Sonntag, 21. Januar 2024

 

படிப்பினையாகும்

கரும்பு கூட அடிவரை இனிக்காது

வாழ்க்கையும் இறுதி வரை சுவைக்காது

பசியிருக்கும் வரைதான் உணவும் ருசிக்கும்

பருக பருக பாலும் கசக்கும்

பழக பழக நட்பும் வெறுக்கும்

கை கோர்த்து நடந்த உறவும் கைகலப்பில் பிரியும்

ஒரு தட்டில் உண்ட உறவும் ஒட்டாமல் போகும்

 

நீ பாதி நான் பாதி என்று சொன்ன  காதலும்

நீ யாரோ நான் யாரோ என்று மாறி போகும்

உடல் உரசி கண்ட காமமும் முதுமை வர காணாமல் போகும்

தென்றலாய் வீசிய காற்றே புயலாக அடிக்கும்

தூரிய சாரல் பெரு வெள்ள பெருக்காய் ஓடும்

காலங்கள் ஓட காதலும் ஓடும்

மனங்களும் குணங்களும் மாற

மனிதர் வாழ்க்கையும் ஒரு படிப்பினையாகும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen