Sonntag, 21. Januar 2024

 

படிப்பினையாகும்

கரும்பு கூட அடிவரை இனிக்காது

வாழ்க்கையும் இறுதி வரை சுவைக்காது

பசியிருக்கும் வரைதான் உணவும் ருசிக்கும்

பருக பருக பாலும் கசக்கும்

பழக பழக நட்பும் வெறுக்கும்

கை கோர்த்து நடந்த உறவும் கைகலப்பில் பிரியும்

ஒரு தட்டில் உண்ட உறவும் ஒட்டாமல் போகும்

 

நீ பாதி நான் பாதி என்று சொன்ன  காதலும்

நீ யாரோ நான் யாரோ என்று மாறி போகும்

உடல் உரசி கண்ட காமமும் முதுமை வர காணாமல் போகும்

தென்றலாய் வீசிய காற்றே புயலாக அடிக்கும்

தூரிய சாரல் பெரு வெள்ள பெருக்காய் ஓடும்

காலங்கள் ஓட காதலும் ஓடும்

மனங்களும் குணங்களும் மாற

மனிதர் வாழ்க்கையும் ஒரு படிப்பினையாகும்

கவி மீனா

 

பசி வந்தால்

Mexico இலே புழு,  பெரிய கறுத்த றும்பு எல்லாம் பொரித்து சாப்பிடுறாங்கள்  என்று ஒரு TV (Galileo )  புரோகிராமில் பார்தனான்,

சீனாகாரன் பாம்பு,  பங்கொக் தாய்வான் காரங்கள் தவளை, எலி ஆபிரிக்காக காட்டுவாசிகள் வொவ்வால், புழு இப்படி எல்லாம் சாப்பிடுறாங்கள்,  எங்களுக்கு அருவருப்பானவை அவங்களுக்கு சுவை மிகுந்து ( delicates food ) உணவு.

அடுத்வன் என்ன செய்யுறான் என்ன சாப்பிடுறான் என்று பார்கிற நம்ம சனம் கூட ஆதிகாலத்தில் சகல காட்டு மிருகஙங்ளையும் வேட்டையாடி சுட்டு சாப்பிட்டுதானே வாழ்ந்தார்கள், கால போக்கிலை கையாலே அள்ளி நக்கி சாப்பிட்ட தமிழர்கள் இன்று மேசையும் கத்தி கரண்டியும் பாவித்து சாப்பிடுற அளவுக்கு காலத்தின் வளர்ச்சியும்

நாகரீகமும் மேலை நாட்டு கலாச்சாரமும் நமக்குள்ளே கலந்து விட்டதுதான் உண்மை!

பசி வந்தால் பத்தும்  பறந்திடும் என்பது பழnkhழி, இப்ப கையிலை காசு வாயிலை தோசை என்றாகி விட்டது நிலமை, அடிக்கடி ஏதாச்சும் நொருக்கு தீனிகளை சாப்பிடுவதால் பசியே எடுப்பதில்லை சில பேருக்கு, எக்கசக்க மாத்திரைகளை போடும் நோயாளிகளுக்கு பசி எடுப்பதில்லை காரணம் மருந்துகளின் பக்க விளைவு நாவின் சுவையை கூட இல்லாமல் பண்ணி வீடுகிறது பாருங்க!


அந்த நாளிலை கூழ் என்று காச்சி சிரட்டையிலை வைத்து குடித்தவனும், பழைய சோற்றை அடுத்தநாள் போட்டு பிரட்டி அள்ளி சாப்பிட்டவனும், ஆடு மாடு வெட்டி எறியுற களிவு நிறைந்த குடலை கூட எறியாமல் சமைத்து சாப்பிட்டவனும்  கூட இன்று வெளிநாடு வந்த பின் அதையே மேசையிலை வைத்து சாப்பிடுறான் இது தெரியாமே நாம அடுத்த நாட்டு காரன் என்ன சாப்பிடுறாங்கள் என்று ஆராய்ச்சி செய்கிறோமே இதை நினைத்தால் சிரிப்புதானஇ வருகிறது

உலகம் ஒன்றுதான்,  உயிர்களுக்கு இரத்தமும் ஒரே நிறம்தான் ஆனால் அதில் வாழும் மனிதர்கள்தான் நிறம் மாறி, குணம் மாறி, மனம் மாறி, பழக்க வழக்கங்களும் மாறி வாழுறாங்கள்.

எல்லா உயிர்களையும் கடவுள் மண்ணில்தான் செய்து  உயிர் கொடுத்ததாக சொல்ல படுகிறது  ஆனால் அந்த உயிருக்குள்ளே உள்ள மனசை எப்படி உருவாக்கினார்?

 

கவி மீனா