Samstag, 6. April 2013


அத்தி 

அத்திகாய் காய் காய் ஆலம் காய் வெண்ணிலவே -  இது  பாடல்

அத்தி பழம் பற்றி நான் அதிகம் கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் அதை நான் கண்ணால் காணவில்லை  ஊரிலே  சினிமா பாடல்களில் கூட அத்தி பழம் பற்றி வருகிறது  ஆனால் அந்த அத்தி பழம் இங்கும் வேறே பேரில் இருக்கிறது நானும் சுவைத்து பார்த்து இருக்கின்றேன் என்பது இப்போதான் தெரிகிறது அத்தி தென் ஆசியாவை தாய் நாடாக கொண்ட போதும் தற்போது மேலை நாடுகளிலும்  உற்பத்தி  செய்ய படுகிறது

அத்தி பழத்தின்  பெயர் இங்கு -   Feige

இந்த பழம் சுகர் வருத்தத்தை கட்டு படுத்த கூடியதும் இரத்த அழுத்தம் மலசிக்கல் வெண்குஸ்டம்போன்ற நோய்களை  போக்க வல்லதும் இரும்புசத்து புரட்டின் கல்சியம் பொஸ்பரஸ் விற்றமின் சத்துக்கள் நிறைய உள்ளதுமான ஒரு பழம் ஆகும் சுவை அவ்வளவு நல்லாக இல்லாவிடிலும் மருத்துவம் நிறைந்த பழம் என்பதால் அதை உண்பது நல்லதே அத்தி பழம் நாடுகளுக்கு ஏற்ப நிறம் மாறி காணபடுமாம்

அத்தி மர இலைகள் கூட சுகர் வருத்தத்தை குறைக்க வல்லதாம் எனிமேல் சுகர் வருத்தம் உள்ளவர்கள் சக்கரை சீனி என்று தேடி ஓடி  போகாமல் அத்தி பழத்தை தேடி ஓடுங்கோ  இங்கேயும் பிறஸ் ஆகவும் காய்ந்த பழம் ஆகவும் கிடைக்கிறது அத்திபழம் இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்தும் வருகிறது  ஜேர்மனியில் கூட இந்த மரம் வளர்கிறது
 

இதைதான் இந்தியாவிலே அத்தி மரம் என்று சொல்கிறார்கள் அத்தியை தேடி எனி அகிலம் எங்கும் ஓட வேண்டாம் அத்தி உங்கள் பக்கத்து தோட்டங்களிலும் இருக்கிறது எனிமேல் அத்தி மரம் ஒன்றை வாங்கி வீடுகளில் நட்டு வையுங்கள்  அத்தோடு அத்தி மரத்துக்கு குடும்பங்களில் உண்டாகும் தோஸங்களை நிவர்த்தி செய்யும் வல்லமை உண்டாம் என்று  ஜோதிடர் ரத்தினா கூறியுள்ளார் அத்தி மரம்  ஜோதிடத்திலே சுக்கிரனுக்கு ஒப்பாக சொல்லபடுகிறது சுக்கிரனின் அம்ஸமாக அத்தி மரம் கருதபடுகிறது

அத்தி மரத்திலே பூ பூப்பது தெரியாதாம் காய்கள் மட்டும் நிறைய காய்த்து இருக்குமாம் அதனால்தான்  ( கண்டு காய்க்கும் காணாமல் பூ பூக்கும் ) என்ற பழமொழி  உண்டு அத்தி மரத்துக்கு  

யாராச்சும் கன நாளைக்கு பிறகு வந்தால் சொல்லுவார்கள் அத்தி பூத்தா போலே இருக்கு என்று அதன் பொருள் என்னவெனில் அத்தி மரத்தில் பூ  பூத்து வரும் முன்னே காய் வந்திடுமாம் 

இந்த பூவை கண்டவர்கள் சொல்வது காணத என் போன்றவர்கள் கேட்பதும் நன்றே

சங்க காலத்தில் இம்மரத்துக்கு ஆதவம் என்று பெயர் சொல்லபட்டிருக்கிறது  திருகுர் ஆன் பைபிள் வேதங்கள் என மூன்று மதத்திலும் பேர் சொல்லப்ட்ட ஒரே மரம் அத்தி மரம் ஆகும்  மூன்று மதங்களும் வெள்ளிகிழையை விசேட நாளாக கருதி வழிபாடு செய்கின்றன அதே போல் வெள்ளி ஆதிக்கம் கொண்ட இந்த அத்தி மரத்தை மூன்று மதங்களும் அதன் சிறப்பiயும் அதன் மருத்துவ குணங்களையும் சிறப்பாக சொல்லி இருப்பதும்  தெரிய வருகிறது

அத்தி மரம் துலாம் இடப ராசி காரர்களுக்கு உகந்த மரமாகும் என்கிறது  ஜோதிடம்

கவி மீனா

 

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen