Montag, 25. Mai 2015


மத வெறி

மதம் என்னும் பேய் பிடித்து அலையாதீர்கள்!

மத வெறி பிடித்தவனும் மதம் கொண்ட யானையும்  உலகை அழிக்க என்றே புறப்படுகின்றன,

உலகம் பூரா நடக்கின்ற யுத்தங்களுக்கு காரணம் என்ன?

மதம் என்ற பேராலே இன்று உலகில் மூலைக்கு மூலை  யுத்தம்  இதனாலே எத்தனை சத்தம்?  இதனாலே எத்தனை உயிர் சேதம்? எத்தனை பணச்சேதம்? எத்தனை அழிவு?

 

மதம் என்பது  அவரவர் சொந்த விருப்பம் யாரும் யாரையும் எப்படி கடவுளை கும்பிடவேணும்  என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஒவ்வொருத்தரும் தானாக உணர வேண்டிய விடயமே இறையருள்.

காற்றை நாம் காணாத போதும் காற்றை நாம் உணர்கிறோம் இதை எமக்கு யாரும் சொல்லி தரவில்லை இது போல்தான் இறையருளும்.

 

இயற்கையை பார்த்து ரசியுங்கள் அந்த அழகின் படைப்பில் ஆண்டவனை காண்பீர்கள்,

அன்பு காட்டும் மனிதர்களை நேசியுங்கள் அந்த அன்பிலே ஆண்டவனை காண்பீர்கள்,

உதவும் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் அந்த கைகளிலே இறைவனின் கருணையை காண்பீர்கள்,

 

காதுக்கினிய சங்கீதத்தை கேளுங்கள்  அந்த நாதத்தின் இனிமையிலே இறைவனின் ஓங்கார  ஒலியை கேட்பீர்கள்,

நோய் தீர்க்கும் மருத்துவரை நம்புங்கள் அவரின் திறமையிலே இறைவனை காண்பீர்கள்,

 பசி தீர்கும் மனித  மனங்களை பாருங்கள் அவர்க ளிலே ஆண்டவனின் அருளை காண்பீர்கள்,

 

நீங்கள் அமைதியான வழியிலே நடவுங்கள் உங்களை சுற்றியுள்ள இடமும் அமைதியாகும் அமைதியான இடத்தில் இருந்து பாருங்கள் மனதிற்க்கு நிறைந்த  அமைதி கிட்டும்

மனதிற்க்கும் ஆன்மாவுக்கும் அமைதிய தரவல்ல விடயங்களை  மட்டுமே செய்யுங்கள் அதிலே இறைவனின் அன்பை உணர்வீர்கள்,

மதம் பற்றி பேசாமல் சும்மா இருத்தலே மேலானது,

 கண்ணை மூடி சும்மா இருங்கள் அதுவே மனதிற்க்கு  நிறைந்த அமைதியை தரவல்ல தியானமாகிறது.

கவி மீனா

Sonntag, 24. Mai 2015


நட நட

 


நடப்பதுதான் நல்ல உடற் பயிற்ச்சி

நடப்பதால் மனதிற்க்கும் அமைதி கிட்டும்

நடப்பதால் ஆன்மாவுக்கும் நின்மதி கிடைக்கும்

கவலைகள் தொடர்ந்தால் எழுந்து நட

கோபம் வந்தால் அதை மறக்க நட

 

தீயவர்களை கண்டால் எட்டி நட

ஏளனம் செய்வோரைக் கண்டால் தூர நட

குற்றம் செய்பவரை கண்டால் தட்டி கேட்க்க பாய்ந்து நட

வறியவர்களை கண்டால் உதவி செய்ய கிட்ட நட

விழுந்தவனை கண்டால் தூக்கிவிட ஓடி நட

 

 

உண்டதை செமிக்க விரைந்து நட

உண்மையை சொல்ல பாய்து நட

பாதை மாறினால் திரும்பி நட

உறவுகளை அணைக்க அன்போடு நட

கடமைகள் முடிந்தால் கடவுளை தேடி அமைதியாக நட

நடப்பதை மறந்தால் கால்கள் இருந்தும் பயன் இல்லை

பயன் இல்லை

கவி மீனா

 

 

Samstag, 9. Mai 2015


எவன் போற்ற தக்க பெரியவன்?

