Dienstag, 11. Juni 2013


சொந்தம் எது?

மதழையாக நான் மண்ணில் வந்த போதிலே

நிலவு வந்து பெண்ணாக

மண்ணில் பிறந்ததாக சொல்லியே

மடியில் வைத்து கொஞ்சியியே

அமுதும் அள்ளி ஊட்டியே

அணைத்து அன்பை காட்டியே

வளர்த்த அன்னை தந்தை சொந்தம்

காதல் என்று சொல்லி கை பிடிக்க ஒருவன்

வந்து நின்ற போதிலே கை விட்டு போனதே

சின்ன செல்ல சொந்தமாய்

பேர் சொல்ல பிள்ளைகள் வந்ததும்

அது தானே என் சொந்தம் என்று

நம்பிக்கையாய் வாழ்ந்த போதிலே

சிறகு முளைத்த பறவைகள்

உலகை கண்டு பறக்கையில்

சோடி புறா ஓடே தூரம் பறந்து செல்கையில்

என் சொந்தம் எது என்று

ஏங்கி நானும் திகைத்தனே

சுற்றி சுற்றி வந்த சொந்த ஊரு மக்கள்

நம் பதவி பணம் அந்தஸ்து கண்டு

சொந்த அலுவல் பார்க்கவும் சுத்தி

கும்மி அடிக்கவும் வந்து போன கூட்டமே

அற்ற குளத்தில் அற நீர் பறவைகள் போல்

சுற்றி பறந்த காக்கைகளும்

ஓவ்வொன்றாய் பறக்கவே

கல்லெடுத்து நானே மிச்ச காக்கைகளை துரத்தியே

தனி வழியே என் வழி என்று  தூரம் விலகி சென்றனே

பட்ட மரம் தனித்து நிற்பது போலே

முதமையிலே நம் சொந்தம் தனிமை தானே

தனிமை தானே சுதந்திரம்

தனிமை தானே மந்திரம்

புவிக்கு வந்த போதும் தனிமை

நாம் போகும் போதும் தனிமை

இடையில் வந்த பந்தங்கள் தருவது என்ன இனிமை

தனிமை தானே சுதந்திரம்

இந்த தரணியிலே மனித வாழ்வின் மந்திரம்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen