Mittwoch, 10. November 2021

 

சீழ் பிடித்தசிந்தனை 

டண்டநக்கா டண்டநக்கா

ஒரு தண்ட சோறு கிங்கு

புட்டுக்கிட்டு போட்டாரு இன்று

இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான்

என்று ஆனதுதான் வாழ்க்கை


இந்த மனித வாழ்க்கை

உட்கார்ந்த இடத்தில் இருந்தாரு

ஓடி ஓடி ஒழிந்தாரு

ஒட்டாண்டியா வாழ்ந்தாரு

காலன் வந்த போது வகையாகதான்

 மாட்டிகிட்டாரு

 

சுடுகாட்டில் பிணம் எரிந்த தீயும்

இன்னும் ஆறலை

கோட்டான் ஒன்று அலறுது

அவல சத்தம் கேட்குது

நாயும் நரியும் ஊளையிட்டு

ஓடி ஓடி திரியுது

கழுகும் காகமும் அடுத்தவன் சொத்தை

பிச்சு தின்ன சுற்றி சுற்றி பறக்குது

 

என்டை சொத்து என்டை சொத்து என்று

அடிபடுவோர்தான் எத்தனை

இன்றிருப்போர் நாளை இல்லை

இதுதானே உண்மை

சீழ் வடியும் உடம்புக்குள்ளே

சில மனிதருக்கு எத்தனை

சீழ் பிடித்தசிந்தனை

 

என்டை என்டை என்று சொன்னவர்கள்

ஒரு பிடி மண்ணை கூட

அள்ளி செல்ல முடிந்ததா?

கண்ணை மூடி விட்டாலே

காட்சி கூட தெரியுதா?

இந்த உலக காட்சி கூட தெரியுதா?

 கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen