Samstag, 8. März 2014


சர்வதேச மகளிர் தினம்

ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம்  உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில்  பெண்கள் புரட்ச்சி ஆரம்பித்து ரஸ்யா   ஜேர்மனி போன்ற நாடுகளிலும் ஆண்களுக்கு சமமாக ஊதியம் வேண்டி பெண்கள் போராடி சம உரிமையை பெற்று கொண்டதால் இந்த மகளீர்தினம் கொண்டாட பட்டது.

இந்தியாவில் பெண்களுக்காக  புதியதோர் உலகம் செய்வோம் என பாரதியாரே பாடி புதுமை பெண்களை  உருவாக்கினார், ஆணுக்கு அடிமையாய் வாழ பிறந்தவள் அல்ல பெண் என்று ஒரு ஆண்மகனே அன்று எடுத்துகாட்டினார்,  பெண் எனப்பட்டவள் பெருமைக்குரியவாள்,  பெண் சக்தியின் ஒரு அம்சம், அப்படிபட்ட பெண் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போலே  காலம் காலமாக ஆண்களுக்கு அடிமையாய் ,அடுப்பங்கரை பூனைகளாய், பிள்ளைகளை பெற்று தள்ளும் இயந்திரமாய், ஆண்மகனுக்கு ஆசைகளை தீர்க்கும் தாதியாய், மட்டும் வாழ்வதற்க்காக ஆண்டவன் படைத்தது போலே தமிழ் பெண்கள் வாழ்ந்தது ஒரு காலம்.

பைபிளை கையில் தூக்கும் சில மூடர்கள் கூட இன்றும் சொல்கிறார்கள் அவர்களுடைய மதத்திலே ஆணுக்காகதான் பெண்ணை அவனது விலா எலும்பிலிருந்து ஆண்டவன் படைத்ததாகவும்,  அதனால் கை கட்டி வாய் பொத்தி ஆண்மகனுக்கு அடிபணிந்து, அவனது இச்சைகளுக்கு கட்டு பட்டு, ஆசைகளை தீர்த்து அடங்கி வாழவேணும் பெண் என்று பெண்ணை அடக்கியே வாழ எத்தணிக்கிறார்கள் சில ஆண்கள் இன்னும்.

பெண்ணுக்குள் இருப்பதும் ஓர் உயிர்தான் அவளுக்கும் ஒரு மனமும் ஒரு வாழ்க்கையும் இருக்கு என்பதை மறந்து போனது சமுதாயம் , ஆனால் இன்று பெண்கள் படித்து முன்னேறிவிட்ட காலம் தனியாகவே சாதனைகளை படைத்து, சரித்திரத்தில் இடம் பிடித்து , அடிமைதனத்தை ஒளித்து, உலகுக்கு பெண்ணின் பெருமைகளை எடுத்து சொல்பவளே பெண்.

இப்படி பெண்கள் முன்னேற்றம் அடைந்த காலத்தில் கூட இன்னும் பட்டிக்காட்டு பெண்கள் சில பெண்களின் முன்னேற்றுத்துக்கு இடைஞ்சலாக, சேற்றிலே புரளும் காட்டு எருமைகளை போலே,  அடிமைவாழ்வில் உளன்று கொண்டு, கணவன்மாரின் காலடியில் உதைபட்டு  ஏச்சும் பேச்சும் மட்டும் இன்றி அடியும் சித்திரவதையும் பட்டுகொண்டு வாழுகிறார்கள்.  

இவர்கள் தனித்து முன்னேற வழிதெரியாத காரணத்தாலும்,  கல்வி அறிவு இல்லாத காரணத்தாலும், தன்கையாலே நாலு காசு சம்பாதித்து தன் வயிற்றை கழுவ முடியாத காரணத்தாலும்,  தன் வயிற்றில் உதித்த பிள்ளைகளை  நல் வழி படுத்த தெரியாமல் போவதாலும்,  தலை குனிந்து அடுப்பங்கரையிலே ஆண்களின் விருபத்துக்காக மட்டுமே அவன் வரும் நேரம் சமையலை செய்து, அவன் விட்ட மிச்சத்தை உண்டு,  கட்டிலிலே மனம் விரும்பாவிடிலும் அவனுக்காக தாதியாக கிடந்து, அல்லலுறும் பெண்கள் ஒரு ஈனப்பிறவிகளே,  பாவ பட்ட  ஜீவன்களே.

 இப்படி பட்ட பெண்கள் சுதந்திரமாய் ,ஒழுக்கமாய், மற்ற பெண்கள் வாழ்ந்தாலும் அதை எள்ளி நகையாடி தமது மனக்குறையை தீர்த்து கொள்வதில் மட்டும் பேரின்பம் காண்பது போல் நடித்து கொண்டு மனதுக்குள்ளே அழுகிறார்களே, அவர்களை போலே பெண்களுக்கு எல்லாம் மகளீர் தினம் தேவையில்லை,  பெண்ணாக பிறந்திட பெரும் தவம் செய்திட வேண்டும் என்று சொன்ன பாரதியும் இவர்களை கண்டால் கண்ணீர்தான் வடிப்பார்.

பெண்கள்தான் ஆக்கத்துக்கும், அழிவுக்கும் காரணம்,  ஒரு பெண் இல்லையேல் ஒரு ஆணுக்கு வெற்றியும் இல்லை இன்பமும் இல்லை என்பதை உணுருகின்ற ஆண் மகன் காட்டும் அன்புக்கு மட்டுமே பெண் கட்டுப்ட வேணும்,  ஒரு தாயை அன்பின் தெய்வமாய் மதிக்கின்ற புத்திரர்களை பெற்று நல் வழி படுத்துவதால் கூட ஒரு பெண் சமுதாயத்தில் மதிக்க படுகிறாள்,  அவளது சமூக சேவையாலும்,   பிறரிடத்து காட்டுகின்ற அன்பினாலும்,  அவள் மற்றவர்களால் போற்ற படுகிறாள்,  அவளது கல்வி திறமையாலும்,  நல்ல பதவியாலும்,  அறிவான செயல்களாலும் ,அவள் கீர்த்தியை பெறுகிறாள்,  இப்படி பட்ட அறிவான அன்பான பெண்கள் வாழ்ந்தாலே பெண்களுக்கு பெருமை.

மகளீர் தினத்தை கொண்டாவிருக்கும் இன்னாளில் பெண்ணின் பெருமை பற்றி எடுத்து சொல்வதில் நான் பெருமை படுகிறேன்,  அடிமை வாழ்வு என்னும் அன்பில்லாத சேற்றிலே கிடந்து உளரும் சில பெண்கள் இதை பார்த்தாவது  தம்மை திருத்தி கொள்ளட்டும்,  இல்லை சுதந்திரமாய் நின்மதியாய் வாழும் மற்ற பெண்களை நையாண்டி பண்ணாமே வாழ பழகி கொள்ளட்டும் என்பதே என் வேண் டுகோள்.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen