Samstag, 23. Oktober 2021

 

இந்த நாய்

இது என்ன தலைப்பு  என்று யோசிப்பீர்கள் எதுக்கெடுத்தாலும் சிலர் இந்த நாய் இப்படி செய்திட்டுது என்று ஆட்களை திட்டி கொண்டே இருப்பார்கள் அது பிள்ளைகளாகட்டும் சக மனிதர்களாகட்டும் நட்பு என்று வந்து சொரண்டிக்கொண்டு போனவர்களாகட்டும் இந்த நாய் இப்படி செய்திட்டுது என்று திட்டு வோரே அதிகம் பேரு, ஆனால் நாய் அப்படி ஒரு தீங்கும் செய்யாது பாருங்க!


ஒரு பிடி சோறு கொடுத்தாலே அது சாகும் வரை நன்றியோடு வாலை ஆட்டி கொண்டு எம் பின்னே வரும், ஆனால் மனிதர்கள்தான் உருட்டி உருட்டி தண்டி விழுங்கினாலும்

ஓடி ஓடி உதவிகளை நாம் செய்தாலும் எல்லா உதவியும் பெற்று முடிய கெட்ட வேலைகளை எமக்கு செய்து போட்டு ஓடுவது வழக்கமாகி விட்டது, திண்ட சட்டிக்குள்ளை பேலும் என்றும் சொல்வார்கள் நாயை அது ஒரு நாளும் அப்படி செய்வதாக தெரியவில்லை, அது வழக்கமாக தான் மலம் கழிக்கும் இடத்துக்கு போய்தான் மலம் கழிக்கிறது, அது தமிழன் வளர்த்த நாயாகட்டும் வெள்ளையர் வளர்கும் நாயாகட்டும் ஒருக்கா பழகி விட்டால் அது தன் இடத்துக்கே போகிறது,

நன்றி கெட்ட மனிதர்கள்தான் இங்கை நாம் கை ஏந்தினம் என்பதை மறந்து அந்த வீட்டுக்கே தீங்கிழைத்து செல்கிறார்கள் இப்படி கேவலமான மனிதர்களை திட்டுவதற்கு நாயை ஏன் இழுத்து பேசணும் என்றுதான் நான் கேட்கிறேன்

நாய்க்கு ஒரு நாள் தர்மர் அவரது  செருப்பை நாய் கவ்வி கொண்டு போனதாலே  ஒரு சாபம் போட்டாராம்

நீ மறைவில் உடல் உறவு கொள்ளாமே நடுதெருவிலைதான் உடல் உறவை வைப்பாய் என்று

ஆனாலும் நாய்கள் எந்த நாளும் உடலுறவு வைப்பதில்லை பாருங்க!  அதுகள் கார்திகை மார்கழி மதங்களில்தான் தன் துணையை தேடி திரிவதாகவும் உடல் உறவு கொள்வுதாகவும் சொல்ல படுகிறது

ஆனால் சாபம் போட்ட தர்மர் முதல் சாதாரண மனிதர்கள் வரை  இந்த காமத்துக்காக இரவு பலாய் அலைகிறார்கள்  ஒன்றிருக்க இன்னுமொன்று அல்லது ஒன்று போனால் வேறு ஒன்று இவர்களுக்கு வயது எல்லையோ வரையறையோ இல்லை பாருங்க!

இதுக்கு ஒரு சிலரே விதி விலக்கு!

ஊரிலை நாய்கள் பாடு கஸ்டம்தான் சில மனிதர்களுக்கே சாப்பாடு கிடைக்காத போது நாய்களுக்கு யாரு புது சாப்பாடு தட்டிலை வைத்து போடுகினம்? மிச்சம் சொச்சம் அதுவும்  நிலத்திலை கூட போடுவினம் அதனால்தான்

 நாலாம் பிறையை கண்டால் அந்த மாதம் நாய் படா பாடு என்று சொல்லுவினம் ஊரிலை அங்கே, ஆனால் நாய்கள் வெளிநாட்டில் நல்லாகதான் பேரும் வைத்து வளர்க்கபடுகின்றன அதுக்கென படுக்க இடமும் சாப்பிட குடிக்க தட்டும் அதுக்கான சாப்பாடும் வேளா வேளைக்கு வளர்பவர்கள் கொடுபதை நான் பார்த்துள்ளேன், அப்படியில்லாது ஒரு நாய் கவனிப்பாரில்லாது விட பட்டால் அதை வந்து அரசாங்கம் பிடித்து கொண்டு போய் பராமரிக்கும் இடத்தில் விட்டு விடும்

ஆனால் என்ன அது நக்கிதான் தண்ணியை குடிக்க வேணும், கடலுக்கு போனாலும் அதனால் அள்ளி குடிக்க முடியாது அங்கும் நக்கிதான் குடிக்கும் அதன் தலைவிதி அப்படி!

அது என்னவோ நாய்கள் அங்கும்சரி இங்கும்சரி நன்றியாகவும் மனிதர்களுக்கு பாது காப்பாகவும்தான் இருக்கின்றன, நாய்களுக்கு விசேஸ  அறிவு இருப்பதால்தான் நாய்களை மட்டும் பொலிஸ்நாய்களாகவும் பார்வை அற்றோருக்கு பாது காப்பாகவும் பயிற்சி அளிக்க படுகின்றது

நாய்களுக்கு மூளையில் ஒரு வைரஸ் கிருமி தொத்துவதால்தான் விசர் பிடிக்கிறது அப்பதான் அது ஆட்களை கடிக்க வருகிறது ஆனால் சில மனிதர்கள் நித்தம் நித்தம் விசர்நாய்போலேதானே நடந்து கொள்கிறார்கள்!

கத்துவதும் குளறுவதும் வீட்டிலை இருபவரை தீய சொற்களால்  கடித்து  குதறுவதுமாய்  காலத்தை ஓட்டுகிறார்கள் இப்படியான கேவலமான மனிதர்களை  திட்டுவதற்கு நன்றியுள்ள நாயை நாம் இழுக்க கூடாது

இதைதான் நான் சொல்ல வந்தேன் ஒரு பிடி சாப்பாடு போட்டால் நாய் காலமெல்லாம் உன் பின்னே வருகிறது ஆனால் சமைத்து சமைத்து போட்டாலும் தாலி கட்டிய புருஸனுக்கு நன்றியும் இல்லை, நட்பென்று சொல்லி வந்து வந்து சாப்பிட்டு போன  தமிழருக்கும் விசுவாசமில்லை இதுதாங்க உண்மை!

இந்த நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா!

 கவி மீனா

 

நாதியற்று போகாமல்

மண் குதிரையை நம்பி

ஆற்றில் இறங்கினால்

நட்டாற்றில் உயிர் போகும்


பாதி குருடனை கை பற்றி

போனதாலே

பாதியிலே வாழ்க்கை

முடிஞ்சு போச்சுது

 

நீதி நியாயம் பார்த்து வாழ்ந்தால்

நெஞ்சில் நின்மதி அற்று போகுது

சாதி சனம் பார்காமே பழகி பார்த்தாலும்


பிறவியிலே உள்ள குணம்தான்

கடைசி வரை நிக்குது?

ஆதி மனிதனை போலே

வாழ்ந்துவிட்டால்

நோயுமில்லை பிணியும் இல்லை

அகதிகளும்தான் இல்லை

 

நீ பாதி நான் பாதி என்று

வாதித்து வாதித்து

வாக்கு  வாதங்களும் கூடி

குற்றவாளி யாரு பிரதிவாதி

யாரு என்று அறியாமல் போகுது

மீதி காலம் போவது எப்படியோ?

 

சேதி கேட்டு ஓடி வர உறவும்

இல்லை என்றால்

நாதியற்று போகாமல்

பாதிமதி சூடிய ஆதி சிவன்

தாழ் பணிந்து அவன் கதியாய்

வாழ்ந்திடுவோமே!

கவி மீனா