Samstag, 20. Juli 2013


சாய்ந்த மரம்
 

கண்ணுக்குள் மணியாய் நீ இருந்தாய்

வானில் நிலவு போல் நீ இருந்தாய்

பூவில் வாசம் போல் தான் இருந்தாய்

என் புன்னகையாக நீ இருந்தாய்

 

எனக்குள்ளே ஓடும் குருதியாய் நீ இருந்தாய்

என் உடலுகுள் உயிராய் நீ இருந்தாய்

நான் சுவாசிக்கும் மூச்சாய் நீ இருந்தாய்

இன்று என்னை ஏனோ தவிக்க விட்டாய்?

 

மண்ணில் விதை போல் காதலில்

பெரிய மரமாய் தழைத்து நின்றேனே

நிழல் தரும் வேளை நீ தறித்தாய்

சாய்ந்த மரமாய் நான் விழுந்தேன்

 

நீல வானில் ஓடும் கரு முகிலாய்

பசும் புல்லில் ஆடும் பனி துளியாய்

உண்மை காதல் சுமந்த என் இதயம்

வலியால் கனக்குது தினம் தினமும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen