Montag, 6. Dezember 2021

 

மார்கழி மாதம்

தூரலோடு காற்று வந்து

முகத்தில் உரசி செல்லுதே!

பனி புகாரினுடே தூரத்து


வெளிச்சம் மின்னி  மின்னி தெரியுதே!

சில்லென்று குளிரில்

தேகம் சிலு சிலிர்த்து நிக்குதே!

மாரி மாத குளிர் இங்கே

என் மனதை வாட்டி செல்லுதே!

திரு வெம்பா பாடல் ஓசை

இன்னும் என் காதில் வந்து ஒலிக்குதே!

ஊரில் வாழ்ந்த நினைவுகள்

இன்னும் நெஞ்சில் சக்கரை புட்டு

போலே  இனிக்குதே!

 மார்கழி  மாத பனி மூட்டம்

கண்ணை மூட வைத்து

சிந்தனையில் ஆழ்த்துதே!

கவி மீனா

Mittwoch, 10. November 2021

 

நாட்டு நடப்பு

கொரோனா வந்ததும் வந்திச்சுது அது போறா பாடாய் தெரியலை என்னமோ சீனா காரன் செய்தது எல்லாம் கெதியிலை உடையும் என்பாங்கள் ஆனால் சீனா காரன் செய்து விட்டது என்ற சொன்ன கொரோனா அழியாமல் பெருகி கொண்டு அல்லே போகுது பாருங்க!


ஆயுதம் இன்றி ஆணுகுண்டு இன்றி நாலம் உலக மகா யுத்தம் நடக்குது இதில் யார் போவார் யார் இருப்பார் என்பது யாருக்குதான் தெரியும்?

வேலை வெட்டி இல்லாமலே வீட்டுக்குள்ளே முடங்குவோரும் சோறு தண்ணியில்லாமே பசியில் வாடுவோருமாய் நாட்டுக்கு நாடு பஞ்சம்

சினிமாவும் விழுந்தது வியாபாரமும் படுத்தது விவசாயமும் முடங்குது விலைவாசியும் ஏறி போச்சுது போற போக்கை பார்த்தால் வாய்க்கரிசி கூட கிடைக்காமல் போகலாம் காசு இருப்பவருக்கும்  வாங்க அரிசி இல்லை என்றால் காசையா சாப்பிட முடியும்?

இது மட்டுமா வேலைக்கு போக முடியாது சனம் வீட்டுக்குள்ளே முடங்கியதால் வீட்டுக்குள்ளே ஆணும் பெண்ணும் ஆளை ஆளு குத்தம் சொல்லி ஓயாத சண்டை சில வீட்டிய் இந்த நிலமையிலும் சன தொகை பெருகுது

வீட்டிலை பெண்களுக்கு வேலைக்கு ஓய்வில்லை வெட்டியாக ஆண்கள் ரெலிபோனில் அரட்டை இதிலை ரெலிபோன் யாருக்கு என்று அதிலும் சச்சரவு

காதுக்குள்ளை சொருகிவிட்டு கைதொலை பேசியிலை 24 மணி நேரமும் ஊர்வம்பு அரட்டை என கதைச்சக்கொண்டு வேலை செய்யும் பெண்களுமுண்டு சிலரு சின்னதிரை ஊர்வம்பு என பொழுது போக்கினதும் உண்டு இப்ப வீட்டிலை கணவன்மார் வோச் டோக் போலே நிற்பதாலே சில பெண்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் திரு திரு என்று முழிக்கிறாங்க பாருங்க!

வளவு இருந்தால் தோட்டத்தையாச்சும் செய்யலாம் வெளி நாடு வந்தவருக்கு தோட்டம் ஏது துரவுதான் ஏது?

அதிகமான தமிழருக்கு நாலு சுவருக்குள் வாழ்க்கை அதிலும் குளிர் வந்துவிட்டால் சிலர் ஐன்னலை கூட திறந்து விட்டு நல்ல காற்றை உள்ளை விடாத வீடு அங்கு சுவாத்தியம்தான் ஏது?

ஊரிலை காடு  கடற்கரை வரப்பு என நடந்தவர்கள் கூட வெளிநாடு வந்து கூண்டுக்குள்ளே வாழ்க்கை!

கூண்டு கிளியை துறந்து விட்டால் அது பறந்து போகுது ஆனால் வெளிநாடு வந்து கூண்டுக்குள்ளே வாழுகின்ற மனிதர்களை துறந்து விட்டாலும் பறக்க முடியாது காரணம் வாழ்க்கை மட்டுமல்ல காலும் முடங்கி போனது

இதுதாங்க உண்மை!

கொரோனா வந்ததாலே சுவாசிக்க காற்றும் இல்லை முகமூடி போட்டதாலே  மூச்சும் முட்டுது முக மூடிக்குள்ளே நிற்பது நண்பனா எதிரியா என்பதும் தரியியாமே காலங்களும் ஓடுது

இரண்டு ஊசி போட்டாச்சு நின்மதியாய் இருக்கலாம் என பார்த்தால் மூன்றாம் ஊசியும் போட சொல்லி வருமாமே சில வேளை ஒவ்வொரு வருடமும் போட்டாலும் போடலாம்

ஏதோ இருக்கும் வரை குத்த சொன்னா குத்ததானே வேணும் இறந்து விட்டால் மனிதனும் ஆளை ஆளு குற்றம் சொல்லி குத்தமாட்டாங்க ஊசியும் குத்த மாட்டங்க பாருங்க!

இதை விட பெரிய பிரச்சனை என்னவென்றால் கன பேரு வீட்டிலை இந்த கொரோனாவாலும் பசி பஞ்சம் அடக்கு முறையாலும் பயத்தாலும்  ஆளை ஆள் பார்த்து பார்த்து அலுப்பு தட்டி போனதாலே மனநிலையும் பாதிச்சு

மனநோயாளி ஆகி போனவங்க பல பேரு பாருங்க!

சில ஆண்கள் ஓடிஓடி அடுத்த பெண்களை பார்த்து சிரித்து நடுவிலை நின்று கும்மாளம் போட்டு தானும்

சுப்பர்மான் என்று ஐம்பம் காட்டினவங்க இப்ப மேடை இல்லை மைக்கும் இல்லை கொண்டாட்டமும் இல்லை

 முடங்கி போன வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை உணர்ந்து பார்க முடியாட்டி மனிதனாக பிறந்தும் பயனேதும் இல்லையே!

கொரோனா சிலருக்கு படிப்பினையாகவும்  சிலருக்கு தண்டனையாகவும்  அமைந்ததுதான் உண்மை!

கவி மீனா

 

சீழ் பிடித்தசிந்தனை 

டண்டநக்கா டண்டநக்கா

ஒரு தண்ட சோறு கிங்கு

புட்டுக்கிட்டு போட்டாரு இன்று

இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான்

என்று ஆனதுதான் வாழ்க்கை


இந்த மனித வாழ்க்கை

உட்கார்ந்த இடத்தில் இருந்தாரு

ஓடி ஓடி ஒழிந்தாரு

ஒட்டாண்டியா வாழ்ந்தாரு

காலன் வந்த போது வகையாகதான்

 மாட்டிகிட்டாரு

 

சுடுகாட்டில் பிணம் எரிந்த தீயும்

இன்னும் ஆறலை

கோட்டான் ஒன்று அலறுது

அவல சத்தம் கேட்குது

நாயும் நரியும் ஊளையிட்டு

ஓடி ஓடி திரியுது

கழுகும் காகமும் அடுத்தவன் சொத்தை

பிச்சு தின்ன சுற்றி சுற்றி பறக்குது

 

என்டை சொத்து என்டை சொத்து என்று

அடிபடுவோர்தான் எத்தனை

இன்றிருப்போர் நாளை இல்லை

இதுதானே உண்மை

சீழ் வடியும் உடம்புக்குள்ளே

சில மனிதருக்கு எத்தனை

சீழ் பிடித்தசிந்தனை

 

என்டை என்டை என்று சொன்னவர்கள்

ஒரு பிடி மண்ணை கூட

அள்ளி செல்ல முடிந்ததா?

கண்ணை மூடி விட்டாலே

காட்சி கூட தெரியுதா?

இந்த உலக காட்சி கூட தெரியுதா?

 கவி மீனா

 

Samstag, 23. Oktober 2021

 

இந்த நாய்

இது என்ன தலைப்பு  என்று யோசிப்பீர்கள் எதுக்கெடுத்தாலும் சிலர் இந்த நாய் இப்படி செய்திட்டுது என்று ஆட்களை திட்டி கொண்டே இருப்பார்கள் அது பிள்ளைகளாகட்டும் சக மனிதர்களாகட்டும் நட்பு என்று வந்து சொரண்டிக்கொண்டு போனவர்களாகட்டும் இந்த நாய் இப்படி செய்திட்டுது என்று திட்டு வோரே அதிகம் பேரு, ஆனால் நாய் அப்படி ஒரு தீங்கும் செய்யாது பாருங்க!


ஒரு பிடி சோறு கொடுத்தாலே அது சாகும் வரை நன்றியோடு வாலை ஆட்டி கொண்டு எம் பின்னே வரும், ஆனால் மனிதர்கள்தான் உருட்டி உருட்டி தண்டி விழுங்கினாலும்

ஓடி ஓடி உதவிகளை நாம் செய்தாலும் எல்லா உதவியும் பெற்று முடிய கெட்ட வேலைகளை எமக்கு செய்து போட்டு ஓடுவது வழக்கமாகி விட்டது, திண்ட சட்டிக்குள்ளை பேலும் என்றும் சொல்வார்கள் நாயை அது ஒரு நாளும் அப்படி செய்வதாக தெரியவில்லை, அது வழக்கமாக தான் மலம் கழிக்கும் இடத்துக்கு போய்தான் மலம் கழிக்கிறது, அது தமிழன் வளர்த்த நாயாகட்டும் வெள்ளையர் வளர்கும் நாயாகட்டும் ஒருக்கா பழகி விட்டால் அது தன் இடத்துக்கே போகிறது,

நன்றி கெட்ட மனிதர்கள்தான் இங்கை நாம் கை ஏந்தினம் என்பதை மறந்து அந்த வீட்டுக்கே தீங்கிழைத்து செல்கிறார்கள் இப்படி கேவலமான மனிதர்களை திட்டுவதற்கு நாயை ஏன் இழுத்து பேசணும் என்றுதான் நான் கேட்கிறேன்

நாய்க்கு ஒரு நாள் தர்மர் அவரது  செருப்பை நாய் கவ்வி கொண்டு போனதாலே  ஒரு சாபம் போட்டாராம்

நீ மறைவில் உடல் உறவு கொள்ளாமே நடுதெருவிலைதான் உடல் உறவை வைப்பாய் என்று

ஆனாலும் நாய்கள் எந்த நாளும் உடலுறவு வைப்பதில்லை பாருங்க!  அதுகள் கார்திகை மார்கழி மதங்களில்தான் தன் துணையை தேடி திரிவதாகவும் உடல் உறவு கொள்வுதாகவும் சொல்ல படுகிறது

ஆனால் சாபம் போட்ட தர்மர் முதல் சாதாரண மனிதர்கள் வரை  இந்த காமத்துக்காக இரவு பலாய் அலைகிறார்கள்  ஒன்றிருக்க இன்னுமொன்று அல்லது ஒன்று போனால் வேறு ஒன்று இவர்களுக்கு வயது எல்லையோ வரையறையோ இல்லை பாருங்க!

இதுக்கு ஒரு சிலரே விதி விலக்கு!

ஊரிலை நாய்கள் பாடு கஸ்டம்தான் சில மனிதர்களுக்கே சாப்பாடு கிடைக்காத போது நாய்களுக்கு யாரு புது சாப்பாடு தட்டிலை வைத்து போடுகினம்? மிச்சம் சொச்சம் அதுவும்  நிலத்திலை கூட போடுவினம் அதனால்தான்

 நாலாம் பிறையை கண்டால் அந்த மாதம் நாய் படா பாடு என்று சொல்லுவினம் ஊரிலை அங்கே, ஆனால் நாய்கள் வெளிநாட்டில் நல்லாகதான் பேரும் வைத்து வளர்க்கபடுகின்றன அதுக்கென படுக்க இடமும் சாப்பிட குடிக்க தட்டும் அதுக்கான சாப்பாடும் வேளா வேளைக்கு வளர்பவர்கள் கொடுபதை நான் பார்த்துள்ளேன், அப்படியில்லாது ஒரு நாய் கவனிப்பாரில்லாது விட பட்டால் அதை வந்து அரசாங்கம் பிடித்து கொண்டு போய் பராமரிக்கும் இடத்தில் விட்டு விடும்

ஆனால் என்ன அது நக்கிதான் தண்ணியை குடிக்க வேணும், கடலுக்கு போனாலும் அதனால் அள்ளி குடிக்க முடியாது அங்கும் நக்கிதான் குடிக்கும் அதன் தலைவிதி அப்படி!

அது என்னவோ நாய்கள் அங்கும்சரி இங்கும்சரி நன்றியாகவும் மனிதர்களுக்கு பாது காப்பாகவும்தான் இருக்கின்றன, நாய்களுக்கு விசேஸ  அறிவு இருப்பதால்தான் நாய்களை மட்டும் பொலிஸ்நாய்களாகவும் பார்வை அற்றோருக்கு பாது காப்பாகவும் பயிற்சி அளிக்க படுகின்றது

நாய்களுக்கு மூளையில் ஒரு வைரஸ் கிருமி தொத்துவதால்தான் விசர் பிடிக்கிறது அப்பதான் அது ஆட்களை கடிக்க வருகிறது ஆனால் சில மனிதர்கள் நித்தம் நித்தம் விசர்நாய்போலேதானே நடந்து கொள்கிறார்கள்!

கத்துவதும் குளறுவதும் வீட்டிலை இருபவரை தீய சொற்களால்  கடித்து  குதறுவதுமாய்  காலத்தை ஓட்டுகிறார்கள் இப்படியான கேவலமான மனிதர்களை  திட்டுவதற்கு நன்றியுள்ள நாயை நாம் இழுக்க கூடாது

இதைதான் நான் சொல்ல வந்தேன் ஒரு பிடி சாப்பாடு போட்டால் நாய் காலமெல்லாம் உன் பின்னே வருகிறது ஆனால் சமைத்து சமைத்து போட்டாலும் தாலி கட்டிய புருஸனுக்கு நன்றியும் இல்லை, நட்பென்று சொல்லி வந்து வந்து சாப்பிட்டு போன  தமிழருக்கும் விசுவாசமில்லை இதுதாங்க உண்மை!

இந்த நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா!

 கவி மீனா

 

நாதியற்று போகாமல்

மண் குதிரையை நம்பி

ஆற்றில் இறங்கினால்

நட்டாற்றில் உயிர் போகும்


பாதி குருடனை கை பற்றி

போனதாலே

பாதியிலே வாழ்க்கை

முடிஞ்சு போச்சுது

 

நீதி நியாயம் பார்த்து வாழ்ந்தால்

நெஞ்சில் நின்மதி அற்று போகுது

சாதி சனம் பார்காமே பழகி பார்த்தாலும்


பிறவியிலே உள்ள குணம்தான்

கடைசி வரை நிக்குது?

ஆதி மனிதனை போலே

வாழ்ந்துவிட்டால்

நோயுமில்லை பிணியும் இல்லை

அகதிகளும்தான் இல்லை

 

நீ பாதி நான் பாதி என்று

வாதித்து வாதித்து

வாக்கு  வாதங்களும் கூடி

குற்றவாளி யாரு பிரதிவாதி

யாரு என்று அறியாமல் போகுது

மீதி காலம் போவது எப்படியோ?

 

சேதி கேட்டு ஓடி வர உறவும்

இல்லை என்றால்

நாதியற்று போகாமல்

பாதிமதி சூடிய ஆதி சிவன்

தாழ் பணிந்து அவன் கதியாய்

வாழ்ந்திடுவோமே!

கவி மீனா

 

Freitag, 17. September 2021

 

தடுப்பூசி 

இரவு முழுதும் தூக்கமில்லை

காரணம் விடிஞ்சால் தடுப்பூசி போட போறாங்கள் என்று


எத்தனையோ ஊசி இதுவரை போட்டாச்சு ஆனாலும் இந்த கொரோனா (
Covid 19 ) தடுப்பூசிக்கு

இம்மட்டு பயம் அத்தனை பயமுறுத்தல்கள் இதுவரை அந்த தடுப்பூசியை பற்றி வெளியான சேதிதான் என்னையும் பயத்துக்கள்ளாக்கியது


இல்லாட்டி ஊசி போடுவதே எனக்கு ஒரு யுஜிப்பி மற்றர்
,

விடிய 5 மணிக்கே எழும்பி வெளிகிட்டு 8 மணிக்கே டொக்கர் இடத்துக்கு போனால் அங்கை றோட்டுவரை சனம் கியுவிலை நிக்கினம்

அம்மளவு சனம் தடுப்பூசியை விரும்பி போட வந்திருப்பது நல்ல விடயம் என்றே நான் நினைத்தேன், எல்லாரும் தடுப்பூசியை போட்டால்தான் இந்த நோயின் பாதிப்பு இந்த நாட்டை விட்டு போகும்

நெஞ்சு படக் படக் கென்று அடிக்க அவர்கள் தந்த பேப்பர்களை நிரப்பி கொடுத்ததும் என்னை கூப்பிட்டார்கள், நானும் பயத்தோடுதான் நடப்பது நடக்கட்டும் அம்மாளாச்சி துணை என்று தடுப்பூசியை ( Byontech ) போட்டு கொண்டன்

அது ஒன்றும் நோவலை வளக்கமாக மற்ற ஊசிகளை  ஏத்துவது போல அவர்கள் ஏற்றி விட்டார்கள் எனக்கும் பெரிதாக நோகவும் இல்லை

எனி எப்படி நோகுமா? காச்சல் வருமா? தெரியாது ஒரு 15 நிமிடம் அங்கு இருந்து விட்டு ரக்சி பிடிச்சு வீடு வந்து சேர்ந்தன், அப்பாடா என்று மனசில் ஒரு நின்மதி எனி இரண்டாவது ஊசி அடுத்த மாசம் கிடைக்கும்

இந்த  தடுப்பூசி ( Byontech ) எல்லாருக்கும் கிடைக்காது ஏதோ கடவுளின் அருள் எனக்கு கிடைச்சது

நேற்று மலை போல இருந்த பயம் இன்று பனி துளியாக உருகியது

அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து இந்த கொரோனாவை விரட்ட முடியுமானால் அதை போலே மகிழ்சி வேறு எதுவுமே இன்றைய கால கட்டத்தில் இல்லை என்பேன்

இன்று 400 பேருக்கு குறையாமல் தடுப்பூசி போட போவதாக பேசி கொண்டார்கள், கிளினிக்கில் வேலை செய்யும் பெண்கள் மெசினை விட வேகமாக ஓடி ஓடி வேலை செய்வதும், இப்படியான மருத்துவ வசதிகளும், மருந்தும் கண்டு பிடிச்சதும் எல்லாமே கடவுளின் செயல்தான் விஞ்ஞானிகள் மருந்தை கண்டு பிடித்தது என்னவோ உண்மைதான், அதற்கும் கடவுளின் அருள் இன்றி எதுவுமே நிறைவேறாது

என்பது எனது நம்பிக்கை!

 

தனி வழியே

என்னத்தை சொல்ல ?


நேரமோ ஓடுது

நினைவுகளும் கூடுது

வாழ்க்கை மட்டும் விட்ட இடத்தில்

அரக்காமல் நிக்குது

காலங்களும் மாறுது

பருவங்களும் குளிரும் மழையுமாய்

வந்து போகுது

எம்மை சுற்றிய மனித உருவங்களும்

நாளுக்கு நாள் மாறுது

 

அன்பு என்று வந்த உறவும்

வம்பாகி போகுது

நட்பு என்று நினைபதும்

நயவஞசகமாய் ஆகுது

மாறத அன்பும் நேர்மையான நட்பும்

உலகில் இல்லையென்றானது

வருபவர் வரட்டும் போபவர் போகட்டும்

 மனித வாழ்வோ சில நாள்

இதில் யார் வந்தென்ன

யார் போய் என்ன

நம்ம வழி என்றும் தனி வழியே!

Mittwoch, 1. September 2021

 

இதுதானே  வாழ்க்கை சக்கரம்

வாழ்ந்தது போல் நீ நடித்தாய்

வாழ்வதாக நானும் நடித்தேன்

உலகமேடையிலே நீயும் நானும் நடிகரே

எச்சில் சோற்றை உண்பவனும்


அடுத்தவன் இலையில் எடுப்பவனும்

எல்லமே பசிக்குதான்

சிலர் வாழ்வு உடல் பசிக்குதான்

 


ஆட்டுக்கல்லு அம்மி கல்லு என

பூட்டி வைத்த வரும்

போகும் போது ஒரு கூழாம் கல்லை

கூட எடுத்து செல்லவில்லை

 காணி  வீடு என பொத்தி பொத்தி

பாத்த நிலம் இன்று

யார் யாரோ வந்து போகும்

சந்தை மடம் ஆனது

 

ஊருக்கு உலை வைப்போர்  வீட்டில்

இன்று  உலை வைக்கவில்லை

இது கொரோனா தந்த தண்டனையா

இல்லை கடவுள் கொடுத்த தண்டனையா?

யார் அறிவார் உலகில்?

 

எவர் வருவார் எவர் போவார்

என்பதும் தெரியாது

சுயநலலமான வாழ்க்கையிலே

யாரும்  உண்மை அன்பும் இல்லை

நன்றி உணர்வும் இல்லை

யார்தான் ஒட்டி இருந்தாலும்

பாடையிலே போகையிலே

யாரும் கூட வருவதுமில்லை

 

காதென்ன தோடேன்ன கழுத்து நிறைய

நகையென்ன கை குலுங்க வளையல் என்ன

பட்டென்ன பொட்டென்ன பவிசாய் வாழ்ந்தென்ன

பேய் பிடித்தால் மூலையிலே இருளோடு ஒதுங்கிடுவர்

தீயில் இட்டால் எல்லாமே தீஞ்சுதானே போய் விடும்

 

காற்றை உள்ளிழுத்து நீரை பருகி

நிலத்தில் நடந்து ஆகாயத்தை பார்த்து

கடைசியிலே தீயோடு போகுது

இந்த ஐம்பூதங்களின் சேர்கையே

இந்த உடலை தந்தது அந்த

ஐம் புதங்களினாலே உயிரும் வாழுது

அந்த ஐம் புதங்களுக்குள்ளே உடலும் சாயுது

 

சுத்தி சுத்தி பூமி வருகுது

அதில் சுத்தி சுழன்று உறவும் பெருகுது

வந்து போகும் உறவும் கூட நடக்கும் பயணியும்

பாதை மாறி போகுது பயணங்களும் மாறுது

மனித நேயம் ஒன்று மட்டும்

 மாறாது இருந்து விட்டால்

மானிட வாழ்க்கையும் மாசாக போகும்

இதுதானே  வாழ்க்கை சக்கரம்

அதுவே ஓம் என்னும் தத்துவம்

கவி  மீனா