Samstag, 8. März 2014


கொய்யா

கிளி கொத்தாத கொய்யா

அணில் கடிக்காத கொய்யா

கை படாத கொய்யா கிடைக்குமா?

எங்க ஊர்; வீட்டிலே கிணத்தடி பக்கத்திலே ஒரு கொய்யா மரம்  சிறிய காய்கள் என்றாலும் நிறைய காய்க்க தொடங்கின, அந்த காய் பழமானதும் பிடுங்கி வெட்டி பார்த்தால் உள்ளே பழுப்பு வெள்ளையான நிறமாக இருக்கும் ஆனால் இன்னும் ஒரு பெரிய வகை கொய்யா மரம் ஊரிலே இருக்கு அதன் பழத்தை வெட்டினால் உள்ளே ரோசா நிறமாக இருக்கும் இது மிகவும் சுவையாக இருக்கும்.

இரண்டு வகை கொய்யா பழமும் நல்ல சுவையும்; நல்லதொரு வாசமும் சிறந்த மருத்துவ குணமும் உள்ள பழமாகும் , கொய்யா பழம் சாப்பிடும் போது அதன் கொட்டைகள் வைரமாக இருப்பதால் சில பேர் அதை விரும்புவதில்லை, கொய்யா இலைகளை சப்பி துப்புவதால் கூட வாய்நாற்றம் பல்லுவலி போன்ற நோய்கள் தீருவதாக நம்ம ரேவதி பாட்டி விஐய் ரிவியில் வந்து சொல்லி கொண்டே இருக்கிறா இது பாட்டி வைத்தியமாகும்.

கொய்யா காயை நான் ஊரிலை கொக்க தடியால் தட்டி விழுத்திதான் எடுத்து சாப்பிடலாம், கொஞ்சம் முற்றி பழுக்கட்டும் என்று விட்டு வைத்தால் அந்த பழம் எப்படியோ காணாமல் போய்விடும், அணில் பிள்ளை வந்து பதம் பார்த்து விடுவார், இல்லை வொளவால் இரவில் சிறகால் அடித்து பறித்து கொண்டு போய்விடும், அல்லது கூட்டமாக கிளிகள் வந்து இறங்கினால்  காய் பழம்  எல்லாத்தையும் பிடுங்கி கீழே எறிந்து போட்டு பறந்து போய்விடும், கிளிகளுக்குதான் ஆக கூடாத குணம் பிடுங்கின பழத்தை சாப்பிட்டு முடிக்காமல் எல்லாத்தையும் அவா பிடித்த சில மனிதர்கள் போலே பிடுங்கி எறிவதில் ஒரு ஆனந்தும் காணுகின்றன.

மற்றவங்கள் என்னுமோ அந்த பழத்தை  பறித்து போட சொல்லி கேட்டுமாதிரி நாச பண்ணுவதில் கிளிகள்தான் மோசமானதுகள், ஆனால் அணில் பிள்ளை ஒரு பழத்தை கடித்தால் அதையே அடுத்த நாளும் தேடி பார்த்து கடிப்பார் ஒரு பழம் சாப்பிட்டு முடிந்த பின்தான் அடுத்த பழத்திலை வாய் வைப்பார்,  இவைகளின் தொல்லையால் மரம் நட்டு தண்ணி ஊத்தி பாடு பட்டவனுக்கு கையில் பழம் ஒன்று முழசா கிடைபதே அருமை, பழம் பழுக்கும் என்று காத்திருக்கும் எனக்கு பேய் கோபம்தான் வரும்.

இப்படி அணில்கள் கிளிகள் வொளவால்கள் தொல்லை மட்டும் அல்ல எங்க வீட்டில் மனிதர்களே பெரும் தொல்லை ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை காணவில்லை என்று எல்லாரும் தேடினால் கடைசியாக அவரை கொய்யா மரத்திலைதான் நான் கண்டு பிடித்தன் மரத்தின் மேலே ஏறி இருந்து சத்தமில்லாமல் எல்லா பழத்தையும் பிடுங்கி தானே தனியாக சாப்பிட்டு கொண்டு இருக்கின்றார் வீட்டுக்கு வந்தவுடனேயே கழவா? என நான் கேட்டே விட்டேன்

அத்தோடே போச்சுதா எனது மூத்த சகோதரன் பழம் முற்றி வரும் போதே அதை பறித்து வீட்டின் பின் பக்கத்தில் நின்று தானே தனிய சாப்பிட்டு போட்டுதான் வீட்டுகுள்ளே வருவார்  ஒரு பழத்தை கூட என் கண்ணிலை முழசாக காட்டவில்லை

கடைசியாக நானும் வெளிநாடு வந்தவிட்டேன் ஆனால் எத்தனை ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் என் கண்ணில் இன்னும் அந்த கொய் யாமரம் அதில் ஒரு பழம் தன்னும் எனக்கு கிடைக்காத தாபமும் என் நெஞ்சக்குள்ளே இருந்து என்னை மருக செய்கிறது.

சரி அதுதான் நம்ம தலைவிதி என்று சொல்லி போட்டு நான் இங்கு எந்த ஆசியன் கடைக்கு போனாலும் கொய்யாக்காய் இருக்கா என்றுதான் என் கண்கள் முதல் தேடும்,  சில சமயம் கொய்யா பழம் இங்கு அருமையாக கிடைக்கும் ஆனால் அடிபட்டு காய ப்பட்டு சுரங்கி போன  கொய்யா பழம்தான் இருக்கும் அதை நான் அதிக விலை கொடுத்து வாங்கி வந்து, அதே பெரும் பாக்கியம் என நினைத்து, அவலை நினைத்து உரலை இடிப்பது போலே, ஊரு கொய்ய மரத்தை நினைத்து கொண்டு மெல்ல மெல்ல கடித்து ருசித்து சாப்பிடுவன் காரணம் பாலைவனத்தில் பேரிச்சம் பழமும் ஆசியநாடுகளில் கொய்யா பழமும் ஐரோப்பாவிலே அப்பிழும் தான் சிறந்த ஊட்ட சத்து நிறைந்த பழங்கள் என்பதில் ஐயம் இல்லை.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen