Dienstag, 29. Januar 2013


மனிதன் மாறி விட்டான்

காட்டிலே வாழ்ந்த மனிதன்

ஒரு காட்டிலே வெறும் கொட்டிலிலே

வாழ்ந்த மனிதன்

இன்று  கல் வீட்டிலே வாழுகின்றான்

மாடி வீட்டிலும் வாழுகின்றான்

ஏட்டிலே எழுத பழகி அவன்

நாட்டிலே வாழும் போதும்

ஒரு நோட்டிலே தன் உயிரை வைத்தான்

அந்த பண நோட்டிலே தன் உயிரை வைத்தான்

அவன் நோட்டிலே உயிரை வைத்தான்

 
மாட்டிலே பாலை கறந்தே

ஆட்டிலே விருந்தும் வைத்தே

களி ஆட்டத்திலே  நிலையை மறந்தே

சேற்றிலே விழுந்தும் எழும்பி

றோட்டிலே அலைந்தும் திரிந்தும்

தன் பாட்டிலே வாழும்  சில மனிதன்

தன் வாழ்விலே விதியை மறந்தான்

தான் வந்த பாதையை கொஞ்சம் மறந்தான்

பாதையை கொஞ்சம் மறந்தான்

 
நாட்டிலே அவன் வாழ்ந்த போதும்

அவன் காட்டிலே இருந்த பண்பை

மரத்திலே தத்தி தாவும் பண்பை

மாற்றவே மறந்து போனான்

நாடு விட்டு நாடுகள் தாவியும்

அவன் தன் நின்மதியை தொலைத்தே

விட்டான்

வாழ்வில் நின்மதியை தொலைத்தே
விட்டான்

கவி மீனா

 

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen