Freitag, 15. August 2014


ஓர் மரத்து பறவைகள்

ஓர் மரத்து பறவைகளாய் ஓர் இடத்தில் வாழ்ந்திருந்து

ஒரு மொழியை பேசி வந்த ஈழத்து தமிழ் பறவைகள்

அமைதியை தேடி கூடு விட்டு பறந்ததையா

போகும்  இடம் தெரியாமல் புகலிடம் தேடியே

நாலு திசை எங்கும் பறந்து போனதையா

பல பல மரங்களில் தங்கி விட்ட காரணத்தால்

இவை பல மொழி பறவைகளாய் மாறி போனதையா

குஞ்சு பறவைகளோ சொந்த மொழி தெரியாமல்

தாய் தந்தையை புரிய முடியாமல்

தலை கீழாய் வாழுதையா இது தாங்காத சோகம் ஐயா

அன்னிய தேசத்திலே அகதிகளாய் வாழ்கையிலும்

அகம் பாவம் கொண்டதினால் ஒன்றுக் கொன்று உதவாமல்

தனி தனியே வாழுதையா தனி வழிதான் ஏகுதையா

பணம் தான் பெரிது என்று பாசத்தையே உதறி விட்டு

பாவிகளாய் வாழுதையா நேரம் இன்றி பறக்குதையா

வெளிநாட்டில் ஊறி விட்ட இந்த பறவைகட்க்கோ

சொந்த மொழி இல்லை சொந்த நாடும் இல்லை

சுற்றமும் இல்லை   சூ ழலும் இல்லை உள்ளத்திலும்

உடலிலும் சுகமுமோ இல்லை

எனி நினைத்தாலும் திரும்பாது ஊர் போக முடியாது

தொலைத்து விட்ட வாழ்வு தனை தினம் எண்ணி எண்ணி

துடிக்குதையா இரத்தக் கண்ணீர் வடிக்குதையா

மனம் இரத்தக் கண்ணீர் வடிக்குதையா

கவி மீனா

 

1 Kommentar:

  1. புலம் பெயர் வாழ்வின் ஏக்கத்தை
    னெதைத் தொடும் வரிகளில் தந்துள்ளீர்கள்

    AntwortenLöschen