Mittwoch, 12. Dezember 2012


ஆன்மாவும் குண்டலினியும்

நம் உடலுக்கு தேவையான  உணவு உடை தூய்மை என்பவற்றை  செய்து வரும் நாம் எம் உயிருக்கு தேவையான ஓய்வை ஆறுதலை செய்ய  மறக்கின்றோம் அழுக்கு உடலிலே சேரும் போது ஸ்னானம் செய்கிறோம் துப்பரவான ஆடைகளை அணிகின்றோம் பசி எடுக்கும் போது உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தி கிடைப்பதற்கான சத்துணவுகளை தேடி உண்கின்றோம் ஐம் பொறிகளும் ஐம்புலன்களும் வேலை செய்வதால் நரம்பு மண்டலங்கள் களைத்து போகும் போது நாம் தூங்கி ஓய்வு எடுக்கின்றோம்

அதே போல நம் நுண் உடல் ஆகிய உயிருக்கும்  ஓய்வும் காப்பு தூய்மை என்பவை தேவை படுகின்றது அவற்றை தியானம் தவம்  என்னும் சீரான வழி முறை மூலம் பெற முடியும் என  முன்பு வாழ்ந்த சித்தர்கள் சொல்லியும் வாழ்ந்தும் காட்டியதாக சான்றுகள் காணப்படுகின்றன

ஓவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள உயிராற்றலான குண்டலினி என்கின்ற  சக்தி முள்ளந்தண்டின் மூலாதாரம் என்னும் அடித்தளத்தில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது அந்த சக்தியை  நமது தவம்  மூச்சு பயிற்சி மனோவலிமை என்பவற்றால் மூலாதாரம் என்னும் சக்கரத்திலிருந்து  ஆக்ஞை சக்கரம் என்று சொல்லபடுகிற நெற்றி பொட்டுக்கு கொண்டு வர வேண்டும் இதனை செய்ய எமக்கு தவமும் யோக நிலையும் அவசியமாகும் என ஆன்மீக வழி நடந்த முன்னோhகள்; சொல்லி சென்றுள்ளார்கள்

நமது முதுகு தண்டு வடத்தில் (மூலாதாரத்தில்) சுருண்டு பாம்பாக கிடப்பதுதான் குண்டலினி சக்தி சுருண்டு கிடக்கும் குண்டலினியை எழுப்பி எமது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களின் மூலம் தியானிப்பதுதான் குண்டலினி யோகா என்பது தேக்கி வைக்கபட்ட சக்தியை வெளி கொண்டு வரும் நிலைதான் தியான நிலையாகும் 

குண்டலினியை தியானித்து வந்தால் அறிவு உயிர் பேரியக்க மண்டலம் ஆகிய இம் மூன்றுக்கும் பிறபிடம் உணர்ந்து அறிவை நிறை நிலையில் ஒன்றி பழகி வந்தால் நமக்குள்ளாகவே இவ்வுலகம் இயங்கி காணும் நிலை எற்படும் இந் நிலைதான் தன்னை அறிவது (தத்துவமஸி ) என டுகிறது

சொன்ன நன் முதலாஞ் சுழுமுனையின் மேரு பற்றி

வன்னியை எழுப்பி காலால் மனம் வைத்து ஓராண்டு நோக்கில்

பொன்னின் வடிவதாகும் புகழ்திடும் அணுவும் ஆகும்

அன்னத்தின் தெய்யாநாகம் அஸ்டமா சித்தியாகும் - இது சித்தர் பாடல் ஆகும்

குண்டலினி சக்தியை உச்சம் தலையில் வைத்து தியானம் செய்து வந்தால் மூளை கபாலங்கள் நன்ங்கு செயல்பட ஆரம்பித்து மிக நுண்ணிய நிலையில் அறிவு சிரசில் நிற்க பழகுவதால் விஞ்ஞான மய கோஸ நிலையை எமது மூளை பெறுகிறது ஆக்ஞையில் குண்டலினி சக்தியை வைத்து தியானித்து வந்தால்  உயிர் ஆற்றல் சேமிக்கப்பட்டு  உடலை எந்த நோயும் அணுகா வண்ணம் காக்கிறது என திருமூலர் சொல்லியுள்ளார்

ஐம்புலன்களின் வசப்பட்டு நமது மனம் மாயை எனப்படும் ஆசா பாசங்களில் கட்டுண்டு பிறருக்கும் துன்பம் விளைவித்து தானும் துன்பத்தில் உளருகிறது இதிலிருந்து விடுபடுவதுதான் விழிப்புணர்ச்சி யாகும் இந்த விழிப்புணர்சி ஏற்படும் போது நமது ஆன்மாவுக்கு ஐம்புலன்களை கடந்து நிக்கிற நிலை  கிடைப்பதாக  சொல்லப்படுகிறது

ஐம்புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போதுதான் இன்ப துன்ப வயபடுகிறது இப்படியான உணர்வுகளை கடந்து தவம் தியானம் யோகா போன்ற வற்றில் எம்மை ஈடுபடுத்தி குண்டலினி என்னும் சக்தியை மூலதானதிலிருந்து ஆக்கினை என்னும் சக்கரத்துக்கு கொண்டு வர முடிந்தால் உடலும் மனமும் நலம் பெற்று ஆரோக்கிய வாழ்வு கிட்டும் என்பதே  உண்மை பொருளாகும்

அன்று நம் சித்தர்கள் சொன்ன வாக்கியங்கள் இன்றும் நமக்கு வழிகாட்ட உதவுகின்றது என்பதில் ஐயம் இல்லை.

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen