Sonntag, 14. April 2013


ஆத்ம்ம திருப்த்தி (சிறு கதை)

இரவு நேர ஊதல் காற்று அவனை மெல்ல தாலாட்ட  அதனை கண் மூடி  ரசித்தபடி முற்றத்து நிலவொழியில் ஈஸி சேயாரில் ரவி சாய்ந்திருந்தான்  சத்தம் மெல்லமாக இருந்தாலும் வானொலியில் வந்த இரவு நேர ஒலி பரப்பு கேட்பதற்க்கு மனதிற்க்கு இதமாக இருந்தது

பழய சினிமா பாடல்கள் அவனை மிகவும் கவர்ந்த பாடல்கள் அவன் காதில் தேனாக வந்து பாய்ந்தன

வானத்திலே பால் நிலா முகில் கூட்டத்தில் மறைந்து ஒழிந்து எட்டிப் பார்த்து ஆகா எத்தனை அழகை அள்ளி சொரிகிறது எத்தனை முறை பார்த்தாலும் தினமும் பார்க்க தூண்டும்  இந்த அழகிய காட்ச்சியை ரசிக்க தெரியாதவன் மனிதன் அல்ல என எண்ண தோன்றியது ஒரு கணம்அவனுக்கு  ஓடும் மேகங்களை தூது விட்ட கதைகள் ஞாபகத்துக்கு வர அவனும் ஓடும் மேகங்கள் உரு மாறி மாறி வரும் காட்சிகளை ரசித்த படி இருந்தான் எத்தனை மன நிறைவு இந்த நேரத்தில்அவனுக்கு ஏற்பட்டது

     

ஐந்து ஆண்டுகள் வெளி நாட்டு வாழ்க்கை தந்த அனுபவ பாடம் ஒரு  ஜெயில் வாழ்க்கை  சொந்த நாட்டை விட்டு பணம் தேடவும் அமைதியை தேடியும் ஓடி அலைந்து ஏஐன்சிக்கு இருந்த பணத்தை  எல்லாம் கொடுத்து கண்டது என்ன ?  ஜே ர்மனியில் ஒரு இயந்திர வாழ்க்கைதான்  கண்ட மிச்சம்

சொன்னால் நம்ப மாட்டார்கள் இன சனத்தவர்  ஜேர்மன் வாழ்க்கையை பற்றி  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல  வெளிநாட்டிலை ஏதோ அள்ளி குவிக்க போறதாக நினைத்து ஓடி போய்  நாய் படா பாடு பட்டு வந்தவன் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டினம்  இவர் தான் நல்லா சம்பாதிச்சிட்டு வந்திட்டார்  இப்ப நாங்கள் போய் நல்லா வந்திடுவம் என்று தான் இப்படி சொல்கிறான் என்று பக்கத்து வீட்டு பாட்டி கூட சொல்லேக்கை  அதுக்கு மேலை என்ன கதை யாருக்கு அவன் எடுத்து சொல்ல  

அம்மா கூட நம்பலை ஏன் ராசா எல்லாரும் வெளி நாட்டுக்கு போய் தானே நல்லா வருகுதுகள் நீ நல்லா படிச்சனி அங்கை போய் நல்ல வேலையை  எடுத்து நல்லாய் வராமல் திரும்பி வந்து நிக்கிறாய் என்ன தான் எனி செய்ய போகிறாய்?  என்று அம்மாவின் கேள்வி

அப்பா சிவராசா பிழைக்கிற பிள்ளை தான் எங்கை போனாலும் பிழைக்கும் ஊருக்குள்ளை விலை போகாத மாடு வெளிநாட்டிலை விலை போகுமா? என ஒரு குத்தல் கதையோடை நிப்பாட்டி விட்டார் ஆனால் அவரது நண்பன் கந்தசாமி மாமா வந்த போது அவர் சொல்லியது காதில் கேட்டது

இவன் ஏதோ போய் நல்லா வரப்போகிறான் என்று சொல்லி மகளுக்கு கல்யாணத்துக்கு என்று சேர்த்து வைத்திருந்த காசை எல்லாம் ஏஐன்சி காரனுக்கு கட்டி அளந்தது தான் மிச்சம் பெடியன் போன கையோடை ஐந்து வருடம் ஏதோ ஊர் பார்த்து விட்டு திரும்பி வந்திருக்கிறான்  இப்ப வேலையும் இல்லை இருந்த மாஸ்டர் வேலையையும் விட்டாச்சு எனி திருப்பி கிடைக்குமோ தெரியலை வளந்த பொடியனோடை ஒன்றும் கதைக்க முடியல்லை என்று அவர் குறைபட்டது அவனக்கும் கேட்டது

அவனது துயரம் யார் அறிவார்?  அது என்ன வாழ்க்கை அப்பா நினைத்தாலே ஐந்து வருடத்தை பாசையும் தெரியாத  ஜேர்மன் நாட்டில்  அனியாயமாக தொலைத்து விட்ட வேதனைதான் மிஞ்சும்

படித்து பட்டம் பெற்று அந்த சொந்த ஊரான யாழ் நகரிலேயே யாழ் இந்துக் கல்லுரியில் தான் படித்த அதே பாடசாலையில் மாஸ்டராக வேலை பார்த்த போது அவன் கண்ட மன நிறைவு

அவன் வாழ்ந்த கடைசி ஐந்து வருடத்திலும் காணவில்லை  சும்மா மற்றவர்கள் போகினம் திடீரென்று பணம் பணமாக வீட்டுக்கு அனுப்புகினம் கொஞ்ச நாளிலேயே பணக்காரர் என்று வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் என்று அவன் தங்கையும் அம்மாவும் தினம் சொல்ல கேட்டு தான் அவனும் இருந்த வேலையையும் விட்டு விட்டு போனான் போய் பார்த பின் தான் தெரிந்தது எப்படி எல்லாம் தமிழ் சனம் அங்கே வாழுகினம் என்பது

இங்கே சாதி மதம் என்று பார்த்து வாழ்ந்த சனங்களும்  வீட்டை துப்பரவாக் ஒரு ஆளும் தோட்ட வேலைக்கு ஒரு ஆளும் என வாழ்ந்தவர்களின் பிள்ளைகளும் அங்கே அன்னியன் வீட்டு கழிவறைகளை அதுவும் பெண் பிள்ளைகள் தனியாக போய் கழுவுவதும் இருவு பகல் என்று பாராமல் ரெஸ்ரேறன்ட் வழியை ஆண்கள் கோப்பை கழுவி துப்பரவாக்கி  நாலு காசு சேர்த்து  இங்கே ஊருக்கு வரேக்கை மட்டும் பெரிய சொகுசாக  ஜீ ன்சும் பொப் வெட்டிய தலைமயிரோடும்  வந்து இறங்கி சோ காட்டுவதால்  ஏதோ வெளி நாடு போனால் அள்ளலாம் என நினைத்து தான் சனம் அள்ளு படுகுதுகள்

படித்து பட்டம் பெற்றவனுக்கு பாசை தெரியாத அந்த ஊரில் என்ன வேலை இருக்கு? இலங்கை தமிழன் என்று சொன்னாலே ஒரு இழக்கரமாக தான்  ஜேர்மன் காரன் கூடுதலாக நினைக்கிறான்

இவங்கள் இங்கே பஞ்சம் பிழைக்க வந்த மாதிரியும் எல்லாரையும்  ஓரே மாதிரி படிக்காத சனம் என்று தான் அநேகம் பேர் நினைக்கிறாங்கள்   அப்படி இல்லாமல் ஒரு நல்ல உடை உடுத்தி கொஞ்சம் களர் புல்லாக  வெளியிலே போனால் கண்ட

ஜே ர்மன் காரன் உடனே சொல்கிறான் உனக்கென்ன  சோசல் காசு தருகுது நீங்கள் நல்லா  திரியலாம் தானே என எரிச்சுல் மூட்டி விடுவான்

கொஞ்ச நாள் அவனும் ஒரு ரெஸ்ரேறன்ட்டில் வேலை செய்து பார்த்தான். அவனால் முடியல்லை

குனிந்து வளைந்து கழுவி துடைத்து அப்பா அந்த குளிருக்கை விடிய எழும்பி போய் பின்பு இருக்கிற அந்த  விடுதிக்கு வந்தால் சாப்பாடு வேற அவனே சமைக்கணும்  உடுப்பு தோய்த்து குளித்து அவன் வர அவன் பசியே போய் விடும்  இதை எல்லாம் விட அவனோடு கூட இருக்கிற மற்ற தமிழ் பெடியள் கூட அவனை ஒரு படித்தவனாகவோ மாஸ்டராக இருந்ததாகவோ யாரும் கணிப்பதில்லை  அங்கே எல்லோருக்கும் சமத்துவம்

அவன்  ஜேர்மனியில் அசைலம் (அரசியல் தஞ்சம் ) அடித்த போது அவனுக்கு கிடைத்த இருப்பிடம் ஒரு வீடு அல்ல  அது ஒரு பழய இடிந்த நிலையில் இருந்த பழய பாடசாலை   அதில் தான் ஒவ்வொரு ரூமிலும் மூவராக நிறைய பேர் தமிழர் மட்டும் இன்றி வேறே  நாட்டவரும் சேர்ந்தே இருந்தனர்  பொதுவான் கிச்சன் பொதுவான ரொயிலற் அவனுக்கு அந்த வாழ்க்கை அருவருப்பை தான் தந்தது  அம்மா அப்பாவோடு ஊரிலே சந்தோசமாக துப்பரவான் வீட்டில் வாழ்ந்து பழகியவனுக்கு  இந்த வாழ்க்கை

எப்படி இருக்கும்?  ஒன்றிலுமே அவனக்கு என்று ஒரு பிரிவசி இல்லை  ஒரு புத்தகம் கூட வாசிக்க முடியாது அமைதியாக .பக்கத்தில் பியர் போத்திலும் கையுமாக ஓரே அட்டகாசம் தனியா வந்ததாலே  சுதந்திரம் நாட்டுக்கே கிடைத்தமாதிரி சில தமிழ் பொடியள் ஓரே கொண்டாட்டம்

சிகரட் புகை பூட்டின அறைக்குள் இருந்து புகைத்து  ஓரே புகை மண்டலம் அவனால் அந்த மணத்தை சுவாசித்துக் கொண்டு எப்படி இருப்பது. பல தடவை இது பற்றி மற்ற பொடியளுக்கு சொல்லி சண்டை வந்தது தான் மிச்சம்
 

அவை உடனே சொல்லுவினம் ரவி நாங்கள் இவ்வளவு பேரும் வெளியிலை போறதை விட நீர் ஒரு ஆள் எழும்பி வெளியிலை போகலாம் தானே என்று  கடைசியாக அவன் கவுஸ் மாஸ்டரிடம் சொல்லி பெரிய சண்டை வந்த பிறகு தான் அவனுக்கு தனிய ஒரு ரூம் கிடைத்தது  ஆனால் அங்கை உள்ள ரொயிலற்றுக்கு போற தென்றால் கியூவில் தான் விடிய நிக்கணும்  அத்தோடை அவன்தான் அடிக்கடி அத்தனை பேரும் பாவித்த ரொயிலற்றை கழுவி துப்பரவாக்க  வேண்டும் ஏனெனில் வெறு யாருக்குமே அது பற்றி அக்கறை இல்லை

கிச்சனில் அவன் வாங்கி வைக்கிற சாமான்கள் எல்லாம் களவு போய் விடும் அவனது கழுவி துப்பரவாக கவிட்டு வைத்த பாத்திரங்களை எடுத்து சமைத்துப் போட்டு கழுவாமால் தொட்டிக்குள் எறிய பட்டிருக்கும்  வேலையால் வந்தால் கிச்சனில் இருந்து பாத்திரம் வரை கழுவி  துப்பரவாக்கி தான் அவனால் சமைத்து சாப்பிட முடியும்   சீ என்று போய் விட்டது தினமும் சண்டை அங்கு உள்ளவர்களோடு

படுக்க போய் கட்டிலில் இருந்தால் அப்ப பார்த்து வேணும் என்றோ தெரியவில்லை பெரிய சத்தமாக தொலை காட்சியோ றேடியோவோ அலறும்  

இதை எல்லாம் சகித்து வாழ பழகி கொண்டு வர அவனுக்கு கன நாள் எடுத்தது  அவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தனிமை வாழ்க்கைக்கு தன்னை பழக்கி கொண்டு வர அந்த குளிர் ஒத்து வராமையால் அவனுக்கு ஓரே சுகயீனம்  வின்ரர் முடிந்து சமர் தொடங்கேக்கை ஒரு அலர்ஜி வருத்தம் பிடித்து அது வேறை ஓரே தும்மல்   முப்பது வயதும் வந்து விட்டது வாழ்க்கையில் இன்னும் தான் நினைத்ததை பிடிக்க முடியவில்லை  ஒரு நல்ல வேலை கிடைத்தால் தனி வீடு எடுத்து போகலாம் அதுக்கு நல்ல காசு வேணும்  இதற்க்குள் வந்த காசை திருப்பி கொடுக்க வேணும்  மாதம் மாதம் அவனால் 50  ஒயிறோவுக்கு மிஞ்சி வீட்டை அனுப்ப முடியல்லை

வாழ் நாளில் அவன் செய்யாத வேலை எல்லாம் செய்து விட்டான் சின்ன வயதிலேயே அவன் மனம் எனி முன்னெற முடியாது என சோர்ந்து விட்டது  ஒரு வேளை படிக்காமல் கஸ்டத்தில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கும் அவனுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகம் போவது போலாகி விட்டது  ஒரு நாள் தீடீரென அவன் வேலை செய்த இடத்தில் நூடில் மெசினில் கை அகப்பட்டு  இடது கை சுட்டு விரல் வெட்டு பட்டு விட்டது

அத்தோடு சிக் லீவில் நின்று கழவாக பார்த்த அந்த வேலையும் போய் விட்டது  பிறகு ஒரு மாதிரி ஒரு பக்ரறி வேலையை தேடி எடுத்தால் அங்கே வேலை செய்கிற  ஜேர்மன் காரர்களுக்கு சரியான துவேசம்  அவனை மதிக்கவே மாட்டார்கள்  எப்ப பாத்தாலும் அவனை பற்றி கதைத்து சிரிப்பதே அவர்கள் வேலை  அவனுக்கு ஆத்திரம் பத்திக் கொண்டு வரும் மனதிற்க்குள் நினைப்பான் அங்கை வேலை செய்கிற சக ஊழியர்கள் அதிகம் படிக்காத முட்டாள்கள் ஆவனோ மெத்த படித்தும் அந்த பயனை இழந்து நிக்கிறான் அவர்கள் அவனை ஒரு முட்டாள் ஆக பார்க்கையில் மனம் வேதனையில் துடிக்கும்

ஒரு நாள் அவன் கேட்டே விட்டான் என்ன ஒரே நக்கல் அடிக்கிறியள் உங்கடை நாட்டிலை உங்கடை பாசையிலை உங்களுக்கு படிக்க முடியலை  படித்திருந்தால் இதை விட நல்ல வேலை எடுத்திருப்பியள் தானே  நான் என்ர நாட்டிலை நல்லா படித்து பட்டம் பெற்று விட்டு  அன்னிய நாட்டிலை பாசை வேறாக இருப்பதால் தான் இந்த வேலையை செய்கிறன் முட்டாள்களான உங்களோடு என்று  சொல்லியே விட்டான்

அதோடு அவனுக்கு அடுத்த கிழமை வேலையை நிப்பாட்டி விட்டார்கள்  எங்கே போனாலும் அவனுக்கு மன உறுத்தல் தான் மிச்சம்  

இப்ப புது சோசல் சட்டம் வேறு வந்து வேலை இல்லாமல் சோசல் கெல்ப்பில் இருப்பவருக்கு மணித்தியாலம் ஒரு ஒயிறோ வேலை என்று சொல்லி றோட்டு கூட்ட அவனை போக சொல்லி கடிதம் வந்ததும் அவன் இடிந்தே போனான்

அந்த குளிர் நாட்டிலை அத்தனைபேரும் பார்க்க  அவன் தெரு தெருவாக கூட்டினால் தான் அவனுக்கு எனி சோசல் காசு கொடுக்குமாம்  இந்த வாழ்வை வாழ்வதென்றால் ஊரிலேயே முனிசிபால்ற்றியில் சேர்ந்து சொந்த நாட்டை துப்பரவாக்கி இருக்கலாமே அன்னிய நாட்டுக்கு இவ்வுளவு பணத்தை கொடுத்து வந்து பட்டதாரியான அவன் தெரு கூட்டும்  வேலைதான் விதியாச்சு

சொந்த ஊரை துப்புரவாக்க சொன்னால் யாருமே செய்ய மாட்டினம்   சொந்த வீட்டை ஒருக்கா கூட்ட சொன்னால் கூட செய்ய கூட்ட மாட்டினம் ஆனால் அன்னிய தேசத்திலே அதிகமான  தமிழர் இதை தான் தம் தொழிலாக செய்யினம் இப்படி பணத்தை சேர்த்து தான் ஊருக்கு வந்து பவுசு காட்டி தான் அதிகம் பேர் வெளி நாடு வந்து நாசமய் போய் நிற்கின்ற நிலையை அவனால் இப்ப தான் உணர முடிந்தது  இருக்கிற மதிப்பான வேலையை விட்டு விட்டு வந்து இப்படி கஸ்டப்பட வேண்டுமா?  நாட்டிலை யுத்தம் அது இது என பல காரணம் சொன்னாலும் அப்ப என்னவோ அது சரியாக பட்டுது ஆனால் இப்ப அவன் எடுத்த முடிவு பிழை என்றே மனம் சொல்லுது

ஆறிலும் சாவு நூறிலும் சாவு  எங்கே இருந்தாலும் மரணத்தின் பிடியிலிருந்து நாம் தப்ப முடியாது

ஆனால் வாழ்கின்ற கொஞ்ச காலமாவது மன நிறைவோடு ஆத்ம திருப்த்தியோடு எமது மனதுக்கு பிடித்த வேலை செய்து பிடித்த வாழ்க்கையை அமைத்து வாழ்வது தான் சிறப்பு என முடிவு எடுத்தான்

அடுத்த நாளே அவன் தான் ஊருக்கு போவதாக ஜே ர்மன் அரசாங்கத்துக்கு சொல்லி விட்டு போன மாதிரியே ஒரு பெட்டி யோடு கட்டு நாயக்கா விமானத்தில் வந்து இறங்கிய போது தான் அவனுக்கு மூச்சு காற்றே கிடைத்த மாதிரி இருந்தது. அதுவரை சுவாசமே எடுக்க முடியாது திணறியது போல் ஒரு உணர்வு. ஊருக்கு திரும்பி  வர போவதாக ரெலி போனில் தகவல் வீட்டுக்கு சொல்லி இருந்தான்   வீட்டுக்கு வந்த போது அவலுடன் வரவேற்ற பெற்றோர் தங்கை உமா மற்றும் உறவினர் எல்லோரும் அவன் எனி திரும்பி போக போவதில்லை என்ற சேதியை கேட்டு  அவனை வினோதமாக பார்த்தார்கள் அவனால் அவர்களுக்கு நடந்தை விழக்கி சொல்லி மீண்டும் வேதனை படவோ தான் இவ்வளவு கேவலமான வாழ்க்கையை வாழ்ந்ததை எடுத்து சொல்லவோ விரும்பவில்லை

அவன் மீண்டும் தன் மாஸ்டர் வேலைக்கு அப்பளை பண்ணி இருக்கிறான் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தான் ஒரு மாதம் ஓடி விட்டது. இரவு 12 மணியாகி விட்டது  அவன் தன் கடந்த கால நினைவில் இருந்து மீண்டு வர வானொலியும் இரவு நேர ஒலி பரப்பை நிறுத்தியது அவன் நாளை விடியும் என நல்ல எதிர் பார்ப்புடன் படுக்கைக்கு சென்றான்

அதி காலை பொழுது கல கல என விடிந்தது இப்படியான காலை பொழுதை அவன் ஐந்து வருடங்கள் காணவில்லiயே .உண்மையில் எழும்பி கிணற்றடிக்கு போய் முகம் கழுவும் போதும் கடவுளை கும்பிட்டு அம்மா கையால் ஒரு கோப்பி வாங்கி குடிக்கும் போதும் வரும் நிறைவே ஒரு தனியான மன நிறைவுதான்

