Sonntag, 6. Juli 2014

அம்பிகையை துதி மனமே


அம்பிகையை துதி மனமே
 

இந்த பூமி சத்தியம் பரிமளிக்கும் தெய்விக பூமியாக இருக்கும் வரை அற்புத சக்திகள்  இறை அருளை எங்கும் பிரதிபலித்தது இந்த பூமி ஒரு காலத்தில் ஞான பூமியாக திகழ்ந்தது உண்மை.

ஆனால் இன்று ஆன்மீகம் குன்றி அதர்மம் தலை தூக்கி நிக்கும் வேளையிலே இறை அருளும் குன்றி போகிறது அதனால் பஞ்சமும் இயற்கை அழிவும் பெருகி ஏதோ ஊழிக்காலம் நெருங்குவது போல் இருக்கும் நிலையை இன்று பூமி காண்கிறது என்றால் பூமிக்கு இறை சக்தி குறைந்து போவதையே எடுத்துக்காட்டுகிறது

அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாக விழங்குகின்ற பரம் பொருள் தாய் வடிவாகி குருவாகி குவலயம் தன்னில் திருவடி வைத்து ஆன்மாக்களின் ஈடேற்றம் கருதி பற்பல வடிவில் எழுந்தருளி அருள்பாலித்தாள்

காளியாய் கழி நடனம் புரிந்தவள், துர்கையாய்  சூரனை வதம் செய்தவள், பார்வதியாய் சிவனோடு சரிபாதி கொண்டவள், கருமாரியாய் மகமாரியாய் முத்துமாரியாய் அன்னை அபிராமியாய் காமாட்சி என  சகல வடிவம் கொண்டவள் அவளே, சரஸ்வதியாய் இலக்குமியாய் சகல நன்மைகள் செய்பவள் அவளே, கைலையிலும் இமயத்திலும் அண்டதிலும் அகிலத்திலும் எங்கும் நிறைந்த எம் மாகாசக்தியை துதி மனமே. ஆதி சக்தி நாயகியை துதி மனமே.

 

'உதிக்கின்ற செங்கதிர் உச்சிதிலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்க மாலை

துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்குமதோய மென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழு துணையே"

 

என்று அபிராமி அன்னையின் அழகை அபிராமி பட்டர் தன் அபிராமி அந்தாதியில் பாடி உள்ளார்அன்னையை  மனம் உவந்து துதிப்போர்க்கு துன்பம் இல்லை அவள் அருள் காட்டி எம்மை காப்பது திண்ணமே.

எத்தனை வடிவில் வந்தாலும், எத்தனை ஆலயங்களில் இருந்தாலும், அம்பிகை ஆனவள் பக்தர்களின் உள்ளதிலே குடி இருப்பாள், அழுது மனம் உருகி வேண்டும் பக்தர்களின் குறை தீர்க்க அவள் தரணியிலே வருவாள், அது அன்பான மனித வடிவாக கூட இருக்கலாம்,  அந்த அன்பான உள்ளங்களின் மூலம் தன் ஆட்சியை அருளை பக்தர்களுக்கு கொடுக்கும் வல்லமை அந்த அம்பிகைக்கே உரிய மகத்தான செயலாகும்.

அந்த அம்பிகையை வழி பட்டு நாமும் பலன் பெறுவோமாகசகலமும் அவளே என அம்பிகையின் அருளை புரிந்து கொண்டால் அவளை இந்நாளில் துதிப்போர்க்கு துன்பம் தீரும் என்பதில் ஐயம் இல்லை.

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen