Sonntag, 2. Oktober 2022

 

புட்டு 

அரிசியும் தேங்காயும் உள்ள ஆசியா நாடுகளில் புட்டு அவிக்கிறார்கள்

ஆனால் யாழ்பாணத்து தமிழர்கள்தான் அரிசியை மாவாக்கி வறுத்த மாவில்

தேங்காய்


பூ கலந்து புட்டு அவிக்கிறார்கள்

அதை விட பால்புட்டு சக்கரைபுட்டு புட்டுபிரியாணி என ஒரே அசத்தல்!

கேரளா மக்கள் மா புட்டு அவித்த பின் தேங்காய் பால் விட்டு

அல்லது கடலை கறியோடு  சாப்பிடுறார்கள்

பிலிபைன் மக்கள் கூடுதலாக களிபச்சை அரிசியை வறுக்காமல்

உருண்டை பிடித்து அவிக்கிறார்களோ? தெரியலை

எதுவானாலும் நம்ம ஊரு புட்டு சுவையோ சுவைதான்!

அம்மா முங்கில் குழலில் அவித்த அரிசிமா குழல் புட்டு சும்மாவே அள்ளி அள்ளி சாப்பிடலாம் காரணம் உடன் இடித்து வறுத்த அரிசி மாவுக்கு ஒரு தனி சுவை

அதை விட வளவிலை இருக்கிற தென்ன மரத்து தேங்காய்களை உடனே துருவி போட்டால் அதன் வாசமும் சுவையும் தனி ரகம்

எனக்கு பிடித்த உணவு குழல் புட்டுதான் சில சமயம் நானும் இங்கு புட்டு அவிபதுண்டு ஆனால் ஊரிலை அம்மா செய்த புட்டின் சுவை வராது காரணம் இங்கு உடன் தேங்காய் பூவும் இல்லை கைகுத்தரிசி மாவும் கிடைபதில்லை அத்துடன் முங்கில் குழலும் இல்லை அலுமீனயம் குழலில் அவிக்கிற புட்டு அதிக சுவையை தராது

ஏதோ அவலை நினைத்து உரலை இடித்த கதையாக நாம இங்கு சமைக்கிறம் ஆனாலும் பிள்ளைகளோ விருந்தினரோ எனது சமையல் நல்லாக சுவையாக இருக்குது என்று சொல்வார்கள் காரணம்  ஊரிலை வாழ்ந்த காலத்தே எங்க வீட்டு புட்டின் சுவை அவர்களுக்கு தெரியாது பாருங்க!

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen