Mittwoch, 16. Januar 2013


வாழ்கை பாதை

மனித வாழ்கை பாதை ஆரம்பிப்பது தாயின் கருவறையில் எங்கே போய் அது முடியும் என்பது கடைசி வரை யாருக்கும் தெரியாது சாலைகள் கூட நெளிந்து வளைந்து மாறி போனாலும் ஒரு இடத்தை போய் சேரும் என்பதும் அந்த இடத்தின் பேரும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் இந்த மனித வாழ்க்கை பாதை மட்டும் எங்கே போகுது எப்படி முடியும் என்பது மட்டும் புரிவதில்லை  கடலில் உடைந்த கப்பல் போலே சிதறுண்டு உருண்டு திசைமாறி இடம்மாறி தடம்மாறி மொழிமாறி மதம்மாறி எப்படி எப்படியோ போய் கொண்டுதான் மனித வாழ்கை இருக்கிறது எப்படி எங்கே முடியும் என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை அதிலும் இன்று இலங்கை தமிழர் ஒவ்வொருத்தர் வாழ்கை பாதையும் திசைமாறி தான் போகிறது அதிலே ஒரு சிலர் வாழ்கை மட்டும் தடம் பதித்து செல்கிறது

ஒரு மரத்தில் இருந்து பரவுகின்ற விதைகள் பல வழிகளில் பல இடங்களை போய் சேந்தாலும் அதில் ஒரு சில விதைகள்தான் நல்ல பசளை உள்ள நிலத்தை சேர்ந்து முளைத்து மரமாக வளர்ந்து மீண்டும் மனிதர்களுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ பிரயோசனமாய் இருக்கின்றது அதே போல திசைமாறி காற்றில் அடியுண்டு ஓடும் சருகுகள் போலே எட்டு திக்கும் ஓடி போன தமிழர் வாழ்வு எப்படி ஆகி போச்சு என்பதை ஒவ்வொருத்தர் வாயால் கேட்டால்தான் அறிய முடியும்

வெளி நாடு வந்த பல தமிழர்கள் மனம்மாறி குணம்மாறி மதம்மாறி  கலாச்சாரம்மாறி தான் வாழ்கின்றார்கள்  என்னதான் பணம் பொருள் சேர்க முடிந்தாலும் நின்மதியை சேர்த்த தமிழர் யார் உள்ளார்? வருங்கால சந்ததிகளும் தமிழை மறந்து கலாச்சாரம் மறந்து கலப்பு மணம் புரிந்து தமிழர் என்ற தனி தன்மை அழிந்துதான் போகிறார்கள்

ஆதி மனிதர்கள் அன்று வீடு காசு பொருள் என்று எதுவும்  இல்லாத போதும் காட்டிலே நின்மதியாக சுகமாக  வாழ்ந்து இருந்தார்கள் ஆனால் இன்றோ நாகரீகம் விஞ்ஞானம் என்று உலகம் வளர்ச்சி அடைந்து எல்லா வசதிகளும் மனிதர்களுக்கு கையிலே கிடைத்த போதும் நின்மதி என்பது இல்லாமல்தான்  நம்ம சனம் வாழுகிறார்கள்

வெளிநாட்டிலே வாழும் தமிழர்கள் பலரது வீட்டிலே எங்கே திரும்பினாலும் அசையா பொருட்களான விலையுயர்ந்த அலங்கார பொருட்கள் கண்களை கவரும் ஆனால் அசையும் பொருளான சொந்த உறவுகள் அவர்களை விட்டு  வெகு தூரம் போய் இருக்கும் வங்கி கணக்கிலே காசு சேருவது போலே  அவர்கள் உடம்பிலும் நோய்கள் சேர்ந்திருக்கும் ஓடி திரிய பென்ஸ் கார் இருக்கும் ஆனால் அதில் சேர்ந்து போக பெத்த பிள்ளைகள் கூட  அருகில் இருக்க மாட்டார்கள்  வீட்டில் பட்டு சேலை குவித்திருக்கும் தங்க நகை நிரம்பி இருக்கும் ஆனால் நின்மதியில்லாமே மனசு வேதனையில் அலைபாய்திருக்கும் இதுதான் வெளிநாட்டில் தமிழன் வாழ்கை

எங்களுக்கு என்ன  நாம் நினைத்தது எல்லாம் சாதித்து விட்டம் என சிலர் இறுமாப்போடு வாழும் போது கூட திடீரென அவர்கள் வாழ்கை பாதை திசை மாறலாம் இல்லை மரணம் கூட சம்பவிக்கலாம் இன்று இருக்கும் நிலமை நாளை இல்லை என்பதே உண்மை  நாம் மற்றவர்கள் போலே இல்லை நாங்கள் எல்லாம் சரியாக செய்கிறோம் திருப்தியாக வாழுகிறோம் என்று கர்வம் கொள்ள கூடாது ஏணியில் ஏறி உயர போனாலும் ஒரு  நாள் இறங்கி வரத்தான் வேணும்

நாம் அப்படி பண்ண மாட்டம் இப்படி வாழ மாட்டம் என்று மார்பு தட்டி பேசுவோர் வாழ்கையும் ஒரு நொடியில்  ஆட்டம் காணலாம் புயல் காற்று அடிக்கும் போது பச்சை மரங்களும் சாய்வதில்லையா? அதே போல்தான் இன்று இருக்கும் நிலமை யாருக்கும் என்றும் இருக்கும் என்பது நிச்சயம் இல்லை  இந்த மனித வாழ்கை பாதை எங்கே போகிறது எப்படி முடியும் என்பதை  அறிய இப் புவியில் யார் உள்ளார்?

கவி மீனா

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen