Samstag, 27. April 2024

ஆண்டவன் இருப்பதை

பிறந்தாய் வளர்ந்தாய்

பெத்தாயின் மடியில் தவழ்ந்தாய்

நடை பயின்று ஓடி ஓடி திரிந்தாய்

யார் சொல்லும் கேட்காது

அடங்கா பிடாரியாய் ஆனாய்

ஆணவம் கொண்டே அலைந்தாய்

ஒரு பேதை பெண்ணை கண்டாய்

சித்தம் தடுமாறினாய்

அவளை சிக்க வைக்க

பல திட்டங்கள் தீட்டினாய்

நல்லவன் போலே நடித்தாய்

நயவஞ்சகமாய்  அவளை பிடித்தாய்

தாலி கட்டி முடிந்த பின்னே

அதிகாரம் காட்டினாய் அவளை

அடிமை போலே ஆக்கினாய்

இன்னும்  பல அடிமைகளை தேடினாய்

அவர்களுக்கும்  நீயே

கோமான் என நினைத்தாய்

 

ஆணவத்தில் ஆடினாய்

அகங்காரம் கொண்டே அவதியுற்றாய்

உன் குறை தெரியாமல் கூத்தடித்தாய்

 விட்டிலே  சட்டி முட்ட வாசமிகு கறியருந்தாலும்

அடுத்தவன் சட்டியை எட்டி பார்த்தாய்

கண்ணுக்கு அழகாக மனைவி இருந்தும்

அடுத்தவன் பெண்டாட்டிகளோடு

பொழுதை போக்கினாய்

குடித்தாயய் வெறித்தாய்

கொடுரமாக பேசினாய்

 வானத்தில் பறக்கும் காற்றாடி போலே

 குத்துக்கரணமும் அடித்தாய்

ஆண்டவன் இருப்பதை மறந்தாய்

அதனால் நுலறுந்த பட்டமாய் துலைந்தாய்

அடைகலம் புகுந்த பெண்ணை

அவணியிலே அவதியுற வைத்தாய்

இன்று வயோதிப மடமே

அடைகலமாய் கொண்டாய்

ஆண்டவன் தீர்பு இதுவே

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen