Samstag, 12. Juli 2014


அன்பு

அன்புதான் உலக உயிர்களை ஆக்கவும், அழிக்கவும் கூடியது ஒருத்தர் எம்மேலே அன்பு காட்டி அரவணைத்து ,ஒற்றுமையக, உதவியாக வாழும் போது எற்படும் மன நிறைவும், நின்மதியும் எம்மை வாழ்வில் உயர வைக்கிறது,  அதே மனிதர் காட்டியது உண்மை அன்பு இல்லை, போலி நடிப்பு அல்லது சுயநலம் ஏமாற்றம் என அறியும் போது எமது இதயம் வெடித்து சுக்கு நூறாகி போகிறது.

அந்த துயர வாழ்கையில் இருந்தும், மன கவலைகளில் இருந்தும் மீண்டும் எழுந்து சிலரால் முன்னேற முடியாமலும் போகலாம், வாழ்கை இருண்டும் போகலாம், மரணத்தை தழுவவும் கூடலாம், ஆழாத்துயரத்தில் நாம் ஆழ்ந்திருக்கும் போது அன்பு காட்ட யாராச்சும் வந்தால் அந்த அன்பே எங்கள் மன துயரத்துக்கு அரு மருந்தாகிறது.

ஆகவே அன்பு எம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது, எத்தனை கோடி பணம் இருந்தாலும் அன்பு காட்ட யாரும் இல்லாவிடில் அங்கு சந்தோசம் இருப்பதில்லை, ஐந்து அறிவு படைத்த  ஜீவன்களே அன்புக்கு அடிமை பட்டு கட்டுண்டு எம் காலடியில் நிக்கும் போது மனிதன் மட்டும் எம்மாத்திரம்?

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen