Sonntag, 2. Juni 2013


பெண் குலமே மாறியதேன்

கருக்கலிலே துயில் எழுந்து

மஞ்சள் பூசி மஞ்சண நீராடி

கார்குழலில் பூ முடித்து

நேர் வகிடுதானெடுத்து நெற்றியிலே பொட்டுமிட்டு

கண்ணுக்கு மை எழுதி

கொலுசு கொஞ்சி வர  பட்டு சேலை சரசரக்க

மின்னல் இடை அசைந்து  மெல்லிடையாள் நடைபயின்று

மல்லிகை வாசம் முந்தி வர மான் விழியாள் பிந்தி வர

கன்னம் சிவந்திருக்க தரை பார்த்து நடந்து வரும்

பெண்குலமே பேரழகு அன்று பெண்களுக்கு

பெருமை தேடி தந்த பெண்குலமே பேரழகு

 


இன்று பெண் குலமே மாறியது

தலை முடியை விரித்து விட்டு பேய் போலே அலைய விட்டு

முகத்தில் மயிர் பிடுங்கி மேக்கப்பை அள்ளி அப்பி

ஸிரிக்கர் பொட்டு ஒட்டி இல்லை ஒட்டாமல் மூழி நெற்றியோடு

லிப்ஸ்ரிக்கை அள்ளி பூசி அதன்மேல் லிப்லோசும் பூசி

நிகங்களில்  நெயில் பொலிஸ் போட்டு அதன் மேலே டிசைனும் போட்டு

களர் களராய் மாலை போட்டு மச்சிங்காக காதில் டொலக் போட்டு

பான்டை கொஞ்சம் கிளிச்சு போட்டு அதையும் இறுக்கவே ரைற்றா போட்டு

கை கீல்ஸ்சில் சூவை போட்டு பெரியவர்களை எடுத்து எறிந்து பேசி விட்டு

கைபையை விசுக்கி தோளில் போட்டு கான் போனில் தான் பேசி கொண்டே

குடு குடு என நடையை போடும் கன்னியர்கள் இன்று கூட்டம்

அவள் பின்னழகை கண்டு பின் தொடரும் ஆண்கள்

கான்போனில் போட்டோ பிடிச்சு பேஸ்புக்கில் போடும் காலம்

பெண்களினால் ஆபாசம்  ஆண்களினால் படு மோசம்

பெண் குலமே மாறியதேன் ஆண் குலமே அலறுவதேன்

கவி மீனா

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen