Mittwoch, 16. Januar 2013


மொளனமாக இருப்பதெல்லாம்

கோழி ஒரு முட்டை இட்டு  கொக்கரித்து ஊரை கூட்டும்

ஆமை அது ஆயிரம் முட்டை இட்டும் அமைதியாய் படுத்திருக்கும்

மொளனமாய் இருப்பதெல்லாம் முட்டாள்கள் செயல்கள் அல்ல

ஆயிரம் பூப் பூக்கும் மரம் செடிகள் அசைவதில்லை அழுவதில்லை

பல் ஆயிரம் கனிகள் தந்தும் அவை கூவி கூவி சொல்வதில்லை

வாழை மரம் எமக்காக நல்ல குலை தள்ளி விழுந்தாலும்

அதனை வெட்டி எறிகையிலும் தன் தியாகத்தை சொல்வதில்லை

நம் தாகம் தீர இளநீரை தருகின்ற தென்னை கூட

ஒரு நாளும் தற் பெருமை  பேசி கொள்வதில்லை

இனிக்கின்ற சுவையான பாலை தரும் பசு கூட

ஒரு நாளும் கொம்பால் இடித்து முட்டுவதில்லை

நவரத்தினத்தை  சொத்தாய் தலையில் கொண்ட நாகமும்

நல்லவர்களை அடிக்காமல் தீண்டுவதில்லை

ஒளி வீசும் வெண் முத்தை தருகின்ற சிப்பியும்

மனிதர் கையால் சாகையிலும் மொளனத்தை விடவில்லை

முத்தான சிந்தனைகளை சொத்தாக கொண்டவரே

என்றும் மொளனமாய் இருந்திடுவர்

அரை குறை அறிவுள்ள மனிதர்களேஅறியாமை காரணத்தால்

ஆகாயம் முட்ட துள்ளி  குதித்திடுவர்

ஊரை கூட்டி பெரியவர் போல் பித்தலாட்டம் செய்திடுவர்

பேர் எடுக்க நினைப்பவரே பேசி பேசி கிளித்திடுவர்

மொளனமாய் இருப்பதெல்லாம் நிறை குடம் போல்

தளம்பாத நிதானம் உள்ளவர்கள் நெஞ்சமதே

நிதானம் உள்ளவர்கள் நெஞ்சமதே

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen