Samstag, 9. August 2014


பேரில்லா மனிதன்
 

பேரில்லாது பிறந்த மனிதன்

பூமியிலே பேர் எடுக்க பாடு பட்டு மாய்கிறான்

அவன் வாழும் காலத்தே வானுயர வாழ்ந்தாலும்

அவன் பேரை சொல்லி உலகமே போற்றினாலும்

மனிதன் இறந்த மறு கணமே அவனது பேர் வழங்காமல்

போகிறது அவன் பிணம் என்றுதான் சொல்ல படுகிறன்

பிணம் எப்ப எடுக்குறீங்கள்? என்றுதான் மற்றவர்கள் கேட்பார்கள்

யாரும் அவனது பேரை சொல்லி எப்போ எடுக்கிறீங்கள் என்று கேட்க மாட்டார்கள்

பிறக்கும் போதும் பேர் இல்லை

இறந்த பின்பும் பேர் இல்லை

 

பிறக்கும் போதும் ஓர் அடி

ஏரித்த பின்பும் ஓர் அடி

இதுதான் மானிடர் வாழ்வு இதற்குள் வாழும் போது எத்தனை போராட்டம்?

எத்தனை ஆர்பாட்டம்?

இதனால் தானேஆடாதே ஆடாதே மனிதா ரொம்ப ஆடிபிட்டால் அடங்கிடுவே மனிதாஎன்று பாடியும் வைத்தாங்கள்

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen