Sonntag, 6. Juli 2014


இந்து மதம் என்ன சொல்லுது?

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே தோன்றியதாக கூறப்படும் ஒரே மதம் இந்து மதம் என்பதை சிந்து வெளி பிரதேசத்தில் நடை பெற்ற ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து அறிய பட்ட விடயமாகும்.

இந்து மதத்திலே ஆலய வழிபாடு காணப்படுவதன் காரணம் என்ன வெனில் என்பது ஆன்மா என்றும் அந்த ஆன்மாக்கள் இறைவனோடு லயித்து நிக்கும் இடம் லயம் என்றும் அதுவே ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.

இறைவனுக்குஉருவம் இல்லை ஆனால் உருவம் உள்ள இந்த மானிடர் உய்வதற்க்காய் இறைவன் அவ்வப்போது வடிவம் கொண்டு பூமியிலே அவதரித்து இந்த உயிர்களை நல்வழி படுத்தியதாக சொல்லப் படுகிறது  பல முறை இறைவன் திரு உருக் கொண்டு காட்ச்சி தந்து நின்றதால் பல வடிவங்களில் அவனை வணங்கும் முறை வந்தாகி விட்டது.

ஆனால் எல்லா வடிவமும் ஒரு உருவம் இல்லா  அருவும் உருவுமான சக்த்தியின் தோற்றமே என்பதில் ஐயம் இல்லை

ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குணங்களில் அகப்பட்டு இந்த ஆன்மாக்ள்  அவஸ்த்தை உறும் கால் அவர்களை பதி. பசு, பாசம் என்னும் முப்பொருளையும் உணர்த்தி முத்தி நிலை அடைய செய்யவே இறைவன் உருவம் எடுத்து  இந்த பூமியிலே திருவிளையாடல்கள் நடாத்தி சென்றதாக சைவ புராண கதைகள் கூறுகின்றன.

மற்றும் ஒரு உயிர் மரணித்த போது மூன்று பொதிகளை மட்டுமே சுமந்து செலுகிறது என்பது இந்து மத தத்துவம் ஆகும்.

'மாடி, மனை, கோடி பணம் நிறைந்து குவிந்தாலும் ஒரு காதற்ற ஊசியும் வாராது தான் கடைவழிக்கே " என்று பட்டினத்து அடிகள் சொல்லி வைத்தார் அன்று. ஆனால் ஆன்மா சுமந்து போகும் அந்த மூன்று பொதிகள் என்ன தெரியுமா?

பாவம் புண்ணியம் மற்றும் பெற்ற ஞானமும் ஆகும்.

இதை தவிர உயிர்கள் இவ்வுலகில் இருக்கும்வரை  காணுகின்ற காட்ச்சியும், சேருகின்ற உறவுகளும், நாடுகின்ற இன்பங்களும், ஆடுகின்ற ஆட்டங்களும்,  எல்லாம் ஒரு மாயையின் வேலையே  ஒருவர் இறந்து விட்டால் நாளை இறக்க போகின்ற மனிதர்கள் கூடி கூடி அழுவதும்,  எனது உனது என்று சண்டையில் அமைதி இன்றி தவிப்பதும், பணம் என்ற ஒரு அசையா பொருளாலே உலகம் அசைவதும் என்ன ஒரு மாயா உலகம் அதில் பெறும் சிறிய இன்பமும் எல்லாம் இந்த உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை தான்.

 இதை உணரக்கூடிய ஆன்மாக்கள்  ஞானத்தை அடைந்து விடுகின்றன,  இந்து மதத்தின் உண்மை தத்துவத்தை புரிந்து கொண்டால் அந்த வழி நடக்கவே மனம் விரும்பும்  முதலில் இந்து மதம் என்ன சொல்கிறது ? அதை நாம்  மேலும் அறிந்து கொள்வோமா?

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen