Freitag, 11. Januar 2013


முனி உலா வரும்

நாவல் மரத்தில் காளி என்பர்

நடு நிசியில் கொள்ளி வாய் பிசாசு என்பர்

புளிய மரத்தில் வைரவரும் காட்டுக்குள்ளே மோகினியும்

இரவு வந்தால் அன்று ஈழத்தில்  ஒரே பேய் பயம்

எந்த இருட்டை பார்த்தாலும் பேய் வரும் என்று பயம்

ஒருத்தரும் இரவில் தெருவில் சுற்றுவதில்லை பாரும்

காரணம் முனியப்பர் வருவார் என்று சொல்லுவினம் கேளும்

அத்தனை பேய்களும் இங்கும் உலா வருகுது பாரும்

தினம் இரவு பகலாய் அவை உலா வருகுது பாரும்

இங்கே தினமும் முனியப்பர் உலா வருவார்

பனி காலத்திலும் முனியப்பர் உலா வருவார்

பறட்டை தலையும் அதிலே செம்பட்டை மயிரும்

கழுத்து நிறைய தடித்த வெள்ளி சங்கிலியும்

காதிலே கடுக்கனும் கையிலே நெருப்பும் வாயிலே புகையும்

நடந்தாலும்  இருந்தாலும் கை தொலை பேசி

மணியும் அடிக்க  கடும் இருட்டிலும்  குளிரிலும்

இந்த முனி உலா வருவார்

சுத்தி வர கொள்ளி வாய் பேய்களும்  கொத்தி பிசாசுகளும்

சில சமயம் மோகினி பேய்களும் இரவிலும்

இருட்டிலும் குளிரிலும் பனியிலும்

கும்மாளமாய் உலாவருகுது  தினம் பாரும்

முனிகள் உலா வருகுது பாரும்

கையிலே புட்டியும் வாயிலே சீட்டியும்

பக்கத்தில் குட்டியும் கூட வரும் பாரும்

இது ஐரோப்பாவுக்கு வந்து இறங்கிய முனிகள் பாரும்

பாதை மாறி போன தமிழன் முனிகளாய்

மாறிய கதைகள் தான் இது கேளும்

ஐரோப்பாவிலும் முனிகள் வந்த கதையை கேளும்

கொஞ்சம்  நின்று  தான் கேளும்

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen