Montag, 4. Februar 2013


பிச்சை வேண்டாம்

பிச்சை எடுக்க போற இடத்தில் நாய் துரத்தி வந்தால் பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ என்று ஓடுவது போலேதான்

சில தமிழரை கண்டால் நாமும் ஓட வேண்டி இருக்கிறது பட்டது போதும் தமிழனாலே என்பதுதான் உண்மையாச்சு

அகதிகளாய் வெளிநாடுகள் வந்தோம் இங்கு கூட  நம் இனம் என்று ஒன்று கூடி வாழ முடியுதா நம்மாலே?

இல்லையே தமிழருக்கு ஒற்றுமையாக வாழுகிற குணம் இரத்தத்திலே இல்லை என்பதுதான் தெரிந்து போன விடயம் ஆச்சு

வெள்ளைகாரன் சொல்லுகிறான் உங்கள் இனம் உங்க ஊர் ஆட்கள் எல்லாரும் இலங்கை தமிழர் என்று ஆனால்

நம்ம இனம் என்று நாம் ஒன்றாய் இணைந்து  ஒரு காரியம் தன்னும் செய்யவோ இல்லை அன்பாய் பழகவோ முடியல்லை முடியல்லை

எத்தனை பேர் நீங்கள் சண்டை சச்சரவு இன்றி இருக்கிற இடத்திலே ஒற்றுமையாய் வாழுகிறீர்கள் என்று எண்ணி பாருங்கள்

 அன்பு பாசம் நேர்மை கடமை கண்ணியம் கட்டுபாடு என்பது எல்லாம் தமிழர் பண்பாடு என்று படித்தும் பாடல்களில் கேட்டும் இருக்கின்றோம் ஆனால் அதை நம் கண்ணாலே காண்பதோ அரிது அரிது இன்று

ஒருவர் கஸ்டப்பட்டால் ஓடி உதவ கரங்கள் இல்லை அவனை ஏறி மிதிக்க கால்கள் உண்டு ஒருவன் நல்லதுகள் செய்தால் அவனை புகழ்ந்து பேச வாய்கள் இல்லை அவனில் உள்ள சின்ன குறைகளை கூட இகழ்ந்து பேச ஓடி வருவோர் பலர் உண்டு அன்பே சிவம் அன்பே சிவம் என்பதை திரையில் கண்டேன்  இங்கு வம்பே பேசி வம்பை வழர்க்கும் மனிதரையே வாழ்வில் கண்டேன்

சிறு எறும்பு கூட சேர்ந்தே வாழும் சிறு பறவை கூட சேர்ந்தே பறக்கும் காகம் கூட கொடுத்தே உண்ணும்  காட்டில் வாழும் மிருகங்கள் கூட கூட்டம் கூட்டமாய் திரியும் ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் சுயநலமாய் வாழுகின்றான்

மனிதன் என்பவன் கூடி மகிழ்வான் பின் அந்த கூட்டையே கலைத்திடுவான்  அடுத்தவனிடம் செல்வமும் செல்வாக்கும் இருந்துவிட்டால் ஓடி போய் நன்மைகள் பெற்றிடுவான் கொண்டாடம் போட்டு கும்மியும் அடித்திடுவான் ஆனால் சிந்தனையாலே நண்பனை எப்படி விழுத்தலாம் என்பதிலேயே குறியாக இருந்திடுவான் உண்மை அன்பை எங்கும் காணலையே உண்மை நட்பை இதுவரை காணவில்லையே உண்மை காதலை கூட இன்னும் காணவில்லையே  சுய நலத்தோடே சேர்ந்ததே தமிழனின் நட்ப்பு காதல் யாவும்

இங்கே வந்த தமிழர்களோடே நான் பழகி பட்டது போதும் என்று நான் ஓடுகிறேன் ஐயா ஓட்டம் ஓடி ஓடி மூச்சும் இரைக்குது எங்கே போனாலும் நம் தமிழனின் போக்கும் இடிக்குது பிச்சை வேணாம் நாயை பிடியுங்கோ என்பதே என் முடிவாச்சு
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen