Sonntag, 18. Februar 2024

 நாவிலே தேனை பூசி

கை தூக்கி விடுபவன் நண்பன்

காலை வாரி விடுபவன் துரோகி

அணைத்து வாழ்பவன் உறவு

தூற்றி செல்பவன் எதிரி


இத்தனை பேரும் நம்மை சுற்றி

பழகி பார்த்தால்தான் புரிந்து விடும்

நிலையற்ற மானிட வாழ்வினிலே

நிலைத்து நிற்பவர் எவரும் இல்லை

காசும் காமமும் தேவை என்று

உலக வாழ்கை ஓடுதடா

ஆளை ஆளு ஏமாற்றி வாழ்வது சுலபமடா

ஏமாந்து நிற்பது பாவமடா

பாசம் அன்பு என்பதெல்லாம்

நாவிலே தேனை பூசி

பின் நயவஞ்சகமாய் முதுகிலை

குத்தும் வேலையடா

 

வந்தோம்  போனோம் என்றிருந்தால்

வலிகள் இல்லாமல் வாழ்ந்திருப்போம்

வலிய வலிய தேடி பழகி

மனசில் சுமைகளை கூட்டாமல்

குப்பை என்றால் கூட்டி தள்ளி

வீட்டையும் மனசையும்

 சுத்தமாக வைத்திடுவோம்

லேசான மனசுக்கு வலியும் இல்லை

இல்லாத உறவுக்காய் கவலை இல்லை

இப்படி வாழ பழகி விட்டால்

துன்பங்கள் தரும் நட்புகள் உறவுகள் கூட

தூசியை தட்டி விடுவது போலே

ஒட்டாமல் பறந்து போய் விடும்

மனசுக்கும் அமைதி கிட்டிவிடும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen