Sonntag, 25. August 2013


தமிழே என் உயிர்
 

செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

என்று பாடிய பாரதி இன்று இல்லை ஆனால் அவர் சொல்லி சென்ற தமிழோ தமிழ் கவிதைகளோ என்றும் அழிவதில்லை

பால் இனிது தேன் இனிது தேனில் ஊறிய பழம் இனிது என்பர் ஆனால் அதிலும் இனியது தமிழே நம் தமிழே

நாம் கடல் கடந்து போனாலும் நம் மனம் கடந்து போகாதது தமிழே  இயல் இசை நாடகம் என்று தமிழை வளர்தனர் மூவேந்தர்கள் அன்று

கடல் கடந்து சென்று உலகம் பூரா தமிழை வளர்பவர்கள் ஈழ தமிழர்கள் இன்று கொழு கொம்போடே சேர்ந்து வளர்வது கொடி

தமிழர்கள் மனதோடே சேர்ந்து வளர்வது தமிழ்

நாம் எத்தனை பிற மொழிகளை கற்ற போதிலும்  மறக்காமல் இருப்போம் நம் தமிழை தாய் மண்ணில் புரண்டோம் தாய் மடியில் தவழ்ந்தோம் தமிழ் மொழியை  பயின்றோம் அதை தரணி எங்கும் வளர்தோம்  நம் தமிழ் என்றும் அழியாமல் காப்போம்

நம் தாய் நாட்டுக்கு ஈடாய் எந்த நாடும் இல்லை நம் தமிழ் மொழிக்கு இணையாய் எந்த மொழியும் இல்லை நாவில் இனிப்பது தேன் என்றால் நம் காதில் இனிப்பது நம் இனிய தமிழ் அன்றோ

நாம் நம் நாட்டை இழக்கலாம் வீட்டை இழக்கலாம் காசு பணம் யாவும் இழக்கலாம் உறவுகள் யாவும் பிரியலாம்  ஆனால் நாம் கற்ற கல்வியும் நம் இனிய தமிழ் மொழியும் நம்மை தொடர்ந்து வரும் என்பதில் ஐயம் உண்டோ?

எங்கு போனாலும் தொடர்ந்து வரும் வான் நிலவு போலே  நாம் போகும் இடம் எல்லாம் கூட வருவது நம் தமிழே நம் இனிய தமிழே என் உயிர் என்பேன்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen