Freitag, 15. August 2014


படி தாண்டி வருவாயா

கொடி போன்ற இடையினிலே

பூக்கூடை தாங்கி நிற்க்கும்

பொற் சிலையே பேரெழிலே

பிரம்மன் படைத்த அழகோவியமே

என் கருத்தினில் உறைந்தவளே

வானில் வட்ட நிலா வந்ததுபோல்

எதிர் வீட்டு வாசலில் நீ வந்து

எட்டி பார்க்கையிலே 

என் இதயம் அலைகடல் போல் பொங்குதடி

உன் பட்டு மேனி தொட்டு தழுவி நிற்க்கும்

பட்டு சேலைபோல் உன்னை தழுவிடவே

என் கரங்கள் துடிக்குதடி

 மொட்டவிழா மலர் போலே 

பிரியாத உன் இதழில்

என் உயிர் நின்று தவிக்குதடி

 என்னை பித்தனாய் அடிக்குதடி

உன் வட்ட கரு விழிகள் என்னை

வாவென்று அழைக்குதடி

வாசல் படி தாண்டாத பத்தினியாய் நீ இருந்தும்

என்னை உன் வசம் இழுத்தவளே

படி தாண்டி வருவாயா? என் வாசல் வந்து

எனக்கு வாழ்வொன்று தருவாயா?

கவி மீனா

 

 

1 Kommentar:

  1. வணக்கம்
    தங்களின் கவிதை கிடைத்துவிட்டதுநன்றாக உள்ளது
    மிக்க மகிழ்ச்சி போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    இப்படி தலைப்பிடவும்
    தீபாவளித் திருநாளை முன்னிட்டு
    ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
    உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    AntwortenLöschen