Samstag, 6. Juli 2013

காதல் என்னும் காவியமே


 

 விரியாத மொட்டுக்கும் ஓர் அழகு

கண்படாத பருவ சிட்டுக்கும் தனி அழகு

கட்டவிழா மொட்டு இதழ் விரிக்க

 
 
சுற்றி வரும் வண்டு மெய் சிலிர்க்க

பட்டு மேனி சிட்டு அவள் புன்னகைக்க

பாடி வரும் காளை அவன் கண் சிமிட்ட

பூவிதழ் சிந்தும் தேனை பருக மனம் இருக்க

வண்டுக்கும் ஆணுக்கும் ஒன்றாய் மனம் துடிக்க

மலருக்கும் பெண்ணுக்கும் ஓர் உறவிருக்க

காதல் என்னும் காவியமே அங்கு இணைந்து நிற்க

காமன் செய்த வேலை காதல் வலை விரிக்க

இணை சேர்ந்தே கைகளும் மெய் மறக்க

மெய் மறக்க

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen