியதாயிற்று, கதிரையை பிடிக்க அடிபாடு உலகமெங்கும் நடக்குற நேரத்திலை நிரந்தரமாக கதிரை கிடைப்பதே பெரும் காரியம் ஆச்சு! இங்கை அவர்கள் கைவிட்டாலும் கதிரை அவர்களை கைவிடாதுங்க!

இது எல்லாம் அவனவன் தேடி கொண்ட வாழ்க்கை பாருங்க!

கவி மீனா