Mittwoch, 31. Juli 2013


காதல் ஒரு தொடுவானம்

காதல  ஜெயிக்காவிடில் காதலர்கள் சாகிறார்கள்

காதல் ஜெயித்துவிட்டால் காதலை சாக அடிக்கிறார்கள்

தொடுவானம் போலே தொலை தூரத்தே தொட முடியாது மனதில் தெரிகின்ற காதலை உண்மை என்று நம்பி தொலை தூரம் ஓடினேன் வாழ்க்கiயின் ஓரத்துக்கு வந்து நிற்கின்ற போதிலும் மனதில் கற்பனையில் கோலமிட்ட உண்மை காதலை காணவில்லை நான் காணவில்லை இன்றுவரை நான் காணவில்லை

காதல் என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனைதானோ? காசும் காமமும் தான் இந்த உலகத்தை ஆட்டி படைகிறது பசு தோல் போத்த புலிகளை கண்டு பசு என்று நம்பி நாம் கிட்டதே போய் பால் கறக்க முடியுமா? புலிக்கு இரையாகதான் போக முடியும் அது போலதான் காதல் என்று நம்பி கல்யாணம் வரை போனபின் காசு பணம் சுற்றம்  சூழல் என்று பாயும் புலிகளால்  காதல் போன இடம் தெரியாமல் போய்விடும்

வாழ்கை என்னும் கடலிலே காதல் என்னும் ஓடத்தில் நாம் ஏறும் போது  சுகமாக அக்கரை போய் சேர்வோம் என்ற நம்பிக்கையில்தானே ஏறுகின்றோம்? நடு கடலிலே போகும் போது   சூறாவழி சுழன்று அடித்தால்  ஓடம்தான் தாங்குமா? நாம் அக்கரைதான் போய் சேர முடியுமா? சுழலில் அகப்பட்டு சுக்கு நூறாக உடைந்து தில்லு தில்லாய் போய் நாலா திக்கும் சேருகின்ற ஓடத்தின் துண்டுகள் போல்  கரை சேராத  சில மனித வாழ்கை அது விதியின் விழையாட்டு

நெக்கு உருக நெகிழ வைக்கும் காதல் கதைகள் எல்லாம் இப்போது சினிமாவில் மட்டும்தான் காதல் இல்லையேல் சாதல் என்று சொன்ன காதல் எல்லாம் கல்யாணத்தின் பின் காணாமலே போவதென்ன? சேராத காதலர்கள் மட்டுமே இலக்கியத்தில் நிலைத்து நிக்கின்றார்கள் சேர்ந்து விட்ட காதலரோ வாழ்கையிலே முடியும் மட்டும் போராடி  பின் விவாகரத்து கோரி நீதி மன்ற வாசலிலே போய் நிக்கிறார்கள்

கடமை முடிந்நததும் கல்யாணம் ஆக என்று பெற்றவர்கள் வாழ்தி விடை கொடுக்க கல்யாணம் ஆனதும் பல தம்பதிகள் விவாகரத்தில் போய் நிற்க்க  இல்லையேல் ஊருக்கா உறவுக்காக சில ஆணும் பெண்ணும் கொத்தடிமை வாழ்வில் உழன்று நிற்க்க ஆண் பெண் உறவு எல்லாம் கொஞ்ச காலமே நிலைத்து நிற்க்க இதுதான இல்லறமா? வள்ளுவன் சொன்ன நல்லறமா? இதுக்கு பேரு திருமணமா?

ஊரை கூட்டி உறவை கூட்டி பல ஆயிரம்  பணத்தை செலவு பண்ணி மேளதாளத்தோடு தாலி கட்டி ஓரு கல்யாணம் பின் பல அயிரம் பணத்தை செலவு பண்ணி மண முறிவு தேடும் போது மனசுகள் உடைந்து விடும் உறவுகள் முறிந்து விடும்

தொடு வானம் போலே தொட முடியா துரத்தே சிலர் வாழ்வில் காதல்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen