Samstag, 22. Oktober 2022

 வாங்கி வந்த வரம்

குப்பைகளை கூட்டி எறியதான் வேணும்

வேண்டாத உறவுகளை தூக்கி வீசதான் வேணும்

இலைகளும் கருகி விழுவது போலே

உறவுகளும் குறுகி பிரியதானே செய்யுது

காலங்கள் மாறுவது போலேதான்

மனித மனங்களும் காலத்துக்கு ஏற்றாற் போல் மாறுது

தன்னைதானே உணராதவன் மனிதனே இல்லை

தலைக்கனம் பிடித்தவனையும் போதைக்கு அடிமையானவனையும்

கடைசிவரை திருத்தவே முடியாது

திருத்த போனால் கழுதைக்கு கிட்ட போய்

உதை வாங்கின கதைதான்



அவனவன் தலைவிதியை அவனே தேடுகிறான்

போதைக்கு அடிமையானவன் கடைசி வரைக்கும்

மீளமுடியாது  உளருகிறான்

போத்தில் மாறினாலும் போதை மாறுவதில்லை

போதை வஸ்த்து புத்தியை கெடுக்குது

வார்தைகளை உளற வைக்குது

உலகமே இருட்டில்  பகலும் இரவும் ஒன்றாகி

படுக்கையிலே கிடக்க வைக்குது

சுற்றமும் உறவும்  கூட இருப்பவரையும்

அவனுக்கு புரிவதே இல்லை

மதிப்பும் மரியாதையும் நடக்கிற முறையில்தான்

அவனவனுக்கு கிடைக்கும்

வார்தைகள் சரியில்லாட்டி நட்புகளும் உறவுகளும் நிலைபதில்லை

வாழ்க்கையும் நின்மதியாய் அமைவதில்லை

இதைதான் சொல்வார்கள் வாங்கி வந்த வரம் என்று

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen