Sonntag, 6. Dezember 2015

இரண்டு வரி கவிதைகள்
 
தேனை குடிக்க மலரில் அமரும் தேனீ தேனை உறிஞ்சி செல்கிறது
தேவைக்காக எம்மிடம் வரும் உறவுகளோ எமது இரத்தத்தை அல்லவா
உறிஞ்சி குடிக்கின்றன
கவி மீனா



எதுவும் கிடைக்காத வரைதான் மனசு அதை அடைய துடிக்கும்
கிடைத்தவிட்டால் ஆசை தீர்ந்து விடும்
கவி மீனா
விதை மண்ணில் விழுந்தால் அதன் முளை நிலத்தை கிளித்து எழும்
மனிதன் மண்ணில் சாய்ந்தால் அவனது புகழ் விழித்து எழும்
கவி மீனா
அறை
 
பிறக்கும் முன்னே கருவறை
துள்ளி திரிகையில் பள்ளியறை
பருவம் வந்தால் மணவறை
ஓய்வு கொள்ள  படுக்கையறை
வாழ்கை பாதை முடிந்தால் கல்லறை
 
ஐம்பூதங்களினால் ஆன உடம்பில்
ஐம்புலன்களை  தந்த இறைவன்
மனிதன் வாழ்கையிலே
ஐந்தறைகளை அறைந்து
வைத்த அதிசயம்தான் என்ன ?
கவி மீனா
இஞ்சி
 
இஞ்சி இடுப்பழகா என்று ஒரு கமலகாசன் பாடியது போலே ஒரு அருமையான பாடல் வந்திச்சு
இப்போது இஞ்சி இடுப்பழகி என்று ஒரு படம் வெளியாகியுள்ளது
இஞ்சிக்கு இடுப்பு அழகோ அது எங்கே இருக்கோ எனக்கு தெரியாது ஆனால் இஞ்சியில்லாமல் என் அடுப்படி இருக்காது.
 
தினமும் இஞ்சி நம் உணவோடு சேர்வது நமது ஆரோக்கியத்துக்கு உகந்தது
இஞ்சியை இடித்து தேனீராகவோ, தேங்காய் மிளகாய் உப்பு புளி கருவேப்பலை வெங்காயம் சேர்த்து துவையலாகவோ அல்லது சிறு துண்டுகளாக வெட்டி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு பால் தேசி புளி கலந்து சலாட் போலவோ
 
தேனில் கலந்தோ அல்லது அதிகாலை தேனும் தேசி புளி யும் கலந்தோ  இப்படி பலவிதமாக இஞ்சியை நாம் உண்ணலாம் குடிக்கலாம்.
 
இஞ்சி வயிற்றில் ஏற்புடும் அஜீரண கோளாறுகளையும் வயிற்று வலியையும் குணப்படுத்தும்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
இரத்தத்திலுள்ள கொழுப்பை கரைக்கும் பிறஸரை கட்டுப்படுத்தும்
மேலும் தடிமல் பிடித்தால் குடினீராக மற்ற மூலிகைகளுடன் (கொத்த மல்லி மிளகு தூதுவளை இலை திற்பலி )  சேர்த்து அவித்துகுடிக்க தடிமல் சுகமாகும்
இப்படியாக இஞ்சி பல நோய்களுக்கு மருந்தாகுவதால்
இஞ்சியை நம் வீட்டு வைத்தியராக முதல் எண்ணி அவரை  எப்போதும் பத்திரமாக வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
 
இஞ்சி தேனீர் குடித்தும் வயிற்று வலி நிக்காவிடில்தான் வைத்தியரை நாட வேண்டும்.
 
இஞ்சி சேர்து சமையல் செய்யும் போது இறைச்சி வகைகள் மிருதுவாகுவதுடன் செமிபாடும் அடைய உதவியாக இருக்கிறது
அத்துடன் நல்ல சுவையுட்டியாக இஞ்சி உள்ளது.
இஞ்சி துண்டுகளை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் ஒரு மேசை கரண்டி சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள வாயு தொல்லைகள் நீங்கும்
தேனும் தேசி புளியும்  இளம் சுடு நீரில் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும், தொப்பை வற்றும் என்பது நம் மூதாதையர்கள் கூறிய இயற்க்கை மருத்துவமாகும்.
கவி மீனா

Samstag, 7. November 2015

டை
 
ஆனைபந்தியில் ஒரு  தேனீர் கடை
அதிலிருக்கும் என்றும் சுவையான வடை
ஆரோக்கியத்து க்கு வேணும் நடை
மழை வந்தால் தேவை குடை
இன்று யார் தலையை பார்த்தாலும் டை
ஆண்களின் கண்கள் தேடுவதோ இடை
பெண்களுக்கு அழகு தருவது அழகிய தொடை
மதிப்பை தரும் அடக்கமான உடை
 
ஓடி பாயும் வெள்ளம் திறந்தால் மடை
வந்து பிடிக்கும் தீராத நோய் கூடினால் எடை
ஐந்து தானியம் அரைத்து செய்தால் அடை
ஊழியம் இல்லாது போனால் வரும் முடை
வாழ்க்கை பாதையில் வந்து விழும் தடை
அதை தூக்கி போட முடிந்தால்
தெரியும் விதியின் கேள்விக்கு விடை
கவி மீனா