Montag, 10. Dezember 2012


ஓழுக்கம்

(ஓழுக்கம் விழுப்பம் தரலாம்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பபடும்)

என்பது திருவள்ளுவரின் வாக்கு  ஒழுக்கம் என்றால் நன் நெறிகளை கடை பிடித்து நல்ல முறையில் இல்லறம் காத்து வாழுதல் அல்லது திருமணமாகும் வரை பிரமாச்சாரியம் காத்து வாழ்ந்து ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வழி நடத்தல்  மேலும் தீய பழக்க வழகங்களுக்கு அடிமையாகாது நல் வழி நடத்தல் அப்படி வாழ்தலை நம் உயிரிலும் மேலாக அன்று கருதினார்கள் என பொருள் படும் அன்று ஆனேகமான இந்துக்கள் இப்படி வாழ்ந்து காட்டினார்கள் ஆனால் இன்று ஒழுக்கம் என்று சொன்னாலே இன்றைய சிறார்கள் என்ன அது ஒழுகிறது என்று நக்கல் பண்ணி சிரிக்கிறார்கள்

திசைகளை எட்டாக வகுத்தான் ( கிழக்கு - மேற்கு - தெற்கு - வடக்குவட கிழக்குவட மேற்குதென் கிழக்கு தென் மேற்கு )
இசையை ஏழாக வகுத்தான் ( 7 சுரங்கள் )

சுவையை ஆறாக வகுத்தான் (துவர்ப்பு - இனிப்புபுளிப்புகார்ப்பு - கசப்புஉவர்ப்பு )
நிலத்தை ஐந்தாக வகுத்தான் ( முல்லைமருதம் - நெய்தல் - பாலை- குறிஞ்சி)

தமிழை மூன்றாக வகுத்தான் ( இயல் - இசை- நாடகம் )
வாழ்கையை இரண்டாக வகுத்தான் (அறம் - புறம்)

ஆனால் ஒழுக்கத்தை ஒன்றாகதான் வைத்தான் தமிழன் அதை உயிருக்கும் மேலாக மதித்தான் ஆனால் இன்று அந்த ஒழுக்கம் தமிழர்களாலேயே சீரழிக்கப்பட்டு சின்னா பின்னமாக போகிறது என்பதுதான் உண்மை

மனிதன் அடைய வேண்டிய பொருள் நான்ங்கு அவை (ஆறம் பொருள் இன்பம் வீடு )என்னும் போது  எல்லோரும் இன்பத்தை தேடி ஓடுகின்றனர் ஒழிய அந்த இன்பத்தை எப்படி நல் வழியில் பெற வேணும் என்பதற்க்கு வழி தெரியாமல் அல்லது பொறுமை இன்றி கண்டதே காட்ச்சி கொண்டதே கோலம் என இன்று மக்கள் வாழ்கிறார்கள் பொருளை நாம் தேடும் போது நல் வழியில் தேட வேணும் அப்போதுதான் அப் பொருள் மூலம் நாம் நின்மதியான இன்பத்தை அனுபவிக்க முடியும்

அறத்தின் வழியே பொருளை ஈட்டி அப் பொருளின் வழியே இன்பம் தூய்த்து இவ்வுலகில் சிற்றின்பம் கைக்கும் போது உயிர்கள் வீடு பேறு அடைகின்றன என்பதை ஒளவை பிராட்டி ஒரு வெண்பா வில் விழக்கி உள்ளார்

(ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்துஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம் மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு )

பரன் என்பது எல்லா பொருளும் பரமனது அதை நாம் நல் வழியில் உழைத்து பரமன் அருளோடுதான் பெற வேணும் பெற்ற பொருளை அவன் பேர் சொல்லி தான தருமமும் செய் ய வேணும் அத்தோடு  நாமும் முறையாக நேர்மையோடு வாழ வேணும் பரமன் வாக்குபடியே நாம் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருதல் அவசியமாகும் ஒழுக்கம் என்பது எங்கும் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய போதிலும் குடும்ப வாழ்கையிலே நெறியோடு வாழ்வதே ஒழுக்கம் என முதல் சொல்ல படுகிறது பெண்களுக்கு கற்பு என்று சொல்வது போலே ஆண்களுக்கும் ஒழுக்கம் அவசியமாகும்
ஒழுக்கம் இன்றி வாழ்பவருக்கு வாழும் போதும் நின்மதி இருக்காது மாண்ட பின்பும் வீடு பேறு இருக்காது

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen