Dienstag, 11. Juni 2013


சிட்டுக்குருவி
 

 கீச் கிச் என்று  சத்தமிட்ட படி ஊரில் எங்கள் வீட்டு தோட்டதிலே சுற்றி சுற்றி பறக்கும் வண்ண வண்ண சிட்டு குருவிகளின் அழகே தனி அழகு ஜேர்மனியிலும் எங்கள் வீட்டில் இவை வந்து போகும் போது நான் அவற்றை பார்த்து ரசிபதற்காக சத்தமின்றி அமைதியாக வெளியில் இருந்து பார்த்து கொண்டே இருப்பேன் ஆனால் ஊரில் கண்ட சிட்டுக்குருவிகள் அழகு மிகுந்தவை பல நிறங்களிலும்  உள்ளன இங்கு ஒரு சில நிற குருவிகளே உண்டு ஆண்டவன் படைபின் திறமையை எண்ணி நான் ஒவ்வொரு தடவையும்  இச் சின்னம் சிறிய அழகிய குருவிகளை காணும் போதும்  வியந்துள்ளேன் இவைகள் தோட்டத்து மரங்களில் பூத்திருக்கும் பூக்களில் பறந்த படியே தேன் குடிக்கும் அழகே அழகு

தோற்றத்தில் சிறியவையானாலும் இந்த குருவிகள்  மிக்க சுறு சுறுப்புள்ள குருவிகள் சோர்ந்து போய் ஒரு நிமிடம் தன்னும் இளைபாறியதை நான் காணவில்லை தூங்கும் நேரங்களில் அவர்களது கூடுகளில் இளைபாறும் இந்த அழகிய நம் கண்கணை கவரும் குருவிகள் அனேகமாக ஆதி காலங்களில் கூரை வீடுகளிலும் பத்திகளிலும் கூடுகளை கட்டி மனிதர்களோடே சேர்ந்து வாழ்ந்தாக தெரிய வருகிறது

இன்று கூரை வீடுகளும் பத்திகளும் குறைந்து கல் வீடுகளும் ஓட்டு வீடுகளும் பெரும் கட்டிடங்களும் உருவாகி விட்டதாலே இந்த குருவிகள் தங்கள் கூடுகளை கட்ட முடியாமலும் இனத்தை பெருக்க முடியாமலும் பெருமளவில் அளிந்து கொண்டு போகின்றுன என்று அறிய வருகிறது
 

கண்ணுக்கு  பார்பதற்க்கு அழகான இந்த குருவிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத போதும் அதன் இனம் அழிந்து போவது கவலை தரும் விடயமே இந்த பூமியில் இயற்கையின் அழகை எடுத்து சொல்வது ஓடும் நதிகளும் நல்ல அழகிய மரங்களும் அழகிய பறவைகளும்தானே? 

இந்த அழகிய வண்ணக்குருவிகள் தானியங்களை உண்ணும்  தானியங்கள் கிடைக்காத காலங்களில் பழங் களை உண்டு வாழும்  இரை தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் குப்பைகளில் உள்ள புழுக்களையும்  வண்டுகளையும் உண்ண தயங்காது  இந்தியா இலங்கை முழுவதும் காணப்படும் சிட்டுக்குருவியினம் கிராமப்புறங்களில் அதிகம் வசிக்கும்  தானியங்கள் தாராளமாக அங்கு கிடைப்பதே இதற்கு காரணம்  பெரும்பாலான பறவையினங்கள் மனிதர்களிடம் இருந்து விலகியே வாழும் தன்மை கொண்டவை  ஆனால் சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் இணைந்த வாழ்க்கை முறையை கொண்டவை  மரங்கள்  பாறை இடுக்குகளில் கூடுகளை கட்டாமல்  மனிதர்கள் வாழும் வீடுகளில் தான் அவை கூடு கட்டி வாழ்கின்றன

 இதனாலேயே இவை களுக்கு ஆங்கிலத்தில் ஹவுஸ் ஸ்பாரோ ( House Sparrow ) என்று பெயரிடப் பட்டுள்ளது  மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காத காரணத்தால் இவை பெரிதும் விரும்பப் படுகின்றன  வீடுகளில் குருவிகள் கூடு கட்டினால் அது செல்வத்தையும் சந்ததி விருத்தியையும் அளிக்கும் என்றும்  எனவே குருவி கூட்டை கலைக்கக் கூடாது என்றும் ஒரு நம்பிக்கை இன்றைக்கும் கிராமப்புறங்களில் நிலவுகிறது  இப்பறவைகள்  கூடுகளை முழுக்க முழுக்க, மெத்தென்று இருக்கும் வைக்கோலை கொண்டே கட்டுகின்றன

  இவற்றின் இறைச்சியை உண்டால் இளமை திரும்பும் வீரியம் கிடைக்கும் என்று சிலர் கருதுவதால் மனிதர்களும் பல நேரங்களில் சிட்டுக் குருவி களை அளிக்கிறார்களோ தெரியவில்லை சிட்டுக்குருவி லேகியம் என்று ஒரு லேகியத்துக்கு இந்தியாவிலே பெயரும் வைத்தார்கள் காரணம் அதை உண்பவர்கள் சிட்டுகுருவி போலே சுறு சுறுபாக இருப்பார்கள் என்பதாலோ?

 ஒரு காலத்தில்,கீச் கீச்என்ற சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஏராளமான சிட்டுக் குருவிகள் அலைந்து கொண்டிருந்தன விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் இரை தேடுவதை காண முடிந்தது. சமீப காலமாக சிட்டுக் குருவிகளை காண்பது அரிதாக உள்ளது  நகரங்களில் அவற்றின் நடமாட்டமே முற்றிலுமாக ஒழிந்து போய் விட்டது  மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளே சிட்டுக்குருவிகள் இனம் அழிவதற்கு காரணம் என்று கூறப்பட்டது  ஆனால் சிட்டுக் குருவிகள் அழிய மொபைல்போன் டவர்கள் ஒரு சதவீதம் என்ற அளவில் தான் காரணமாக இருக் கின்றன என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது

மனிதர்கள் நினைத்தால் பூங்கா அல்லது பழ மரங்கள் உள்ள இடங்களில் இந்த சிறு குருவிகளுக்கான கூட்டை அமைத்து இந்த குருவிகள் பெருகவும் சுகமாக வாழவும் இயற்கையின் அழகை பேணவும் செய்யலாம்தானே? சின்னம் சிறிய பறவைளிலும் அழகை அள்ளி வைத்த இறைவன் அவை பாதகாப்பாக வாழ்வதற்க்கு ஒரு வழியை காட்ட மாட்டானா?

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen