Samstag, 20. Juli 2013


சிவபுராணத்தின் வழியில்

தம்மை தாம் அறியாத காரணத்தால் தான் மனிதர்கள் மாயையில் கட்டுண்டு துன்பம் என்னும் படு குளியில் போய் விழுகிறார்கள் நமக்கு நம்மை அறிய உதவும் அரு மந்திரம் நமச்சிவாய என்னும்  மந்திரம் என சிவபுராணம் விழக்குகின்றது

சப்த கோடி மந்திரங்களுக்கும் நடுநாயகமாய் விழங்குகிறது நமசிவாய என்னும் பஞ்சாட்சரம் ஆகும் சிவபுராணத்தை மனம் ஒன்றி படித்து அதை முற்றும் முழுதாய் அறிந்து கொண்டால் நம் துன்பம் யாவும் ஆதவனை கண்ட பனி போலே ஒரு நொடியில் மறைந்து போகும்  என சொல்லபடுகிறது

நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஐம் பூதங்களையும் தன்னுள் அடக்கியுள்ள இந்த பஞ்சாட்சரத்தை முறையாக தினம் ஓதி வரில் ஐம் பூதங்களின் வல்லமையும் நாம் அடைய பெற்று உடலும் மனசும் நின்மதியில் திளைக்கும் என்பது சிவன்ரகசியம் என  சிவபுராணத்தில் சொல்லப்படுகிறது

நிலம்

நீர்

சிநெருப்பு

வாகாற்று

ஆகாயம்

இதுவே நமசிவாய என சொல்லப்படுகிறது ஐம் பூதங்களின் வல்லமையை நாம் பெற வேண்டில் தினமும் நமசிவாய என ஓதி வருதல் அவசியமாகும் இதன் சிறப்பை கீழே வரும் பாடல் மேலும் நன்றாக விழக்கி சொல்கின்றுது.

நமசிவாய என்னும் அச்சரம்

சிவன் இருக்கும் அச்சரம்

உபாயம் என்று நம்புதற்க்கு

உண்மையான அச்சரம்

கபாடமுற்ற வாசலை 

கடந்து போன வாயுவை

உபாயமிட்டு அழைக்குமே

சிவாய ஐந்தெழுத்துமே

சிவாய ஐந்தெழுத்திலே

தெளிந்து தேவர் ஆகலாம்

சிவாய ஐந்தெழுத்திலே

தெளிந்து வானம் ஆளலாம்

நாமும் சிவபுராணத்தை தேடி அறிந்து நம் அறிவை பெருக்கி  நம் மனநிலைகளில் ஏற்படுகின்ற குழப்பங்கள் நீங்கி

வழ்கையில் நின்மதி அடைய நமசிவாய என்னும் சொல் நமக்கு துணையாகும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen