Sonntag, 28. April 2013


நிர்வாணமாக

நிர்வாணமாக பிறந்த மனிதனுக்கு

புவி மீதில் ஆடைகள் வாங்கி போதவில்லை

ஆபரணங்கள் கழுத்தை இறுக்கினாலும்

பொன் மேல் ஆசை மட்டும் தீர்வதில்லை

அடுத்தவன் உயர்வை கண்டே மனம்

பொறாமை தீயில் வேகுவதேன்

பேராசை பெரும் தரித்திரம்

என்பது புரியாமல் போவதும் ஏன்

அழவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சே

அதை உணரா அலையும் மானிடரே

வரும் போது கொண்டா வந்தோம்

போகும் போது கொண்டு போவதற்க்கு

ஆசையை துறந்தவனுக்கு மண்ணில்

கூட சொர்கமே
கவி மீனா

காமம் என்பது

காமன் வீசிய மலர்கணையால்

காதல் பிறந்தது கண்களிலே

வாசம் மிகுந்த மாருதமே

வந்து வீசும் மனதினிலே

தேசுலாவும் தேன் நிலாவும்

காதல் சொல்லியே கடந்து செல்லும்

கருத்தொருமித்த காதலர்கள்

மையல் கொள்ளவே சூழும் மையிருட்டும்

காமம் என்பது காதலோடு சேரும் போதே

மானிட வாழ்வின் ருவது இன்பம்

காமம் என்பது இறைவ னுக்கும் வேண்டும் என்றே

காமன் தொடுத்தான் மலர் கணை அம்பை
கவி மீனா

Donnerstag, 25. April 2013


சித்திர விழா

சித்திரை பவுர்ணமி இந்த நாளைதான் இலக்கியதில் சித்திர விழா என்று சொல்வார்கள் சிறப்பாக ஆற்றங்கரைகளிலே அன்று தமிழர் இரவில் ஒன்று கூடி வாத்தியங்கள் இசைத்து கொண்டாடி நிலா சோறு சமைத்து இனசனங்களோடு மகிழும் நாள் சித்திரவிழாவாகும்

இது பற்றி இலக்கியதிலும் சாண்டில்யனின் கதைகளிலும் பொன்னியின் செல்வன் கதையிலும் மிக சிறப்பாக எடுத்து வர்ணித்து சொல்லியிருக்கிறார்கள்  அதை வாசிக்கும் போது அட ஏன் நான் அன்று பிறக்கவில்லை இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று நான் கவலை பட்டு இருக்கிறேன்

மேலும் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்று சித்திர விழாவை சிறபாக கொண்டாடியதாகவும் இலக்கியத்தில் கதை உண்டு எப்போதும் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சிறப்புண்டு ஆனால் சித்திரை மாததிலே வருகிற பவுர்ணமிக்கு விசேட சிறப்புக்கள் காண படுகின்றன 

சித்திரை மாதம் வளர் பிறை 5 ம் நாளில் இருந்து சித்திர விழா ஆரம்பமாகி சித்திரை பவுர்ணமி அன்று முடிவு பெறுகிறது இன்நாளில் மீனட்சிக்கும் சுந்தரேசர்க்கும் திருகல்யாணம் நடந்ததாக சொல்லபடுகிறது இன்னாளில் எல்லா சிவதலங்களிலும் இந்த சிறப்பான திருகல்யாண பூசைகள் வேறே நடை பெறுகின்றன

இன்னாளில் தாயை இழந்தவர்கள் விரதம் இருந்து அவர்களுக்காக கடவுளை வேண்டினால் இறந்த அன்னையின் ஆத்மா மோட்சத்துக்கு போவதுடன் அங்கு தயாரின் ஆத்மா சுக போகங்களை அனுபவித்து நின்மதியாக வாழும் என்கிற ஒரு நம்பிக்கை உண்டு இந்த கடமை கூடுதலாக ஆண் பிள்ளைகளுக்குதான் உரியது என்று இந்து மதம் சொல்கிறது 

அத்தோடு இன்று சித்திர புத்திரனார் அதாவது ஐமதர்மராஐனின் காரியதரசி பிறந்த தினம் என்றும் சொல்ல படுகிறது

ஊரிலே எங்க வீட்டுக்கு பக்கத்திலே உள்ள வைரவர் கோவிலிலே சித்திர புத்திரனாரின் பிறந்த நாள் ஒவ்வொரு சித்திரை பவுர்ணமி அன்றும் மிக சிறப்பாக கொண்டாடபடும்  அங்கு பெரிய பானையிலே கஞ்சி காய்ச்சி பொங்கலும் வைத்து வைரவருக்கு பூசையும் செய்து  சித்திர புத்திரனார் பிறந்த திருநாளாம் என்று ஒரு பாடல் பஐனை போலே ஐயர் ஒரு மணிதியாலத்துக்கு மேலே பாடுவார் அதன் பிறகு எல்லோருக்கும் பிரசாதம் எல்லாம் கொடுத்து சித்திர புத்திரனாரின் பிறந்தநாள் விழா முடிவடையும்

ஆனால் காரியதரசிக்கு இருக்கிற மதிப்பு ஐமதர்மராஐனுக்கு யாரும் கொடுக்வில்லை காரணம் என்ன? பாவ புண்ணிய கணக்கு பார்த்து இன்னாருக்கு இன்றோடு ஆயுள் முடிஞ்சு போச்சு என்று சித்திர புத்திரனார் சொன்னால்தான் ஐமதர்மராஐன் நம்ம உயிரை எடுக்க வருவார்

இல்லாவிடில் எங்களை எப்போ கூட்டி போக வேணும் என்று ஐமதர்மராஐனுக்கு தெரியாது அதனாலே பாவபுண்ணிய கணக்கை பார்கிற சித்திர புத்திரனாருக்கு எங்கடை கணக்கை முடிச்சு சாவுக்கு நாள் குறிகாமே இருக்கட்டும் என்ற கள்ள நோக்கிலே லஞ்சம் கொடுபது போலே இந்த பிறந்த நாளை எங்கும் சிறபாக கொண்டாகிறார்கள் போலே இருக்கிறது
எது எப்படியோ ஊரில் இருக்கும் வரை இந்த விழாகள் எல்லாம் எமக்கு மிகுந்த சந்தோசங்களை தந்தது என்னமோ உண்மை
கவி மீனா

 

 

 

Freitag, 19. April 2013


சித்தம் எல்லாம் எனக்கு

சில  மனிதர்கள்  ஒரு கடவுளையும் விட்டு வைபதில்லை சிவன் பிள்ளையார் முருகன் விஷ்னு பார்வதி சரஸ்வதி இலக்குமி ராமர் கிரிஸ்ணர் தொட்டு அனுமார் வைரவர் வரை அத்தோடு யேசு மரியா அல்லா என்று எந்த கடவுளையும் விட்டுவைக்காமல் வஞ்சகம் இன்றி எல்லா படங்களையும் பூ ஜை அறையிலே வைத்து விழக்கேற்றி வழிபடுகிறார்கள் இதற்க்கு பேர் பக்தி அல்ல ஒரு மன பயம்தான்

கடவுள் என்பது ஒன்றுதான் எல்லோருக்கும்  ஆனால் அதற்காக நாம் எல்லா கடவுள் படங்களையும் எல்லா ஆலயங்களையும் தேடி ஓடி ஓடி போக வேணுமா?  ஒரே ஒரு கடவுளை நினைத்து வழிபட்டால்தானே பக்தி மார்கம் என்று சொல்லலாம்?

சிந்தையிலே எமக்கு ஒரே ஒரு வடிவம்தான் தெரியவேண்டும் அதை நோக்கிதான் எமது பக்தியும் நம்பிக்கையும் இருக்க வேண்டும்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே  அப்படி மனசு சொல்ல வேணும் நம் சிந்தையும் அவ் வழியே நடக்கவேணும் ஏதோ ஒரு நம்பிக்கை ஓரே நோக்கு வேணும் நாம் தெருவில் வாகனத்தை ஓட்டும் போது நேரே பார்த்து ஓட்டினால்தான் நாம் நினைத்த இடத்தை போய் சேர முடியும் அது போலேதான் பக்தி வழி போவதற்க்கும் ஒரே குறிகோளும் ஒரே ஒரு கடவுள் சிந்தனையும் மட்டுமே தேவை

இங்குள்ள மக்கள் என்னடா என்றால் ஒரு கடவுள் உதவி செய்யாவிட்டாலும் மற்ற கடவுள் ஆவது உதவி புரிவார் என்கின்ற ஒரு எண்ணதிலே எல்லா கோயிலுக்கும் ஓடி போகிறார்கள் சைவ கோயில்களில் கொடியேற்றம் தொட்டு தேர் தீத்தம் பூங்காவனம் என்று எல்லவற்றுக்கும் போகிற சில சைவ பெருமக்கள் ஞாயிற்று கிழமைகளில் சேர்ச் க்கு போவதை தவற விடுவதில்லை அங்கும் தமிழிலே பிராத்தனை வைக்கும் கலேலோயா என்று ஒன்று கூடும் தமிழரது யேசுவின் பாதைக்கும் பிராத்தனையில் பங்குபற்றி அவர்களுடன் உணவும் உண்று இழைபாறி வருவதும் உண்டு இது எல்லாம் ஒரு பொழுது போக்கா? இல்லை பக்தியா?
கேட்டால் எல்லாம் ஒரே கடவுள் எங்கே போனால்தான் என்ன ? என்று எக்காள பேச்சு

ஓன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் இந்த பாடல் வேறே காதில் ஒலிக்கிறது

நான் வாய் மூடி மொனமாகிறேன்
கவி மீனா