தனக்கு என சுயநலமாக பொருளை சேர்த்தவனை எல்லாம் பணக்காரன் பெரியவன் என்று சொல்லுபவர்கள் தான் உலகிலேயே  பெரும் மூடர்கள்,  பில்கேஜ் போன்றவர்கள் எல்லாம் பெரியவர்கள் அல்ல, இவர்கள் பணத்தை பாங்கில் வாழ விடுகிறார்கள் மனித மனங்களிலே இவர்கள் வாழ முடியாமலே போகிறார்கள், ஆனால் எவன் ஒருத்தன் மனித மனங்களில் வாழுகின்றானோ அவனே பெரியவன் என்றும் அந் நாட்டின் சிறந்த மனிதன் என்றும் போற்ற படுகிறான்.

எல்லா ஆசைகளையும் துறந்து தனக்கு என்றும் எதுவும் சேராமல் ஆண்டிகளாய் வாழ்ந்து அடுத்தவருக்காக  மருத்துவ, சாஸ்திர, சமய சம்பந்தப்பட்ட வாழ்க்கையின் முக்கிய  வழிகாட்டியாக உள்ள ஏடுகளை சேர்த்து வைத்த சித்தர்களும், தன் நாட்டையும் தன் ராஜ்யத்தையும் ராஜபோக வாழ்வையும் துறந்து ஞானியாகி போன கொளதம புத்தரையும், எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் மக்கள் மறக்கவும் இல்லை அவர்கள் மாகான்கள், போற்றதக்கவர்கள் என்பதை யாரும் மறுப்பதும் இல்லை.

தனக்கென்று வாழ்ந்தவர்களும் பணம் பொருளை சேர்த்தவர்களும் சுயநலவாதிகள், இவர்கள்  பணத்தை மட்டும் தேடினார்களே ஒளிய நின்மதியை தேடியவர்களாக இருக்க மாட்டார்கள்.

கோடி கோடியாய் பணத்தை சேர்த்தவன் எல்லாம் நின்மதியை தேடி இமயம் வரை ஓடுகின்றான் சேர்த்த பணத்தை வைத்து நீண்டநாள் உயிரோடே இருந்து அனுபவிக்க முடியாமல் நோயும் பிணியும் வந்திடுமோ அல்லது கள்ள பணம், கறுப்பு பணம் என்று பறிபோய் விடுமோ என நெஞ்சு பட பட என்று அடித்து அவனை பயபடுத்திக்கொண்டே இருக்கும் போது அவனுக்கு நின்மதிதான் ஏது?

ஆனால் ஒரு வேட்டித்துண்டோடும் வெறும் மேலோடும் திரிந்த மாகாத்மா காந்தி

எத்தனையோ கோடி  இந்திய மக்களின் மன நின்மதியை மீட்டுக் கொடுத்தார்,

இந்திய நாட்டுக்காக அதன் சுதந்திரத்துக்காக போராடினாரே ஒளிய அவர் தனக்காக எதையும் சாதிக்கவில்லை ஆனால் பிறருக்காக, நாட்டுக்காக சாதனை செய்த மகாத்மா காந்தி நாட்டில் வாழவில்லை ஆனால் எல்லார் மனதிலும் வாழுகின்ற ஒரு பெரிய மகானாக இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.

பணத்தாசை பிடித்தவரெல்லாம் யார் மனதிலும் இடம் பிடிப்பதில்லை அதனால் அவர்களை நாம் பெரியவன் என்று மதிக்கவும் தேவையில்லை பரதேசியாய் வாழ்ந்தாலும்  மனித மனங்களில் இடம் பிடித்த ஞானிகளும் மகான்களும் இன்றும் எமக்கு வழிகாட்டியாக நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் அறிவாளிகளாகும்.

உலகத்தில் பெரியவர்கள் எல்லாம் வீடு மனை பங்களா கோடி பணம் என்று சேர்காத போதும் மக்களின் அன்பை கோடி கோடியாக பெற்றவர்கள் என்பதில் ஐயம் இல்லை.

கவி மீனா