Sonntag, 24. August 2014


தூங்கையிலே

தூங்கையிலே வாங்குகிற மூச்சு சுழி மாறி போனாலும் போகும், இன்று இருப்போர் நளை இருப்பது நிச்சயம் இல்லை

ஓடி ஓடி கோடி பணம் சேர்தாலும் மாடி வீடு கட்டினாலும் போகும்  போது நாம் கொண்டு போக எதுவும் இல்லை

என்பதை உணர்ந்து கொண்டால் மனிதர்கள் மனிதர்களாய் வாழ முடியும் இதை உணராத மனிதர்கள் எனது உனது

என்றும் எனது சொந்தம் உனது சொந்தம் என்றும்  உயிரோடு இருக்கும் காலம் வரை அடிபட்டு நின்மதியிழந்தே

வாழுகிறார்கள்.

வாழும் காலம் வரை மனிதன் கானல் நீரை தேடி ஓடும் மானை போலே இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று

அலையும் மனசோடே அலைந்து அலைந்து அழிகின்றான்.

தன் நாவின் ஒரு சுவையை தாண்ட அறியாதார் மலையளவும் காடளவும் தாண்டி அலைகின்றார் என்னே இம் மனிதர் மதிஎன்ற கூற்றுக்கு இணங்க மனிதர்களது மன அடக்கம் இல்லா செயலலேதான் அழிவுகளும் அலைசல்களும் வாழ்வில் அதிகம் ஏற்படுகிறது அதனால்தானே பேராசை பெரும் தரித்திரம் என்று ஒரு பழமொழியும் உண்டு.

நாம் வாழும் காலத்தே நல்லதை உணர்ந்து நன்மைகள் செய்து நல்லபடி வாழ்வோமாகில் நாம் புவிமீதிலே வாழும் போதே சொர்கத்தை காணு முடியும். சொர்கம் நரகம் என்பது எல்லாம் இறப்பின் பின்தான் காண முடியும் என்பதல்ல வாழும்  போது நாம் அடுத்தவரோடே அன்பாக இருப்பதனாலே  இரண்டு பக்கத்திலும் சொர்கம் என்றால் என்ன என்பதை காண முடியும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது மனிதராய் பார்த்து உணராவிட்டால் உண்மைகள் கண்ணுக்கு தெரியாது பேய்களை பார்த்து ஆசை படுபவனுக்கு கடவுள் கண்ணுக்கு தெரியாது காம உணர்வு கொண்டு அலைபவனுக்கோ உண்மை காதல் புரியாது. பூவின் வாசம் தெரியாது காற்றின் உருவமும் கண்ணுக்கு தெரியாது ஆனால் நாம் அதை உணர்வது போலே இறைவன் நம்மோடு  இருப்பதையும்  நாமே அறிந்து கொள்ள வேண்டும்.

கவி மீனா

 

 

 

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen