Dienstag, 26. März 2013


துளசி செடி

 
பாலனாய் ஏழு உலகு உண்டு பரிவின்றி

ஆல் இலை அன்ன வசம் செய்யும் அண்ணலார்

தாள் இணை மேல் அணி தன் அம் துழாய் என்றே

மாலுமால் வல்வினையேன் மடவல்லியே 

( நம் ஆழ்வார் திரு மொழி )

 

துளசி செடி கோவில்களில் பூசைக்கு உபயோக படுவதுடன் தீத்த நீரிலும்  கலந்து பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுக்க படுகிறது  அந்த துளசி ஊறிய நீரை நாம் தினமும் குடித்து வந்தாலே எமது வியாதிகள் யாவும் நீங்கி வீடும் என்பது அயுர் வேத மருத்துவ கூற்றாகும் காரணம் துளசி மூலிகை இனத்தை சேர்ந்த ஒரு மருதுவ செடியாகும்

துளசி செடியை வீட்டு தோட்டதிலோ வீட்டு மாடங்களிலோ வளர்பதாலே சுற்றாடலில் காற்று சுத்தமாக்க படுவதுடன் கொசுவின் தொல்லை குறைந்துவிடும் துளசி செடி ஒக்சிசனை மட்டும் இன்றி ஓசோன் எனப்படும் வாயுவையும் சேர்து விடுவதால் நமது சூழலை சுத்திகரித்து நச்சு வாயுகளை அழிகின்ற தன்மை வாய்ந்தது

துளசி பல மருத்துவ குணம் கொண்ட செடியாகும் தினமும் துளசி இலை ஊறவைத்த நீரை பருகி வர நீரிழிவு நோய் குறையும் என்று சொல்ல படுகிறது  ஜீரண சக்தியை அதிகரிக்கவும் வாய் துர் நாற்றத்தை போக்கவும் மேலும் சளி  மன அழுத்தம் நரம்பு தளர்ச்சி நோய்களை குறைக்க வல்லது தேனும் துளசி சாறும் கலந்து சாப்பிட்டால் சளி விட்டு போகும் என்பது ஆயுர் வேத மருத்துவம் கூறுகிறது

துளசி செடியில் பல வகை உண்டு வெண்துளசி கரும்துளசி காட்டுதுளசி இப்படி பல வகை உண்டு ஒவ்வொரு துளசிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருதவ குணங்கள் உண்டு கரும்துளசி இலையை அரைத்து தலைக்கு பூசி ஊறவிட்டு கழுவி வர பொடுகு பேன் எல்லாம் அற்று போகுமாம்

இதை விட துளசி ஆன்மீக தன்மை கொண்டதாக கருத படுகிறது இந்து மதத்திலே துளசி இலை நுனியிலே பிரம்மாவும் நடுவிலே விஸ்னுவும் அடியில் சிவனும் மற்றைய பகுதிகளிலே இரு அசுவினி தேவர்களும் எட்டு வசுகளும் பதினொரு ருத்திரர்களும் பன்னிரண்டு ஆதித்தியர்களும் எழுந்தருளி இருப்பதாக சொல்ல படுகிறது அப்படி மகிமை வாய்ந்த துளசி காட்டுக்குளே போய் வந்தாலே பிரமகஸ்தி தோசமே நீங்குவதாக நம்பபடுகிறது  துளசி செடியை வளர்து பேணி வருவோருக்கு மனம் காயம் வாக்கு சுத்த படுகிறது அத்துடன் தீய சக்தி அவ் வீட்டை அணுகாமல் துளசி செடி  காக்கிறது என்பது இந்துகளின் நம்பிக்கை

 

இப்படி எல்லாம் மகிமை வாய்ந்த துளசி செடி தமிழருக்கும் இந்து மதத்துக்கும் கடவுள் நம்பிக்கையோடு மருதுவத்தை தந்த துளசி செடி மேலை நாடுகளில் பசிலிக்கும் (Basilikum)   என்னும் வேறு பெயரில்  உணவுகளுக்கு மணம் சுவை ஊட்டும் தாவரமாக பயன் படுத்த படுகிறது இத்தாலியர் ஜேர்மனியர்கள் அசைவ சைவ உணவு எதுவானாலும் பசிலிக்கும் போடாமல் சமைப்பதில்லை அவர்களும் இந்த செடியை மருதுவ குணமும் வாசமும் உள்ளதாக கருதுகிறார்கள் ஆனால் எமது நோக்கில் பாக்கும் போது

மாடத்தில் வைத்து பூசைக்கு உபயோகிக்கும் நம்ம துளசி இலை இறைச்சி மீன் உணவோடு சேர்ந்து அவிவதை பார்க கவலையாக உள்ளது இடங்கள் மாறும் போது  தாவரங்களுக்கும் அதன் மதிப்பு கெட்டு போகிறது

கவி மீனா

 


Keine Kommentare:

Kommentar veröffentlichen