Donnerstag, 25. April 2013


சித்திர விழா

சித்திரை பவுர்ணமி இந்த நாளைதான் இலக்கியதில் சித்திர விழா என்று சொல்வார்கள் சிறப்பாக ஆற்றங்கரைகளிலே அன்று தமிழர் இரவில் ஒன்று கூடி வாத்தியங்கள் இசைத்து கொண்டாடி நிலா சோறு சமைத்து இனசனங்களோடு மகிழும் நாள் சித்திரவிழாவாகும்

இது பற்றி இலக்கியதிலும் சாண்டில்யனின் கதைகளிலும் பொன்னியின் செல்வன் கதையிலும் மிக சிறப்பாக எடுத்து வர்ணித்து சொல்லியிருக்கிறார்கள்  அதை வாசிக்கும் போது அட ஏன் நான் அன்று பிறக்கவில்லை இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று நான் கவலை பட்டு இருக்கிறேன்

மேலும் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்று சித்திர விழாவை சிறபாக கொண்டாடியதாகவும் இலக்கியத்தில் கதை உண்டு எப்போதும் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சிறப்புண்டு ஆனால் சித்திரை மாததிலே வருகிற பவுர்ணமிக்கு விசேட சிறப்புக்கள் காண படுகின்றன 

சித்திரை மாதம் வளர் பிறை 5 ம் நாளில் இருந்து சித்திர விழா ஆரம்பமாகி சித்திரை பவுர்ணமி அன்று முடிவு பெறுகிறது இன்நாளில் மீனட்சிக்கும் சுந்தரேசர்க்கும் திருகல்யாணம் நடந்ததாக சொல்லபடுகிறது இன்னாளில் எல்லா சிவதலங்களிலும் இந்த சிறப்பான திருகல்யாண பூசைகள் வேறே நடை பெறுகின்றன

இன்னாளில் தாயை இழந்தவர்கள் விரதம் இருந்து அவர்களுக்காக கடவுளை வேண்டினால் இறந்த அன்னையின் ஆத்மா மோட்சத்துக்கு போவதுடன் அங்கு தயாரின் ஆத்மா சுக போகங்களை அனுபவித்து நின்மதியாக வாழும் என்கிற ஒரு நம்பிக்கை உண்டு இந்த கடமை கூடுதலாக ஆண் பிள்ளைகளுக்குதான் உரியது என்று இந்து மதம் சொல்கிறது 

அத்தோடு இன்று சித்திர புத்திரனார் அதாவது ஐமதர்மராஐனின் காரியதரசி பிறந்த தினம் என்றும் சொல்ல படுகிறது

ஊரிலே எங்க வீட்டுக்கு பக்கத்திலே உள்ள வைரவர் கோவிலிலே சித்திர புத்திரனாரின் பிறந்த நாள் ஒவ்வொரு சித்திரை பவுர்ணமி அன்றும் மிக சிறப்பாக கொண்டாடபடும்  அங்கு பெரிய பானையிலே கஞ்சி காய்ச்சி பொங்கலும் வைத்து வைரவருக்கு பூசையும் செய்து  சித்திர புத்திரனார் பிறந்த திருநாளாம் என்று ஒரு பாடல் பஐனை போலே ஐயர் ஒரு மணிதியாலத்துக்கு மேலே பாடுவார் அதன் பிறகு எல்லோருக்கும் பிரசாதம் எல்லாம் கொடுத்து சித்திர புத்திரனாரின் பிறந்தநாள் விழா முடிவடையும்

ஆனால் காரியதரசிக்கு இருக்கிற மதிப்பு ஐமதர்மராஐனுக்கு யாரும் கொடுக்வில்லை காரணம் என்ன? பாவ புண்ணிய கணக்கு பார்த்து இன்னாருக்கு இன்றோடு ஆயுள் முடிஞ்சு போச்சு என்று சித்திர புத்திரனார் சொன்னால்தான் ஐமதர்மராஐன் நம்ம உயிரை எடுக்க வருவார்

இல்லாவிடில் எங்களை எப்போ கூட்டி போக வேணும் என்று ஐமதர்மராஐனுக்கு தெரியாது அதனாலே பாவபுண்ணிய கணக்கை பார்கிற சித்திர புத்திரனாருக்கு எங்கடை கணக்கை முடிச்சு சாவுக்கு நாள் குறிகாமே இருக்கட்டும் என்ற கள்ள நோக்கிலே லஞ்சம் கொடுபது போலே இந்த பிறந்த நாளை எங்கும் சிறபாக கொண்டாகிறார்கள் போலே இருக்கிறது
எது எப்படியோ ஊரில் இருக்கும் வரை இந்த விழாகள் எல்லாம் எமக்கு மிகுந்த சந்தோசங்களை தந்தது என்னமோ உண்மை
கவி மீனா

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen