சுத்துது சுத்துது
சுத்துது சுத்துது
சுழன்று
சுத்துது
கன நேரம் கடந்தும்
சுத்துது
கணணி திறக்க ஒரு
வளையம்
சில
நேரம்
சுத்துது
அதை பார்த்து பார்த்து
கண்ணும்
சுத்துது
கடிகார முள்ளில் கம்பி
சுத்துது
சத்மிட்டு சுழன்று சுத்துது
கால சக்கரம் சுழன்று சுத்துது
அதில் மனித வாழ்வும்
நின்று
சுத்துது
சுத்துது சுத்துது
பூமி
சுத்துது
கண்ணுக்கு தெரியாமலே
அதுவும்
சுத்துது
சூரியர் சந்திரர்
சேர்ந்து
சுத்துது
அதில் கோள்களுமே ஈர்பில்
சுத்துது
வண்டி சக்கரம் உருண்டு
சுத்துது
சுமைகளும் அதில்
ஓடி
சுத்துது
என்னை சுற்றி எல்லாம்
சுத்துது
அதை நினைத்து பார்த்தால்
தலையும்
சுத்துது
சுத்துவது எல்லாம்
சுத்தாமல்
நின்றாலும்
பூமி மட்டும் சுத்தி
கொண்டே
நிக்குது
முடிவு இல்லாமல் சுத்தி
கொண்டே
நிக்குது
கவி மீனா