Sonntag, 20. Juli 2014


உண்மைகள் சுடும்

தேங்காய் பால் விட்டு ஒரு வெண் பொங்கல் செய்து தேங்காய் மிளகாய் கருவேப்பிலை சின்ன வெங்காயம் உப்பு புழி சேர்த்து ஒரு சம்பலும் செய்து சாப்பிட்டால் என்ன ருசி என்ன சுவை இது நமது வெண் பொங்கல் அல்லது பால் புக்கை என்று சொல்கிறோம்.

அட இதைதான் சிங்களவரும் செய்து போட்டு கிரிபத் உம் பொல் சம்பலும் என்று சொல்லி சாப்பிடுறாங்கள் புக்கை என்று சொன்னால் சிங்களவருக்கு கோவம் வரும் காரணம் அது அவங்களுக்கு வேறு பொருள் படுது  கெட்ட வார்தை ஆகிறது.

அதை விடுங்கப்பா நாங்கள் கும்பிடுகிற பிள்ளையாரை தான் அவங்கள் கணதெய்யோ என்று கும்பிடுறாங்கள் இன்னும் ஏன் நாங்கள் கட்டுற சேலையை தான் அவங்கள் கொஞ்சம் மாற்றி கட்டுறாங்கள்.

ஒரே நாட்டிலை விழைகிற  இந்த அரிசி மரக்கறி பருப்பு  மற்றும் கடலிலே பிடிக்கிற மீன் வகை இதைதான் கொஞ்சம் வித்தியாசமாக சமைகிறாங்கள் சாப்பிடுறாங்கள்.

 

இது எல்லாதுக்கும் மேலாக வெட்டி பார்த்தால்  தமிழனுக்கும் சிங்களவனக்கும் இரத்தம் ஒரு நிறம்தான் சிவப்பு நிறம்தான் பிரம்மம் என்று எல்லா உயிர்களும் பிரமத்தின் தோற்றம் என்று தானே சொல்கிறார்கள்.

இருவருக்கும் உடலிலே குருதி சிவப்பாக ஓடுது இரண்டு பக்கத்திலும் கடல் நீல நிறமாக தானே ஓடுது? நாம் தமிழை எழுதுகிறோம் சிங்களவர் மலையாழம் போல காட்சி தரும் சிங்களத்தை எழுதுகிறார்கள்   பல சொற்கள் ஒன்றாகவே இருக்கிறது.

அன்னிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயருக்கு அடிமையாகி வாழ்ந்து அவனது மொழியை விழுந்து விழுந்து படித்து  தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசி வேலை செய்த தமிழன் அன்னிய மொழியை ஆங்கிலத்தை பேசும் போது பெருமை பட்டான், ஆங்கிலேயரின் யேசுவை ஏற்று கொண்டு மதம் மாறிய பல தமிழர்  இன்றும் வெளி நாடு வந்தும் மதம் மாறி கொண்டே இருக்கிற தமிழர் புத்தரை மட்டும் ஏற்க மறுத்து விட்டான், புத்தனும் யேசு போலே மனித வடிவில் வந்த தேவ தூதன் தானே?

ஐரோபா எங்கும் இன்று பரவி வாழும் தமிழன் ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் கஸ்டமான மொழிகளை கஸ்டப்பட்டு ஓடி ஓடி படிக்கிறான் காரணம் அன்னிய நாட்டிலே  பிர ஜா உரிமை எடுக்க வேணும் என்னும் நோக்கம் மட்டுமின்றி  அன்னிய நாட்டிலே வேலை செய்து ஒயிரோவிலே பணத்தை மூட்டை கட்ட வேணும் என்னும் குறிக்கோளுமாகும்.

வெளி நாடு வந்த தமிழனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று போராட்டமா செய்கிறாங்கள்? இல்லை கழிவு கூடம் கூட அன்னிய நாட்டிலே கழுவி தன் வயிற்றை கழுவுகிறான் பல தமிழன். படித்தவன் கூட இங்கே பரதேசி போலே கூலி வேலை செய்கிறாங்கள் ஆனால் சொந்த நாட்டிலே ஒரு சிங்கள மொழியை கற்க மாட்டோம்  என அடம் பிடித்தாங்களே, வெளி நாடுகளில் கஸ்டப்பட்டு படிக்குமா போலே  அங்கும் கொஞ்சம் முயற்ச்சி பண்ணி சிங்களத்தை கற்று இருந்தால்  இன மொழி மத வேறு பாடு தான் வந்து இருக்குமா?

இதை எல்லாம் சொல்ல நான் ஒன்றும் அரசியல் வாதி இல்லை சும்மா ஒரு அறிவாளிதான்  அறிவாளி என்று சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டாங்கள் காரணம் நம்ம தமிழனுக்கு உள்ள பொறாமை குணம்.

தப்பி தவறி தன்னும் உண்மை நாங்கள் பேச கூடாது பாருங்கோ காரணம் உண்மைகள் சுடும் என்பதுதான் உண்மை.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen