Mittwoch, 31. Juli 2013


காதல் ஒரு தொடுவானம்

காதல  ஜெயிக்காவிடில் காதலர்கள் சாகிறார்கள்

காதல் ஜெயித்துவிட்டால் காதலை சாக அடிக்கிறார்கள்

தொடுவானம் போலே தொலை தூரத்தே தொட முடியாது மனதில் தெரிகின்ற காதலை உண்மை என்று நம்பி தொலை தூரம் ஓடினேன் வாழ்க்கiயின் ஓரத்துக்கு வந்து நிற்கின்ற போதிலும் மனதில் கற்பனையில் கோலமிட்ட உண்மை காதலை காணவில்லை நான் காணவில்லை இன்றுவரை நான் காணவில்லை

காதல் என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனைதானோ? காசும் காமமும் தான் இந்த உலகத்தை ஆட்டி படைகிறது பசு தோல் போத்த புலிகளை கண்டு பசு என்று நம்பி நாம் கிட்டதே போய் பால் கறக்க முடியுமா? புலிக்கு இரையாகதான் போக முடியும் அது போலதான் காதல் என்று நம்பி கல்யாணம் வரை போனபின் காசு பணம் சுற்றம்  சூழல் என்று பாயும் புலிகளால்  காதல் போன இடம் தெரியாமல் போய்விடும்

வாழ்கை என்னும் கடலிலே காதல் என்னும் ஓடத்தில் நாம் ஏறும் போது  சுகமாக அக்கரை போய் சேர்வோம் என்ற நம்பிக்கையில்தானே ஏறுகின்றோம்? நடு கடலிலே போகும் போது   சூறாவழி சுழன்று அடித்தால்  ஓடம்தான் தாங்குமா? நாம் அக்கரைதான் போய் சேர முடியுமா? சுழலில் அகப்பட்டு சுக்கு நூறாக உடைந்து தில்லு தில்லாய் போய் நாலா திக்கும் சேருகின்ற ஓடத்தின் துண்டுகள் போல்  கரை சேராத  சில மனித வாழ்கை அது விதியின் விழையாட்டு

நெக்கு உருக நெகிழ வைக்கும் காதல் கதைகள் எல்லாம் இப்போது சினிமாவில் மட்டும்தான் காதல் இல்லையேல் சாதல் என்று சொன்ன காதல் எல்லாம் கல்யாணத்தின் பின் காணாமலே போவதென்ன? சேராத காதலர்கள் மட்டுமே இலக்கியத்தில் நிலைத்து நிக்கின்றார்கள் சேர்ந்து விட்ட காதலரோ வாழ்கையிலே முடியும் மட்டும் போராடி  பின் விவாகரத்து கோரி நீதி மன்ற வாசலிலே போய் நிக்கிறார்கள்

கடமை முடிந்நததும் கல்யாணம் ஆக என்று பெற்றவர்கள் வாழ்தி விடை கொடுக்க கல்யாணம் ஆனதும் பல தம்பதிகள் விவாகரத்தில் போய் நிற்க்க  இல்லையேல் ஊருக்கா உறவுக்காக சில ஆணும் பெண்ணும் கொத்தடிமை வாழ்வில் உழன்று நிற்க்க ஆண் பெண் உறவு எல்லாம் கொஞ்ச காலமே நிலைத்து நிற்க்க இதுதான இல்லறமா? வள்ளுவன் சொன்ன நல்லறமா? இதுக்கு பேரு திருமணமா?

ஊரை கூட்டி உறவை கூட்டி பல ஆயிரம்  பணத்தை செலவு பண்ணி மேளதாளத்தோடு தாலி கட்டி ஓரு கல்யாணம் பின் பல அயிரம் பணத்தை செலவு பண்ணி மண முறிவு தேடும் போது மனசுகள் உடைந்து விடும் உறவுகள் முறிந்து விடும்

தொடு வானம் போலே தொட முடியா துரத்தே சிலர் வாழ்வில் காதல்

கவி மீனா

இன்றைய அறிவா ளி

தப்புக்களை தட்டி கேட்டால்

அவனே ஒரு குற்ற வாளி

உண்மை மட்டும் பேசி வட்டால்

அவனே ஒரு ஏமாளி

எல்லாத்துக்கும் ஒத்து பாடினால்

அவன் ஒரு பேமாளி

உதவிகள் செய்தே வாழ்கையில்

தன் நிலை இழந்தவன் ஒரு கோமாளி

கண்டதை திண்டு வண்டியன் ஆனால்

அவன் ஒரு நோயாளி

துவக்கு பிடித்து குண்டு அடிபட்டு

செத்தவன் எல்லாம் போராளி

படிக்காமலே அடுத்தவரை ஏமாத்தி

பிழைப்பவனே இன்று அறிவாளி

அவனே இன்று அறிவாளி

கவி மீனா

 

அடிமைகள்
 

அடிமைகள்  பலவிதம்

சிலர் காதலுக்கு அடிமை

சிலர் காமத்துக்கு அடிமை

சிலர் போதைக்கு அடிமை

சிலர் புகழ்ச்சிக்கு அடிமை

சிலர் பணத்துக்கு அடிமை

சிலர் பதவிக்கு அடிமை

ஒரு சிலரே அன்புக்கு அடிமை

கவி மீனா

Samstag, 20. Juli 2013


சிவபுராணத்தின் வழியில்

தம்மை தாம் அறியாத காரணத்தால் தான் மனிதர்கள் மாயையில் கட்டுண்டு துன்பம் என்னும் படு குளியில் போய் விழுகிறார்கள் நமக்கு நம்மை அறிய உதவும் அரு மந்திரம் நமச்சிவாய என்னும்  மந்திரம் என சிவபுராணம் விழக்குகின்றது

சப்த கோடி மந்திரங்களுக்கும் நடுநாயகமாய் விழங்குகிறது நமசிவாய என்னும் பஞ்சாட்சரம் ஆகும் சிவபுராணத்தை மனம் ஒன்றி படித்து அதை முற்றும் முழுதாய் அறிந்து கொண்டால் நம் துன்பம் யாவும் ஆதவனை கண்ட பனி போலே ஒரு நொடியில் மறைந்து போகும்  என சொல்லபடுகிறது

நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஐம் பூதங்களையும் தன்னுள் அடக்கியுள்ள இந்த பஞ்சாட்சரத்தை முறையாக தினம் ஓதி வரில் ஐம் பூதங்களின் வல்லமையும் நாம் அடைய பெற்று உடலும் மனசும் நின்மதியில் திளைக்கும் என்பது சிவன்ரகசியம் என  சிவபுராணத்தில் சொல்லப்படுகிறது

நிலம்

நீர்

சிநெருப்பு

வாகாற்று

ஆகாயம்

இதுவே நமசிவாய என சொல்லப்படுகிறது ஐம் பூதங்களின் வல்லமையை நாம் பெற வேண்டில் தினமும் நமசிவாய என ஓதி வருதல் அவசியமாகும் இதன் சிறப்பை கீழே வரும் பாடல் மேலும் நன்றாக விழக்கி சொல்கின்றுது.

நமசிவாய என்னும் அச்சரம்

சிவன் இருக்கும் அச்சரம்

உபாயம் என்று நம்புதற்க்கு

உண்மையான அச்சரம்

கபாடமுற்ற வாசலை 

கடந்து போன வாயுவை

உபாயமிட்டு அழைக்குமே

சிவாய ஐந்தெழுத்துமே

சிவாய ஐந்தெழுத்திலே

தெளிந்து தேவர் ஆகலாம்

சிவாய ஐந்தெழுத்திலே

தெளிந்து வானம் ஆளலாம்

நாமும் சிவபுராணத்தை தேடி அறிந்து நம் அறிவை பெருக்கி  நம் மனநிலைகளில் ஏற்படுகின்ற குழப்பங்கள் நீங்கி

வழ்கையில் நின்மதி அடைய நமசிவாய என்னும் சொல் நமக்கு துணையாகும்

கவி மீனா