மனதிற்க்கு பணத்தால் மட்டும் இன்பம் கிடைப்பதில்லை இயற்க்கையின் அழகிய காட்ச்சிகளும் ஒருவிதத்தில் மனிதன் சந்தோசமாக வாழ வழி வகுக்கிறது  இருண்ட அறைக்குள் தனிமையில்

பேச்சு துணைக்கு நல்ல நண்பர்கள் இன்றி வாய்க்கு ருசியான உணவின்றி வாழ்ந்த காலம் முடிந்ததை எண்ணி ஒரு திருப்த்தி உடம்பெல்லாம் இலகுவாகிய மாதிரி ஒரு பூரிப்பு  அம்மா தந்த புட்டையும் மாம்பழத்தையும் முட்டை பொரியலையும் சுவைத்து சாப்பிடையில்  ஆகா இதுவல்லவோ  இன்பம் பசிக்கு உண்ட காலம் போய் மீண்டும்  ருசிக்காக வாழும் காலம் வந்ததே என எண்ணினான்

வாசலில் சைக்கிள் மணி சத்தம் கேட்டது  தங்கை உமா எப்பவும் கடிதம் வாங்க முந்தியே விடுவாள் அவள் இருபது வயது குமரி ஆகியும் ஓடுவதை இன்னும் விட வில்லை  கடிதம் உனக்குதான் அண்ணா என அவள் தந்த போது அது அவனுக்கு மீண்டும் வேலை கிடைத்த சேதியை  தாங்கி நின்றது  அவனக்கு தொலைத்த புதையல் மீண்டும் கிடைத்தது போல் பேர் ஆனந்தம். அம்மா எனக்கு என்னுடைய மாஸ்டர் வேலை திரும்ப கிடைத்து விட்டது என சொல்லி அவன் அம்மா மனோண்மணியை கட்டி பிடித்து நெற்றியிலே முத்தமிட்ட போது தெரிந்த அவன் மகிழ்ச்சியில் அவன் தாயும் ஒரு உண்மையை உணர்ந்தாள்

காசு பணத்துக்காக அல்ல வாழ்க்கை   என்பது வாழத்தான்  அவனது மனம் திருப்பதியாக வாழவே ஒரு வேலையும் வாழ்க்கையும் அமைய வேண்டும்   தற்போது பெருமிதமாக நிமிர்ந்து நிக்கும் தன் மகனை பார்த போது மனோண்மணி மனதிலும் ஒரு திருப்த்தி

ரவிக்கு இப்பதான் ஆத்ம திருப்த்தி ஏற்பட்டது தான் படித்த படிப்புக்கு தக்க வேலையை ஒருவன் செய்யும் போது ஒரு மன நிறைவும் அதில் ஒரு ஈடு பாடும் தானாகவே எற்படுகிறது  கிடைக்கிற பணத்தை கொண்டு வாழ்வதே நின்மதி போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று  ஏன் ஆன்றோர் சொன்னார்கள்?

மனம் நின்மதி அடையும் போதூன் உடலும் இலேசாகிறது அளவுக்கு மிஞ்சி பணத்தாசையால் வெளி நாட்டிலே ஒன்றுக்கு இரண்டாக சில பேர் மூன்றாக கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி வேலை செய்து  சிலர் அங்கே இழ வயதில் மாண்ட கதை கூட அவன் அறிந்ததே  யார் என்ன சொன்னாலும் எனி அவன் மனம் மாற போவதும் இல்லை  தன் வேலையை விட போவதும் இல்லை

 அவனக்கு ஆத்ம திருப்த்தி தரும் இந்த மாஸ்டர் வேலை அவனுக்கு சாகும் வரை போதும் கற்றதை பிரயோசன படுத்துவதாகவும் மேலும் அறிவை பெருக்குவதாகவும் உள்ள இந்த வேலையை விட்டு அவன் போய் பட்ட அவமானம் எனி ஒரு முறை வேண்டவே வேண்டாம்









அன்றைய பொழுது ரவிக்கு  ஐந்து வருடங்களின் பின் இனிய நன் நாளாக மலர்ந்தது அவன் உற்சாகமாக பாட்டொன்றை முணுமுணுத்த படி  வெளியே உலவ போனான்

 கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen