Samstag, 5. Juli 2014


அந்த இரவு


சட சட என்று காற்று சுற்றி சுழன்று அடிக்க

சோ என்று கனத்த மழையை வானம் அள்ளி   ஊத்த

பளீர் என்று மின்னல் கரு மேகத்திலே நெளிந்து ஓட

டம டம என இடி முழக்கம் காது வெடிக்க முழங்க

ஒரு பயங்கரமான  நிலையில் அந்த இரவு

இந்த கோடை இடியிலும் ஐந்து நிமிடத்துக்கு

ஒரு முறை  இரைந்து கொண்டு வானில் பறக்கும் விமானம்

மின்னி மின்னி மின்மினி பூச்சி போலே மறையும்

அதன் வெளிச்சம்

சர் என்று றோட்டில் உள்ள நீரைஅ ள்ளி அடித்த வண்ணம்

மணித்தியாலத்துக்கு ஒன்றாக ஓடும் வாகனம்

மணி பன்னிரண்டை எட்டிவிட்டதால்

எங்கோ தூரத்தே வரும் கடைசி பஸ்சின் ஓசை

மழைவிட்டபின்னும் தங்கி நின்று

கண்ணாடி ஐன்னல் மேலே விழுகின்ற

மழைதுளியின் டங் டங் ஓசை

வீட்டுக்குள்ளே சுவர்கடிகாரத்திலிருந்து வரும்

டிக் டிக் சத்தம்

இந்த நடு நிசியிலும் பயங்கரமான அமைதியை

தனிமையில் பல்கணியோரம் இருந்து

ரசிக்கின்ற என் இதயத்தின் லப் டப்  சத்தம்

பக்கத்து வீட்டு திறந்திருந்த ஐன்னுல் வழியாக வந்த

குழந்தையின் அழுகுரல்

இப்படி என்னை சுற்றி எத்தனை ஒலிகள்

அந்த இரவில்

சிந்தித்துப்பார்த்தேன் உலகத்தில்

இந்த வேளையில் எத்தனை

ஐனனமோ எத்தனை மரணமோ

எத்தனை ஓசைகள் எத்தனை துயரங்கள்

எத்தனை இதயங்கள்

அழுகின்றதோ யார் அறிவார்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen